ஆசிரியர் உரை:
நூலகர் செய்தி மடல் மின்னிதழை தொடர்ந்து வாசித்து வரும் நூலக நண்பர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இதழில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் பற்றி நூலகர்கள் விவாதிக்கும் பொருட்டு இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
1). தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் பதிவுரு எழுத்தர்களை (Record click) கொண்டு இயங்குகின்றன. அந்த நூலகங்களில் மூன்றாம் நிலை நூலகர் பணியிடம் இல்லை. பதிவுரு எழுத்தர் பதவி மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பதிவுரு எழுத்தர், இரவுக் காவலர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதில்லை என்று தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்து இருக்கிறது. இந்த நிலையில், பதிவுரு எழுத்தர் பணியிடம் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள கிளை நூலகங்கள் தினக்கூலி பணியாளர்களை வைத்து இயக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்த கிளை நூலகங்களில் மூன்றாம் நிலை நூலகர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு மூன்றாம் நிலை நூலகர் பணியிடம் நிரப்பப்படுவதன் மூலம் நூலகச் சேவை மேம்படும். பதவி உயர்வுக்கு காத்திருக்கும் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆகவே, மூன்றாம் நிலை நூலகர் பணியிடம் இல்லாமல் பதிவுரு எழுத்தர் பணியிடத்தோடு இயங்கும் கிளை நூலகங்களில் மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து இதை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
2. தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களை சந்திக்கும் பிரமுகர்கள் புத்தகங்கள் பரிசாக வழங்குகின்றனர். இந்த புத்தகங்கள் தற்பொழுது நூலகங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நூல்களின் பட்டியலில் உள்ள விலையும், புத்தகத்தில் உள்ள விலையும் ஒன்றாக இருக்கிறது.
பொதுவாக, நூலகத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்யும் பொழுது தமிழ் புத்தகங்கள் பாரம் அடிப்படையில் ஏற்பு விலை நிர்ணயம் செய்து வாங்கப்படுகின்றன. ஆங்கில நூல்கள் 20 சதவீதத்திற்கு மேல் கழிவுடன் வாங்கப்படுகின்றன.
இந்த நிலையில் நூலகத்திற்கு தற்பொழுது வழங்கப்பட்டுள்ள நன்கொடை (இலவச) புத்தகங்கள் ஏற்பு விலை இல்லாமல், புத்தக விலையில் இருப்பது நூலர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த புத்தகங்கள் காணாமல் போனால் நூலகர்கள் செலுத்த வேண்டிய தொகை என்ன? என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டி இருக்கிறது. ஆகவே, நூல் சேர்க்கைப் பதிவேட்டில் இலவச புத்தகங்களுக்கான விலையை, நூல் சேர்க்கப்பட்டில் பதிவு செய்வதற்கு சரியான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
- சி. சரவணன், ஆசிரியர், நூலகர் செய்திமடல்.
ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சி
பொது நூலக இயக்குநர் திரு.க. இளம்பகவத் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்தது.
இக் குழு 50 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்தது.
எமரால்டு பதிப்பகம் திரு. ஒளிவண்ணன் பல்வேறு நாட்டு பதிப்பாளர்களை சந்தித்தார்.
எதிர் வெளியீடு திரு அனுஷ் குணா கவி அழகனின் poisoned Dream ஆங்கில மொழிபெயர்ப்புடன் பன்னாட்டு வெளியிட்டாளர்களை சந்தித்தார்.
Kalachuvadu Pathipagam Kannan சுந்தரம் Andrej Blatnik எழுதிய நூலின் மலையாள மொழிபெயர்ப்பை மூல ஆசிரியரின் கையில் கொடுத்து அழகு பார்த்தார்.
பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருமங்கலம் கிளை நூலகத்தை பார்வையிட்டபோது... திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் பார்வை குறைபாடு உடையோருக்கான இலவச பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பயிற்சியை வழங்க முன்வந்துள்ள NR IAS Academy நிறுவனத்திற்கும், Rotary Phoenix, வாசகர் வட்டத்திற்கும் மாவட்ட நூலக அலுவலர் அ.பெ. சிவகுமார் நன்றி தெரிவித்தார்.
