நூலகர் செய்தி மடல் 1
ஆசிரியர் உரை: தமிழகத்தில் உள்ள அரசுத் துறை / பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் தங்கள் துறைகளின் சேவைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல பத்திரிகைகள் வெளியிடுகின்றன. பொது நூலக இயக்ககமும் பொது நூலக செய்தி மடல் என்னும் மாத இதழை பல ஆண்டுகளாக நடத்தி வந்தது. அந்த மாத இதழ் கடந்த 10 ஆண்டுகளாக வெளிவருவதில்லை. நூலகத் துறையின் திட்டங்கள் , சாதனைகள் , அரசாணைகள் , நூலகர்களின் சேவைகள் முதலானவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் பொது நூலக செய்தி மடலின் பங்கு தனித்தன்மையுடன் இருந்தது. சில காரணங்களால் அந்த இதழ் நின்று போய்விட்டது. நின்று போன அச்சு ஊடகத்தை மீண்டும் கொண்டு வருவதில் நிர்வாக சிக்கல்கள் இருப்பது உண்மை. ஆனால் , தனிச்சுற்றாக வெளியிடுவதில் சிக்கல் இல்லை. நின்று போன பொது நூலக செய்தி மடல் மீண்டும் வெளியிடப்பட முடியும் என்று நம்புகிறேன். நூலகர்கள் பலரும் தங்கள் அன்றாட பணிகளுக்கு இடையே , தங்கள் நூலகங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்சிகள் நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள வாசகர்களுக்கும் , மாணவர்களுக்கும் , பொதுமக்களுக்கும் தூண்டுகோலாக ...