நூலகர் செய்தி மடல் 18
ஆசிரியர் உரை: வணக்கம். நூலக நண்பர்கள் அனைவருக்கும் நூலகர் தின - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நூலகர் தினம் நூலகர்கள் ஒன்றிணைந்து கொண்டாடப்பட வேண்டிய நாள். இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு அந்த மாவட்ட நூலக அலுவலர் திரு. அ. பெ. சிவக்குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். விழாவில் கலந்து கொள்ளும் நூலகர்களுக்கு பயணப்படி வழங்குவது, வழங்காமல் போவது அந்தந்த மாவட்ட நிதி நிலைமையைப் பொறுத்தது. பயணப்படி வழங்கவில்லை என்பதற்காக நூலகர்கள் கூட்டத்திற்கு வராமல் போவதில்லை. இதையே ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு மற்ற மாவட்ட நூலக அலுவலர்கள் அடுத்த ஆண்டு செய்வார்கள் என்று நம்புகிறேன். அடுத்து, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் விழாக்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பாக நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நற்சா...