வாசிப்பு பயிற்சி ஊக்குவிப்பு:
மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்ந்துள்ள தென்காசி வ உ சி வட்டார நூலகத்தில், நூல் வாசிப்பு பயிற்சியினை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டு, புத்தக வாசிப்பினை உற்சாகப்படுத்தி வருகிறது. நிகழ்வில், நூலகத்திற்கு வருகை புரிந்த மணிஷா, சுடலை, யஷ்வந்த் குரு ஆகியோருக்கு பாரத மாநில வங்கி மேலாளர் ஜெயராமன், உதவி மேலாளர் சுஷேன் மிட்டல் இருவரும் நூலகத்தின் சார்பில் புத்தகங்களை வழங்கி, சிறு வயதிலேயே புத்தக வாசிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார்கள். நூலகர் பிரம நாயகம், சுந்தர், ஜூலியாராஜ செல்வி நிஷா வாழ்த்தினர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் வழங்கிய நன்கொடை நூல்கள் மணலூர்பேட்டை கிளை நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றபோது அவருக்கு அளித்து வரும் புத்தகங்கள் நூலகங்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்ட நூல்களிலிருந்து
ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணை குழுவின் கீழ் இயங்கும் மணலூர்பேட்டை கிளை நூலகத்திற்கு
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் விழுப்புரம் மாவட்ட மைய நூலகம் வழியாக பயனுள்ள பல நூல்கள் வாசகர்களின் வாசிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்நூல்கள் வாசகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இந்நூல்களை பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வர்த்தகர் சங்கம், அரிமா சங்கம், நூலகப் புரவலர்கள், வாசகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் வருகைதந்து பார்வையிட்டனர்.
18.10.23 அன்று ஈரோடு - SSM
SCHOOL பள்ளிக் குழந்தைகள் ஈரோடு சம்பத் நகர் நாவீன நூலகத்தை பார்வையிட்டனர். குழந்தைகளுக்கு கதை சொல்லி சரிதா ஜோ அவர்களின் கதை
சொல்லல் நிகழ்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
*நமது TAMILNADU LIBRARIANS YOUTUBE CHANNEL - 175 ஆவது சிறப்பு நிகழ்ச்சியாக "ஆதனின் பொம்மை" என்கிற நாவல் எழுதியமைக்காக 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பால சாக்திய விருது வென்ற எழுத்தாளர் திரு. உதயசங்கர் எழுதும்.... சாரி மன்னிக்கவும், உரையாற்றும் புனைவும் வரலாறும் என்கிற நிகழ்ச்சி. அனைவரும் கீழ்காணும் இணைப்பில் இணைந்து கண்டும், கேட்டும் பயன் பெற்று மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.*
https://www.youtube.com/live/9AoMtxoIS8w?si=
மேற்காணும் நிகழ்வினை கண்ணுற்றவர்கள் கீழ்காணும் இணைப்பில் சென்று உங்களுக்கான இலவச சான்றிதழினை உடனடியாக பெற்று பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
https://forms.gle/dikU35UjFcfsTMYz6
இந்த சேனலை subscribe செய்வதன் மூலம் இதன் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து காண வசதியாக இருக்கும்.
https://youtube.com/@TNL945
காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆணைக் குழு, மேற்கு தாம்பரம் முழுநேர கிளை நூலகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25/10/2023 அன்று திரு.N. அண்ணாதுரை அவர்கள் இரண்டாம் நிலை நூலகர் தேனாம்பேட்டை (மனைவி அம்சா நினைவாக) நூலகத்தில் புரவலராக தன்னை இணைத்துக் கொண்டார். திரு அனாதுரை அவர்களுக்கு நூலகத் துறையி சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
கண்ணீர் அஞ்சலி ! கடலூர் மாவட்டம், விருத்தாசலம் முழுநேர கிளை நூலகத்தில் இரண்டாம் நிலை நூலகராக பணிபுரிந்து வந்த அருமை நண்பர் கொளஞ்சிநாதன் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இவர் நூலகத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர்.
