நூலகர் செய்திமடல் 33
ஆசிரியர் உரை: அனைவருக்கும் வணக்கம், இணைய வழியில் நாம் தேர்ந்தெடுத்த பருவ இதழ்கள் அஞ்சல் வழியில் வரத் தொடங்கி விட்டன. இத்தனை ஆண்டுகள் யாரோ தேர்வு செய்த பத்திரிகைகள் நம் நூலகங்களுக்கு வந்தன. ஆனால் , இந்த ஆண்டு நம் நூலகத்திற்கான பருவ இதழ்களை நாமே தேர்வு செய்து , பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இதழ்கள் ‘வாசகர் விருப்பம் அறிந்து’ என்று சொல்லப்பட்டாலும் , ‘ நூலகர் விருப்பம் அறிந்தும்’ என்று சொல்லலாம். ஏனென்றால் , நூலகர் என்பவர் முதல் வாசகர். நூலகர் என்பவர் வாசகர்களின் பிரதிநிதியும்கூட. நான் சந்தா செலுத்தி சில பத்திரிகைகள் வாங்கி படித்து , வாசகர்களுக்கும் கொடுத்து வந்தேன். அந்த பத்திரிகைகள் தற்பொழுது இணைய வழியில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு வாசகரும் படிக்கப்படாத பருவ இதழ்கள் நூலகத்திற்கு வந்த நிலையும் இருந்தது. ஆனால் , இன்று அப்படி இல்லை. ' ஒரு வாசகருக்கு ஒரு பத்திரிக்கை ; ஒரு பத்திரிக்கைக்கு ஒரு வாசகர் என்னும் குறைந்தபட்ச பயன்பாட்டிலாவது பருவ இதழ்கள் இருக்க வேண்டும் ' என்கின்ற உயரிய எண்ணத்தில்தான் பருவ இதழ்கள் இணைய வழியில் நூலகர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு...