நூலகர் செய்தி மடல் 18
ஆசிரியர் உரை:
வணக்கம்.
நூலக நண்பர்கள் அனைவருக்கும் நூலகர் தின - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
நூலகர் தினம் நூலகர்கள் ஒன்றிணைந்து கொண்டாடப்பட வேண்டிய நாள். இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு அந்த மாவட்ட நூலக அலுவலர் திரு. அ. பெ. சிவக்குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். விழாவில் கலந்து கொள்ளும் நூலகர்களுக்கு பயணப்படி வழங்குவது, வழங்காமல் போவது அந்தந்த மாவட்ட நிதி நிலைமையைப் பொறுத்தது. பயணப்படி வழங்கவில்லை என்பதற்காக நூலகர்கள் கூட்டத்திற்கு வராமல் போவதில்லை. இதையே ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு மற்ற மாவட்ட நூலக அலுவலர்கள் அடுத்த ஆண்டு செய்வார்கள் என்று நம்புகிறேன்.
அடுத்து, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் விழாக்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பாக நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சுதந்திர நாள் விழாவில் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நூலகர்களுக்கு நற்சான்றிதழ் கிடைக்க மாவட்ட நூலக அலுவலர்கள் பரிந்துரை செய்திருப்பது பாராட்டுக்கு உரியது. இதுபோன்று, இனிவரும் சுதந்திர தின, குடியரசு தின விழாக்களில் நூலகர்களுக்கும் மாவட்ட ஆட்சியரின் நற்சான்றிதழ்கள் கிடைக்க அந்தந்த மாவட்ட நூலக அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட நூலக அலுவலர்கள் இதைச் செய்ய மறந்து இருந்தாலும், சம்பந்தப்பட்ட நூலகர்கள் மாவட்ட நூலக அலுவர்களுக்கு தங்கள் விண்ணப்பங்களை குறித்த காலத்திற்கு முன்பாக சமர்ப்பித்து நினைவூட்டலாம்.
அடுத்து, மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8.5 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக எவ்வளவு தொகை என்ற பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில் நூலகர்கள் பெருமளவு பங்கு எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால், இதற்கான நிதி நூலகத்துறை மூலமாகத்தான் மாவட்ட ஆட்சியர் கணக்கிற்கு செல்கிறது. அதனால், நூலகங்களின் செயல்பாடுகள், நூலக சேவைகள், நூலக துறையின் நோக்கங்கள், திட்டங்கள் முதலானவற்றைப் பற்றி மக்களும் வாசகர்களும் பொதுமக்களும் அறிந்து கொள்வதற்கு உரிய முன்னெடுப்புகளை நூலகர்கள் செய்தால், அது நூலகத்துறை மீது பொதுமக்களுக்கும் அரசுக்கும் நற்பெயர் உண்டாக்கும். அதனால், மாவட்டந்தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில் நூலகர்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதற்கு அந்தந்த மாவட்ட நூலக அலுவலர்கள் முனைப்பு காட்ட வேண்டுமாய் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் நூலகர்களும் அர்ப்பணிப்போடு எந்த ஒரு பயணப் படியும் எதிர்பார்க்காமல் புத்தகத் திருவிழாக்களில் பங்குபெறுமாறு நூலக நண்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
8.9.2023 – 17.9.2023 வரை தர்மபுரி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. அதற்கு அதிக எண்ணிக்கையிலான நூலகர்களை ஈடுபடுத்துவது என்று மாவட்ட நூலக அலுவலர் திருமதி டி. மாதேஸ்வரி அவர்கள் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
- சி.சரவணன், ஆசிரியர், நூலகர் செய்திமடல்.
6ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வில்.... மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சுற்றுசூழல் அமைச்சர் அவர்கள், மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்கள், மூத்த வழக்கறிஞர் அவர்கள், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் உள்ளிட்டோர்.
சீர்காழி நூலகத் தந்தை S.R.அரங்கநாதன் பிறந்த நாள்: ச. மு. இ மேனிலைப் பள்ளியில் வாசகர் வட்டம் சார்பில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நாகர்கோவிலை சேர்ந்த திரு .இராஜாமணி - திருமதி. கலாவதி தம்பதியினர் செங்கோட்டை நூலக செய்தியை, முகநூல் மூலம் அறிந்து, செங்கோட்டை நூலகத்துக்கு வருகை தந்து, மத்திய அரசு பணிக்கான புத்தகங்கள், சிறுவர்களுக்கான புத்தகங்கள் என சுமார் ரூ.8000 மதிப்பான புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கினர். மேலும், தம்பதியர் இருவரும் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி தங்களை புரவலராக இணைத்துக் கொண்டனர்.