நூலக துறை சார்ந்த அரசாணைகள் ஏதேனும் தேவையென்றால் அவரிடம் தான் கேட்போம். அந்த அளவுக்கு துறை சார்ந்த அரசாணைகள் அவரிடம் இருக்கும். அது மட்டுமல்லாது, நூலகர் செய்திமடலின் ஒவ்வொரு வெளியீடு பற்றியும் என்னிடம் விவாதிப்பார். ஒவ்வொரு வெளியீட்டின் போதும் முதலில் கருது தெரிவிப்பவர் அவராகத்தான் இருக்கும். தொடர்ந்து எனக்கு செய்தி அனுப்புபவர். அவரே இன்று செய்தியாகிவிட்டார். அவரது மறைவு நூலக துறைக்கும், எனக்கும் பேரிழப்பு. அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
- சி. சரவணன், ஆசிரியர்,
நூலகர் செய்தி மடல்.
D. M. A. Deepamala participated and presented a paper in 26th International Symposium on ETD-2023 organized by INFLIBNET &NDLTD (USA) (இவர் கோவை மாவட்டத்தில் ஊர்புற நூலகராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.)
29-04-2023ம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வட்டார நூலகத்தில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது.
பொது நூலக இயக்ககம், சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் சிறகுகள் பவுண்டேசன் டிரஸ்ட் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தன.
இந்நிகழ்ச்சிக்கு சிறகுகள் பவுண்டேசன் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் திரு.V.J.பாலமுருகன் தலைமை தாங்கினார். திரு.சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திரு.கதிர் முருகன் வாசகர் வட்ட உறுப்பினர் திரு.ரெங்கசாமி திருமதி.மாலினி ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் எழுத்தாளர் திரு. ஆதி வள்ளியப்பன் அவர்கள் கருத்துரையாளராக கலந்து கொண்டு, உலக பூமி தினம் கொண்டாடுவதின் அவசியம், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், பூமி மாசு படுவதை தடுத்தல் , புவி வெப்ப மயமாதலால் ஏற்படும் கால நிலை மாற்றங்கள் , இயற்கை பேரிடர்கள் என மனித குலத்திற்கு ஏற்படும் பேராபத்துகள் குறித்து விளக்கினார். மேலும் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் பூமியை , சுற்றுச்சூழலை பாதுகாக்க நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார். பூமியின் பசுமை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் தேனாம்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு புத்தகம், பரிசு பொருட்கள் மேலும் நூலகத்திற்கு வைப்பு தொகை மற்றும் ஆண்டு சந்தா செலுத்தி அடையாள அட்டையும் சிறகுகள் பவுண்டேசன் டிரஸ்ட் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டன. வட்டார நூலகப்பணியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதல்நிலை நூலகர் திரு. சா.இளங்கோ நன்றி கூறினார்.
திருச்சி வரகனேரி கிளை நூலகத்தில்29.10.2023 அன்று மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு, சமூக ஆர்வலர் திரு. சீ. ரமேஷ் பரிசு வழங்கினார்.
வாசகர் வட்டம் சார்பாக திரு. ந.குமாரவேல், திரு. கோபி, திரு சீ. ரமேஷ், திரு.மாரிமுத்து தனராஜ், திரு கணேசன் ஆசிரியர், நன்கொடை வழங்கி 151 மாணவர்களை வரகனேரி நூலகத்தில் உறுப்பினர்களாக இணைத்தனர். நூலகர் மு செந்தில் குமார் நன்றி கூறினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் முழுநேர கிளை நூலகத்தில் (22/10/2023) அன்று ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பூஜை இரா.கொளஞ்சிநாதன் நூலகர் தலைமையில் மிகசிறப்பாக கொண்டாடப்பட்டது. நூலகப் பணியாளர்கள் போட்டித்தேர்வு மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.
