Posts

நூலகர் செய்திமடல் 17.

Image
ஆசிரியர் உரை: நூலகத் துறைக்கு விடிவு காலமா ?   அனைவருக்கும் வணக்கம். பொது நூலகத்துறை இயக்கு ந ராக திரு க. இளம்பகவத்  ஐ.ஏ.எஸ்.  அவர்கள் 12.7.2023 அன்று பொறுப்பேற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. பொது நூலகத் துறை இயக்குநர் பணியிடம் கடந்த 12 ஆண்டுகளாக காலியாக இருந்தது. இதனால், பொது நூலகத் துறையின் வளர்ச்சியும், நூலகர்களின் நலனும்  பெரிதும் பாதிக்கப்பட்டது .  பொது நூலக இயக்குநர் பணியிடத்தை நிரப்ப அரசு பலமுறை நடவடிக்கை எடுத்தது. பெறப்பட்ட விண்ணப்பங்களில் சரியான நபர்/ தகுதியான நபர் யாரும் கிடைக்காததால்தான், அரசு இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. இது தற்காலிக ஏற்பாடா? இறுதியான முடிவா?  என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், அரசு எடுத்த இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.  பிளாஷ்பேக் : பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்களுக்கு பொது நூலகத்துறை இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டு வந்தது. அவர்களில் சிலர் நூலகத்துறை வளர்ச்சிக்குப்  பெரிதும் பாடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பொது நூலகத்துறை இயக்குநராக இருந்த திரு.வே.ரமணி, திரு. க. அற...