அன்புடையீர், வணக்கம்.
தகடூர் புத்தகப் பேரவையின் சார்பில் ஐந்தாம் ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 8 முதல் 17 வரை தருமபுரி வள்ளலார் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறும். இதற்கான ஆலோசனைக் கூட்டம் 14.8.23 அன்று மாலை 6 மணிக்கு மாவட்ட பொது நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பேரவை செயலாளர் மரு.இரா. செந்தில் அவர்கள் புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து பேசினார்.
பின்வரும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
புத்தகத் திருவிழா செய்திகளை பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் விரிவாகக் கொண்டு செல்வது. தகடூர் புத்தகப் பேரவை நண்பர்கள் துண்டு பிரசுரங்கள், வாட்ஸ் ஆப் போன்றவை மூலம் இதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம்.
செப்டம்பர் 5 ஆம் தேதி 'தருமபுரி வாசிக்கிறது' நிகழ்வு நடைபெறும். மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்க உள்ளார்.
தனியார் பள்ளி நிர்வாகங்கள் மற்றும் நிதி உதவி செய்ய வாய்ப்புள்ள புரவலர்களிடம் அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் , நூலகங்களுக்கும் புத்தகங்கள் அன்பளிப்பு தர உதவி கேட்பது என முடிவு செய்யப்பட்டது. பகலில் இலக்கிய நிகழ்வுகள், மாலை நேரத்தில் மாணவர் கலை நிகழ்ச்சிகள் வழக்கம் போல நடைபெறும். தகடூர் புத்தகப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இ.தங்கமணி இவற்றை ஒருங்கிணைப்பார்.
பின்வரும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
புத்தகத் திருவிழா செய்திகளை பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் விரிவாகக் கொண்டு செல்வது. தகடூர் புத்தகப் பேரவை நண்பர்கள் துண்டு பிரசுரங்கள், வாட்ஸ் ஆப் போன்றவை மூலம் இதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம்.
செப்டம்பர் 5 ஆம் தேதி 'தருமபுரி வாசிக்கிறது' நிகழ்வு நடைபெறும். மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்க உள்ளார்.
தனியார் பள்ளி நிர்வாகங்கள் மற்றும் நிதி உதவி செய்ய வாய்ப்புள்ள புரவலர்களிடம் அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் , நூலகங்களுக்கும் புத்தகங்கள் அன்பளிப்பு தர உதவி கேட்பது என முடிவு செய்யப்பட்டது. பகலில் இலக்கிய நிகழ்வுகள், மாலை நேரத்தில் மாணவர் கலை நிகழ்ச்சிகள் வழக்கம் போல நடைபெறும். தகடூர் புத்தகப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இ.தங்கமணி இவற்றை ஒருங்கிணைப்பார்.
பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறும். தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து நூலகர் சி. சரவணன் இதனை ஒருங்கிணைப்பார்.
அரங்குகள் அமைப்பு, மாலை நேர சொற்பொழிவாளர்கள் ஏற்பாடு போன்ற பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக்கிட அனைவரும் ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம்.நன்றி.
அரங்குகள் அமைப்பு, மாலை நேர சொற்பொழிவாளர்கள் ஏற்பாடு போன்ற பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக்கிட அனைவரும் ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம்.நன்றி.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் முழுநேர கிளை நூலகத்தில் 12/08/2023 அன்று இந்திய தேசிய நூலகத் தந்தை திருமிகு சீர்காழி ராமாமிர்த ரங்கநாதன் அவர்களின். 131 ஆவது பிறந்த நாள்விழா நல்நூலகர் இரா.கொளஞ்சிநாதன் தலைமையில் கொண்டாடப்பட்டது. நூலகர் கு.பவித்ரா போட்டித் தேர்வு மாணவ மாணவிகள் மற்றும் வாசகர்கள் நூலகத் தந்தையின் வாழ்க்கை வரலாற்றினைப் பற்றி வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் விருத்தாசலம் நூலக பணியாளர்கள் சார்பாக நூலக உபயோகத்திற்க்கு 1000 ரூபாய் மதிப்பு கொண்ட குடுவை (Flask) வாங்கப்பட்டது. முடிவில் நூலக உதவியாளர் மா.பெருமாள் நன்றி கூறினார்.