19.10.23 அன்று மதுரை காலேஜ் ஹவுஸ் அரங்கத்தில் நடைபெற்ற பணி நிறைவு பெற்ற மாவட்ட நூலக அலுவலர் செ. ஜெகதீசன் எழுதி, காவ்யா பதிப்பகம் வெளியிட்ட நூலகம் செல்வது சாலமும் நன்று நூல் வெளியீட்டு விழாவில் மதுரை மாவட்ட நூலக அலுவலர் பாலசரஸ்வதி, சிறப்பு விருந்தினர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு நல்லாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
19.10.2023 அன்று தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை கிளை நூலக வளர்ச்சிக்காக வாசகர் வட்டத்தின் மூலம் திரு ப.தமிழ்மணி புரவலராக சேர்ந்து கொண்டார்.
- கோ.கணேசன், மூன்றாம் நிலை நூலகர், அதியமான் கோட்டை.
தருமபுரி மாவட்டம், சாமனூர் ஊர்ப்புற நூலகத்தில் தினக்கூலி பணியாளர் திருமதி A . தேன்மொழி அவர்களிடம் திருமதி S.தாட்சாயினி பேராசிரியர் MA MPhil அவர்கள் ரூபாய் 1000/- செலுத்தி புரவலராக இணைந்து கொண்டபோது.
- ரா.சரவணன், மூன்றாம் நிலை நூலகர், சாமனூர் (கூடுதல் பொறுப்பு) கிளை நூலகம் அ.மல்லாபுரம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், பூளவாடி கிளை நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கதை கேட்கும் குழந்தைகள்.
அன்பு மயமாக வாழ்தல். இயற்கை போற்றுதல். நம் தேச விவசாயியின் உழைப்பு. மரம் வளர்ப்பு. பறவைகளை பாதுகாத்தல். இளவயதில் புத்தக வாசிப்பால் ஏற்படும் நன்மைகள். மற்றும் கடிதங்கள் எழுதுவதால் ஏற்படும் மொழி வளம் போன்றவைகள் குறித்து கதைகள்.மற்றும் கலந்துரையாடல்கள், பாடல்கள் மூலம் நூலகத்தில் கதை களம் அமைத்து கதை சொல்லிய Poonkodi Balamurugan அவர்கள் குழந்தைகளுக்கு மேற்கண்ட விழுமியங்களை உணர்வு பூர்வமாக விளக்கினார்.
பொது நூலகத் துறையில் கீழ் இயங்கும் திண்டுக்கல் மாவட்ட நூலக ஆணைக்குழுவில் உள்ள கோபால்பட்டி கிளை நூலகம் இணைப்பு தி.வடுகப்பட்டி பகுதி நேர நூலக வளர்ச்சிக்காக ரூ.1000/- செலுத்தி 21வது புரவலராக தன்னை இணைத்துக் கொண்டார் திரு. இரா. தர்மராஜன்.
- சா.கனகராஜ், நூலகர், கிளை நூலகம் ,கோபால்பட்டி..
கம்பம் பாரதி இலக்கியப் பேரவை - கம்பம் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய ஐம்பெரும் விழா.
|
|
பாரதி நினைவு நாள், கண்ணதாசன் நினைவு நாள், காந்தியடிகள் பிறந்த நாள், நாமக்கல் கவிஞர் பிறந்த நாள், சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா என்று முப்பெரும் விழா நடைபெற்றது.
செங்கோட்டை நூலகத்தில் புரவலர் சேர்ப்பு
கட்டளை குடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. ஸ்ரீதர் அவர்கள் ரூபாய் 1000 செலுத்தி 260 -வது புரவலராக நூலகத்தில் இணைந்தார். அவர்களுக்கு நூலகத்தின் சார்பாகவும் வாசகர் வட்டத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..
