நூலகர் செய்தி மடல் 6

ஆசிரியர் உரை:

நூலக நண்பர்களுக்கு வணக்கம். நூலகர் செய்தி மடலைத் தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கு நன்றி. நூலகர் செய்தி மடலின் ஆறாவது இதழ் இது.

 பொது நூலகத்துறை இயக்குநராகத் திரு க.இளம்பகவத் இஆப அவர்கள் பொறுப்பேற்ற பின், நூலகத் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள், வளர்ச்சிப் பணிகள், சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சில மாதங்களுக்கு முன்பு, மாநில நூலக ஆணைக் குழு அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட நூலக ஆணைக் குழுக்கள் அமைக்கும் பணியும் தொடங்கி இருக்கிறது.

  ஆளும் கட்சி பிரமுகர்களை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர்களாக நியமிக்கப்படுவதைவிட, படைப்பாளர்களையும், எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டால், அது நூலகர்களுக்கும், நூலகத்துறைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவராக எழுத்தாளர் திரு. மனுஷ்யபுத்ரன் நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் மாவட்ட நூலக ஆணைக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படும் என்று நம்புகிறேன். நூலகங்களின் அடிப்படை வசதிகளையும் கட்டமைப்புகளையும் மேம்படுத்துவதில் நூலக ஆணைக் குழுக்கள் சிறப்பாகச் செயல்படும் என்று நம்புவோம்.

அடுத்து, மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்கள் கலியாக இருந்த மாவட்டங்களுக்கு அண்மையில் பொறுப்பு மாவட்ட நூலக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் மேற்படி மாவட்டங்களில் பணிபுரியும் நூலகர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளது.  பொறுப்பு மாவட்ட நூலக அலுவலர்களாகப் பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நூலக நண்பர்கள் திட்டம் ஒரு அருமையான திட்டம் என்று நான் ஏற்கனவே செய்தி மடலில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறேன். பல மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் பயன்கள் முழுவதும் வாசகர்களைச் சென்றடைய நூலகர்களுக்கு போதிய பயிற்சி அல்லது ஆலோசனைகள் வழங்குவது அவசியம். எத்தனை மாவட்டங்களில் நூலகர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அந்த திட்டத்தை நிறைவேற்றுபவர்கள் கீழ்நிலைப் பணியாளர்கள்தான். நூலக நண்பர்கள் திட்டத்தை நூலகர்கள் நிறைவேற்றும்போது அவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டியது அவசியம். மாவட்ட நூலக அலுவலர் தலைமையில் நூலகர்களுடன் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும்போது நூலகர்களிடையே கருத்துக்கள் பரிமாற்றம் ஏற்படும். இந்த திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நூலகர்களின் ஆலோசனைகள் மற்ற நூலகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி.

மீண்டும் சந்திப்போம்.


பொது நூலகத்துறை துணை இயக்குநர் திரு. இளங்கோ சந்திரகுமார் அவர்களுக்கு 9.2.2023 அன்று வாழ்த்து தெரிவித்தபோது..



தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள திரு டி.இரவிச்சந்திரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தென்காசி மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சிசுந்தரம் மற்றும் நூலகர்கள்.


 மாவட்ட  நூலக அலுவலராக(பொறுப்பு) பொறுப்பேற்ற திருமதி வசந்த மல்லிகா  அவர்களை வாழ்த்திய நூலக நண்பர்கள்.

தருமபுரி மாவட்ட மைய நூலத்தில் 1.2.2023. அன்று நடைபெற்ற நூலக நண்பர்கள் திட்ட தொடக்க விழா.  
சுரண்டையில் நடைபெறும் நான்காவது புத்தக கண்காட்சி விழாவில்...
  தபசு நூல் வெளியீட்டு விழா.

 12- 2-2023 அன்று சென்னை, ஆழ்வார்பேட்டை, வட்டார நூலகத்தில் அடிப்படை கணினி பயிற்சியில் மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியாளர் த. தமிழ்கொடி.
தருமபுரி மாவட்ட நூலக அலுவலராக(பொ) பொறுப்பு ஏற்ற
திருமதி டி. மாதேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நூலகர்கள்.
 
தென்காசி மாவட்ட அளவிலான 
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2,2A முதன்மைத் தேர்வுக்கான 
இலவச பயிற்சி தேர்வுகள்

திருநெல்வேலி தென்காசி மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சிசுந்தரம் அவர்கள் செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2,2A முதன்மை தேர்வு வரும் 25.02.2023 நடைபெற உள்ளது.  தென்காசி வ.உ.சி வட்டார நூலகம், திருநெல்வேலி சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனமும் இணைந்து தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் வரும் 12.02.2023 ஞாயிற்றுக்கிழமை இலவச பயிற்சி தேர்வினை நடத்த உள்ளது.
காலை 10 மணி முதல் 1 மணி வரை தமிழ் தகுதித்தேர்வு (தாள் 1) -ம்
பிற்பகல் 2 மணி முதல் 5 மணி முடிய பொது அறிவுதேர்வு (தாள்2 ) -ம் நடைபெறும் இந்த இலவசப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 9626252500, 9626253300, 9944317543 என்ற அலைபேசி எண்ணில் பதிவு செய்து தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டுகிறோம்.
லெ.மீனாட்சிசுந்தரம்
மாவட்ட நூலக அலுவலர்,
சூ.பிரம நாயகம்
வட்டார நூலகர், தென்காசி


