நூலகர் செய்திமடல் 23
ஆசிரியர் உரை: அனைவருக்கும் வணக்கம். நூலகர் செய்தி மடல் மின்னிதழை தொடர்ந்து வாசித்து வரும் நூலக நண்பர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இதழில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் பற்றி நூலகர்கள் விவாதிக்கும் பொருட்டு இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 1). தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் பதிவுரு எழுத்தர்களை (Record click) கொண்டு இயங்குகின்றன. அந்த நூலகங்களில் மூன்றாம் நிலை நூலகர் பணியிடம் இல்லை. பதிவுரு எழுத்தர் பதவி மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பதிவுரு எழுத்தர், இரவுக் காவலர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதில்லை என்று தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்து இருக்கிறது. இந்த நிலையில், பதிவுரு எழுத்தர் பணியிடம் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள கிளை நூலகங்கள் தினக்கூலி பணியாளர்களை வைத்து இயக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்த கிளை நூலகங்களில் மூன்றாம் நிலை நூலகர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு மூன்றாம் நிலை நூலகர் பணியிடம் நிரப்பப்ப...