ஈரோடு மாவட்டம், நவீன நூலகத்தில் நூலகர் தின விழா
12-08-2023 நவீன நூலகத்தில் நூலகர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது வரவேற்புரை திரு P ரவிச்சந்திரன் நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர்.அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்ட நூலகர்கள் மாணவர்கள் மாவட்ட நூலக அலுவலர் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவிற்கு தலைமைஉரை யாற்றிய மாவட்ட நூலக அலுவலர் யுவராஜ் அவர்கள் நூலகத் தந்தை டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் அவர்கள் திரு உருவ படத்தை திறந்து வைத்து தலைமை உரையாற்றினார் .எஸ் ஆர் ரங்கநாதனின் நூலக பணியையும் அவர் ஆற்றிய தொண்டினை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி அவரை கௌரவித்தது. டெல்லி பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது CC என்று அழைக்கக்கூடிய கோலன் பகுப்பு முறையை உலகத்தில் உள்ள பெரும்பாலான நூலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவரை நாம் நூலக தந்தை என அழைக்கிறோம். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு ஜே சி பு. சண்முக சேகர் அவர்கள் இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார். நூலகர் பணி மகத்தான பணி நீங்கள் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் சமூக அக்கறையுடன் பணி செய்யும் நூலகர்கள் அறியாமையை நீக்க ஒளி தரும் தீபமாக இருக்கிறீர்கள் என்று போற்றினார். திருமதி மா.ஷீலா அவர்கள் நன்றி உரையாற்றினார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
அண்ணா நூற்றாண்டு நூலக நூலகர் திரு. துரை ரவிச்சந்திரன் அவர்களுக்கு மதராஸ் நூலகச் சங்கத்தால் (MALA) வழங்கப்படும் "தேசிய சிறந்த நூலகர்" விருதை, மாநில நூலக ஆணைக்குழு தலைவர் திரு. மனுஷ்யபுத்திரன் (பிரபலமான தமிழ் எழுத்தாளர்) அவர்கள் ஆகஸ்ட் 12, 2023 அன்று வழங்கியபோது.
சென்னை 11, பெரம்பூர், நெல் வயல் சாலை, முழு நேர கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் 13.8.2023 அன்று நூலகத் தந்தை பத்ம ஸ்ரீ டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளான நூலகர் தினம் மற்றும் 76 வது சுதந்திர தினம் சிறப்பு நிகழ்ச்சியில், நூலகத் தந்தை குறித்தும், இந்திய சுதந்திர தினம் குறித்தும் மாணவ மாணவிகள் உரையாடினர். கவிஞர் பெருமக்களின் கவிதை வாசிப்பு சான்றோர் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூலகப் புரவலர்களாக ஐந்து பேர் இணைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர் என். செல்வம் செய்திருந்தார்.
பழவூர் கிளை நூலகத்தில் நடைபெற்ற நூலகர் தின விழாவில் அறம் வாசகர் வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், வாசகர்கள், நூலக உறுப்பினர்கள், புரவலர்கள், பெரும் புரவலர்கள், கொடையாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். நூலகர் திரு பா. திருக்குமரன் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். விழாவில் திரு வே.பால்ராஜ் (மேஜிக் ஸ்டுடியோ) அவர்கள் நூலகரிடம் ரூ.1000 செலுத்தி நூலக புரவலராக இணைந்து கொண்டார்.
ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்திற்கு ரூ 15,500 மதிப்புள்ள புத்தகங்களை நன்கொடையாக வழங்கப்பட்டது. |
மயிலாடுதுறை மாவட்டம், ஆணைக்காரன் சத்திரம் கிளை நூலகத்திற்கு 09/08/2023 அன்று ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தில் உள்ள திரு. க. செந்தில் ஆறுமுகம் அவர்கள் நூலக வளர்ச்சிக்கு Ceiling fans ஒன்று ரூபாய். 2000/ மற்றும் ORBIT LID Tube light இரண்டு செட் ரூபாய். 400/ மொத்தம் ரூபாய் . 2400/ மதிப்பில் மின்சாதன பொருட்கள் நன்கொடையாக வழங்கினார்.- செ. மதியழகன். இரண்டாம் நிலை நூலகர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி முழுநேர கிளை நூலகத்தின் 73-வது புரவலராக திரு.இரா.சண்முகம், சத்துணவு அமைப்பாளர்.(ஓய்வு) .பூனையானூர் அவர்கள் 10.08.2023 அன்று இணைந்து கொண்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு முழு நேர நூலகத்திற்கு தினமும் வருகை தந்து வாசித்தவர்களில் அரசு போட்டி தேர்வு தொகுதி நான்கில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொது நூலகத்துறை சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்ட போது.....
திருமங்கலத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்று வரும் இறையன்பு நூலகத்தை இன்று பார்வையிட வந்த தமிழக அரசின் மேனாள் தலைமை செயலாளர் மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் என்றும் உரிய முது முனைவர் இறையன்பு அவர்களுக்கு நல்லாடை அணிவித்து சிறப்பு செய்த போது.....
தேனி மாவட்டம் தென்கரை பெரியகுளம் முழுநேர கிளை நூலகத்தில் போட்டித் தேர்வு பகுதியில் பயின்ற மாணவன் செள.நாகார்ஜுன் B.E., த/பெ. தெய்வத்திரு. செளந்தரராஜன், TNPSC - GROUP 4- ல் தேர்வு ஆகி சென்னை DGP அலுவலகத்தில் பணி கிடைத்துள்ளது. இவரின் பணிசிறக்க வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி.
293- வது புதிய புரவலராக தென்கரை நூலகத்தில் இன்று (30.07.23) இணைந்த பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர் *திருமதி .K.M.M. முத்துலட்சுமி வெங்கடேசன் அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம். மேலும், தென்கரை நூலகம் மராமத்து பணிக்காக ரூபாய் 4000/- வழங்கினார்.
- நல்நூலகர் ஆ.சவடமுத்து
கடலூர் மாவட்டநூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் விருத்தாச்சலம் முழுநேர கிளை நூலகத்தில் 03/08/2023 அன்று எனது இனிய நண்பரும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு பொது நூலகத் துறை Sc/st பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் நல் நூலகர் திரு.நா. அண்ணாதுரை MA. MlSC அவர்கள் .நூலகர் தினத்தினை முன்னிட்டு ரூபாய் 1000/- ஆயிரம் செலுத்தி, தன்னை விருத்தாச்சலம் நூலகத்தில் 126 ஆவது புரவலராக இணைந்து கொண்டார். அண்ணார் அவர்களுக்கு கடலூர் மாவட்டத்தின் நூலகர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். திரு.நா. அண்ணாதுரை அவர்கள் மேன்மேலும் நூலகத்துறையில் வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்!! அருகில் நூலக உதவியாளர் மா.பெருமாள் உடன் இருந்தனர்.
- இரா. கொளஞ்சினாதன், இரண்டாம் நிலை நூலகர்.
மணலூர்பேட்டை கிளை நூலகத்தில் நூலகர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ம.ஆனந்தன், ஆசிரியர் கோ.ரம்யா ஆகியோர் மணலூர்பேட்டை கிளை நூலக வாசகர்கள் பயன்பாட்டிற்கு ரூபாய் 12,500.00 மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை நல்நூலகர் மு.அன்பழகன் அவர்களிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வாசகர் வட்ட பொருளாளர் வீர.சந்திர மோகன், உடற்கல்வி இயக்குனர் எம்.பாலாஜி, பதிவுத்துறை தே.அய்யனார், ஆசிரியர்கள் ச.இளங்கோவன், ம.வினோத்குமார் பள்ளிக் கல்வித் துறை சஞ்சீவிராமன், சமூக ஆர்வலர்கள் செல்வகணபதி ந.சரவணன், ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நூலகப் பணியாளர்கள் கி.பாஸ்கரன், பெ.விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
சென்னை, ஆழ்வார்பேட்டை, வட்டார நூலகத்தில் மாணவர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி மற்றும் மெய்நிகர் பயிற்சி வழங்கப்பட்டது. கணினி பயிற்சி வழங்கியவர்கள் எ. கௌசர் மற்றும் கெ. கோமதி அவர்கள். மெய்நிகர் பயிற்சியை வழங்கியவர் நூலகர் இரா.கலைமணி அவர்கள்.
நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். .
கிராம சபைகள் மூலம் நூலக வளர்ச்சி பணிகள் செய்வதை தங்கள் மலரில் பிரசுரம் செய்யவும்.புதிய நூலகங்களை திறக்க/இருக்கும் நூலகங்களை தரம் உயர்த்துவது குறித்து மத்திய அரசு பட்டியலில் நூலகங்களை கொண்டு வர முயற்சி செய்து வருவது உள்ளிட்ட நடப்பு நிகழ்வுகள் குறித்த பார்வை ஆசிரியர் மனதில் எழாதது ஏன்?
ReplyDeleteநூலகங்களை பொதுப் பட்டியலில் வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று ஒரு செய்தி பரவியது. இதன் உண்மைத் தன்மை என்ன என்று தெரியவில்லை.
Deleteநூலகங்களை பொது பட்டியலுக்கு கொண்டு வந்தால் அது நூலகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், மாநில ஆளும் கட்சியினருக்கு பயனளிக்காது என்பது என் கருத்து.