பொது நூலக இயக்குநர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் போட்டித்தேர்விற்கு தயாராகி வரும் தேர்வர்கள் பயன் பெற , யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி,காவலர் தேர்வு ,ஆசிரியர் தேர்வு ,எஸ்எஸ்சி , ரயில்வே ,வங்கி ,உள்ளிட்ட தேர்வுகளுக்கு கடந்த 30 ஆண்டுகளில் கேட்கப்பட்ட 31000 கேள்வி பதில்களுடன் , ஆதார நூல்கள் ,அனைத்தும் 293 நுண் தலைப்புகளில் வழங்கப்பட்டு.,
*இ - எல்எம்எஸ்* ( Electronic learning management system) மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.அதனுடன் உடனடி பயிற்சிக்காக *படிப்பு முறை ,பயிற்சி முறை , மாதிரி தேர்வு* மூலம் பிற மாணவர்களுடன் ஒப்பிட்டு கொள்ள *முன்னேற்ற அறிக்கை வசதியும் உள்ளது. தேவையான வினாக்களை தேடும் வசதி., வீடியோ* விளக்கங்கள் *, க்யூ ஆர் கோடு* ., *இணையதள முகவரிகள்* என போட்டித்தேர்விற்கு அனைத்தும் ,e - LMS ல் உள்ளது .
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள இவ்வசதியை தமிழ்நாடு முழுவதும் நூலகங்களில் கிடைக்கப்பெற்றுள்ளதை அனைத்து போட்டி தேர்வர்களும் அருகில் உள்ள பொது நூலகம் சென்று பெயர், இமெயில் ஐடியுடன் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம். *பொது நூலக இயக்குநர் அவர்கள் இவ்வாய்பினை இலவசமாக வழங்கி உள்ளார்கள்* ..
இலவசமாக வழங்கபட்டுள்ளதால், திருநெல்வேலி தென்காசி மாவட்ட / வட்டார /கிளை/ ஊர்புற அனைத்து நூலகங்களில் இவ்வசதி மாணவர்கள் பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம் செய்திகுறிப்பில் தெரிவித்து உள்ளார்.
பள்ளி மாணவ, மாணவியர்கள் நூலகத்தில் உறுப்பினராக இணைதல்.
தேனி மாவட்டம் வடகரை பெரியகுளம் கிளை நூலகலத்தில் டாகடர் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடும் விதமாக 100 அரசு பள்ளி மாணவர்களும், 100 அரசுப் பள்ளி மாணவிகளு்ம் நூலகத்தில் உறுப்பினராக இணைக்கப்பட்டனர். பெரியகுளம் நகர்மன்ற தலைவர் திருமதி சுமிதா சிவக்குமார், நகர்மன்ற துனைத் தலைவர், நகர்மன்ற செயலாளர், நகர்மன்ற உறுப்பினர்கள், வாசகர் வட்டத் தலைவர் மு.அன்புக்கரசன், வழக்கறிஞர் மணிகார்திக் மற்றும் நூலகர்கள் கலந்து கொண்டனர்.
நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம்.
மின்னஞ்சல்: noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் : 8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
நூலகங்களில் உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடங்களை மூன்றாம் நிலை நூலகர்பணியிடமாக மாற்றுவது குறித்த நூலக செய்தி மடல் ஆசிரியரின் கடிதம் நிச்சயமாக இயக்குனர் பார்வைக்கு சென்று தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.மேலும் நூலகர் கொளஞ்சிநாதன் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது சிறப்பு.சமீபத்தில் மறைந்த 2ஊர்ப்புற நூலகர்கள் பெயரையும் சேர்த்து இருக்கலாம்.மு.குமரன், ஊர்ப்புற நூலகர் தருமபுரி மாவட்டம்.
ReplyDeleteநன்றி குமரன். பல்வேறு தளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும், நூலக நண்பர்கள் அனுப்பிய செய்திகளின் அடிப்படையிலும் இதழ் தாயாரிக்கப் படுகிறது. தாங்கள் குறிப்பிட்டது போன்ற செய்திகளை நூலகர்கள் அனுப்பினால் பத்திரிகை தயாரிப்பு எளிதாக இருக்கும். நன்றி.
Delete