நூலகர் செய்திமடல் 30
ஆசிரியர் உரை: அனைவருக்கும் வணக்கம், 2024 ஆம் ஆண்டு பொது நூலகத் துறைக்கு சிறப்பான ஆண்டு என்றால் அது மிகை ஆகாது. ஆண்டின் தொடக்கத்தில் இளைஞர் இலக்கியத் திருவிழா தொடர்பான பயிற்சி நூலகர்களுக்கு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டங்களில் இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மண்டல அளவில் இலக்கியத் திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு இலக்கியத் திருவிழாக்கள் மாவட்ட நிர்வாகம் (மாவட்ட ஆட்சியர்) சார்பில் நடத்தப்பட்டன. 'இலக்கியத் திருவிழாக்கள் நூலகத் துறை சார்பில் நடத்தப்பட வேண்டும்' என்று நம்மை போன்றவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நூலக அலுவலர்கள் இலக்கியத் திருவிழாக்கள் நடத்துவதற்கு வழிவகை செய்த பொதுநூலத் துறை இயக்குநர் அவர்களுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகளை நூலகர்கள் சரியாக நடத்துவார்களா? என்ற அச்சம் பலர் மனதில் இருந்தது. ஆனால், போட்டிகளை நூலகர்கள் சிறப்பாக நடத்தி முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆண்டு இ...