Posts

நூலகர் செய்திமடல் 29

Image
     ஆசிரியர் உரை:  அனைவருக்கும் வணக்கம். கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட நூலகத்துறை சார்பான அறிவிப்புகளை துரிதமாக செயல்பப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கியத் திருவிழா: மண்டல அளவில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மண்டல அளவில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு இலக்கியத் திருவிழாக்களுடன்  இளைஞர் இலக்கியத் திருவிழாக்களும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.       இந்த ஆண்டு  அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகள் நடத்துவதற்கு இயக்குநர் அவர்கள் வழிவகை செய்துள்ளார். இது பாராட்டுக்குரியது, மகிழ்ச்சி அளிக்கிறது.       இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இளைஞர் இலக்கியத் திருவிழா தொடர்பாக நூலகர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.   இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர் சிறப்பாக பயிற்சி வழங்கினர். இந்தப் பயிற்சி  மிகவும் பயனுள்ளதாக இருந்தது.  அனைத்து மாவட்டங...