நூலகர் செய்தி மடல் 6
ஆசிரியர் உரை: நூலக நண்பர்களுக்கு வணக்கம். நூலகர் செய்தி மடலைத் தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கு நன்றி. நூலகர் செய்தி மடலின் ஆறாவது இதழ் இது. பொது நூலகத்துறை இயக்குநராகத் திரு க. இளம்பகவத் இஆப அவர்கள் பொறுப்பேற்ற பின், நூலகத் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள், வளர்ச்சிப் பணிகள், சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சில மாதங்களுக்கு முன்பு, மாநில நூலக ஆணைக் குழு அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட நூலக ஆணைக் குழுக்கள் அமைக்கும் பணியும் தொடங்கி இருக்கிறது. ஆளும் கட்சி பிரமுகர்களை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர்களாக நியமிக்கப்படுவதைவிட, படைப்பாளர்களையும், எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டால், அது நூலகர்களுக்கும், நூலகத்துறைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவராக எழுத்தாளர் திரு. மனுஷ்யபுத்ரன் நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் மாவட்ட நூலக ஆணைக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படும் என்று நம்புகிறேன்....