நூலகர் செய்தி மடல் 2
ஆசிரியர் உரை: நூலகர் செய்தி மடல் மின்னிதழ் வெளிவந்த முதல் நாளிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதழைப் படித்திருப்பது, இந்த இதழுக்கு இருக்கும் வரவேற்பைக் காட்டுகிறது. இந்த மின்னிதழுக்கு இவ்வளவு வரவேற்பு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இதழை PDF வடிவில்தான் வெளியிடுவது என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. அந்த வடிவில் படிப்பது சிரமமாக இருக்கும் என்றும், அந்த பிடிஎப் வடிவ கோப்புகளைச் சேமித்து வைப்பதும் சிரமமாக இருக்கும் என்பதால், இணைய வழியில் இதழை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அச்சு வடிவில் இதழை வெளியிட்டால் இவ்வளவு விரைவாக, இதனை நூலகர்களுக்குக் கொண்டு சேர்க்க இயலாது. வாசகர்களுக்கு இணைய வழியில் இதழைக் கொண்டு சேர்ப்பது எளிதாகவும், படிப்பவர்களுக்குச் செலவில்லாமலும் இருக்கிறது. மின்னிதழின் மேலுமொரு சிறப்பு என்னவென்றால், இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைத் தலைப்பை உலகில் உள்ள எந்த நாட்டவர் கூகுளில் தேடினாலும், இந்த கட்டுரை தேடுபவர் பார்வைக்குப் போகும். ஆக, இணைய வழியில் இதழ் வெளியிடுவதால், இதில் இடம்பெற்றுள்ள கட்டுர...