 பள்ளி மாணவர்கள் செய்தித்தாள் வாசித்து பழக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு,  விழுப்புரம் திரு ஆறுமுகம் அவர்கள் ஹிந்து தமிழ் செய்தித்தாளில் வரும் வெற்றி படிக்கட்டு என்ற பள்ளி மாணவர்களுக்கான செய்தித்தாள் நூறு  வாங்கி மாணவர்களுக்கு கொடுப்பதற்காக ரூபாய் 700  அனுப்பி வைத்தார்.  செய்தித்தாள் படித்த மாணவரிடம் அந்த செய்தியில் இருந்து ஒரு பத்து கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

செங்கோட்டை நூலகத்தில் நடந்த தேசிய திறனாய்வு பயிற்சி வகுப்பில்    (NMSS)சிறப்பு விருந்தினராக பாரத் கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் திருமதி காந்திமதி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி 2022-23 ஆண்டிற்கான நூலக வரி வசூல் தொகை ரூபாய் ஆறு லட்சத்திற்கான காசோலையை தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் நூலக அலுவலரிடம் காசோலை மூலம் வழங்கினார். உடன் அலுவலக பணியாளர்கள்.
03.02.23( வெள்ளிக்கிழமை)  முந் நாளன்று நடைபெற்ற செங்கல்பட்டு மாவட்ட நூலக ஆய்வாளர் திரு.த.இளங்கோ அவர்களின்  இளைய மகன் அழகு விக்னேஷ்- நாக கன்னிகா திருமண விழாவில் நூலக நண்பர்கள். 


என்,ஜி,ஓ சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு,A.செல்வராஜ் சார் இன்று 31.1.2023 ஓய்வு பெறுகிறார் என்று செய்தி அறிந்தேன், மாற்று சங்கத்தைச் சார்ந்தவர்களையும் நேசிக்கும் நல்ல பண்பாளர், சென்னை மாவட்டத்தில் சாஸ்திரி நகர் நூலகத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தாலும், அனைத்து நூலகர்களிடம் அன்பாக பழகக்கூடியவர் ,அனுபவத்தின் பேரில் இதனைக் கூறுகிறேன் ஓய்வு பெறுகிறார் என்பது வேதனையான விசயம், வயது முதிர்வு ஏற்பட்டால் ஓய்வு பெற்றாகவேண்டும்,
ஓய்வு என்பதுவயதின் அடிப்படையில்தான், ஆனால் தாங்கள் என்றும் இளமையோடு காணப்படுகிறீர்கள், தாங்கள் பல்லாண்டு வாழ,எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். - நா. அண்ணாதுரை, சென்னை.

வாழ்வில் மனிதர்கள் பலர் வழித்தடங்களை பின் தொடர்வார்கள் சிலர் புதிய பாதைகளை உருவாக்குவார்கள் அப்படி உருவாக்குபவர்கள் தலைவராக ஆக மாறுவார்கள் அப்படி தலைவராக மாறி பல சங்க நிர்வாகிகளுக்கு முன் உதாரணமாக திகழக்கூடிய தமிழ்நாடு அரசு பொதுநலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் அன்பு சகோதரர் ஆ.செல்வராஜ்  அவர்களின் வயது முதிர் காரணமாக பணி ஓய்வு பெறுவது என்பது வெற்றி வீரனாக சங்க முன்னோடியாக திகழ்வது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சிவாழ்க உங்கள் புகழ் நிலைத்து நிற்க உங்கள் சேவை

 வாழ்த்துக்களுடன், இரா. நந்தகுமார், கிருஷ்ணகிரி.
 
மதுரை மாவட்ட இருப்பு சரிபார்ப்பு அலுவலருமான டேவிட் ஞானராஜ் அவர்கள் பணி நிறைவு பாராட்டு விழா  (29.02.23, ஸ்ரீவில்லிபுத்தூர் நூலகம்).

தென்காசி மாவட்ட அளவிலான  முதல் NMMS இலவச மாதிரி தேர்வு

    பள்ளிக் கல்வித்துறை, தென்காசி வ.உ.சி வட்டார நூலகம், இசக்கி வித்யாசரம் பள்ளி மேலகரம் எல்என் சேரிடபில் டிரஸ்ட் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ்  இணைந்து இசக்கி வித்யாசரம் பள்ளியில்  29.01.2023 ஞாயிற்று கிழமை, காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை NMMS  இலவச மாதிரி தேர்வினை  நடத்தியது.
தென்காசி மாவட்ட அளவில் சங்கரன்கோவில், புளியங்குடி , சுரண்டை, செங்கோட்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம் , கடையநல்லூர், தென்காசி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து   21 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளிகள் , உயர்நிலைப் பள்ளிகள் , மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள்  262 பேர்கள் தேர்வினை எழுதினர்  .இத்தேர்வில் கலத்து கொண்ட மாணவ மாணவிற்கு மேலகரம் எல் என் டிரஸ்ட் நிறுவனர் நீலகண்டன்  தேர்வினில் எளிதாக  வெற்றி பெறுவதற்கான வழிகள் ,பாடக் குறிப்புகள்,தேர்வு முறைகள் , தேர்விற்கான பயிற்சி வழங்கி உரை ஆற்றினார்கள். இசக்கி வித்யாஷரம் பள்ளி மேலாளர்  ராம்குமார் , வட்டார கல்வி அலுவலர்  இளமுருகன் கிளை நூலகர் சுந்தர்  இலவச மாதிரி தேர்வு வினா தயாரித்து வழங்கிவரும் கரிசல் குடியிருப்பு ஆசிரியர்  பாபு வேலன்   நன்கொடையாளர் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் அட்வைசர்கள் முகிலரசன்   ஏஞ்சல் , நூலகர் ஜூலியாராஜ செல்வி வாசகர் வட்ட குழந்தைஜேசு முருகேசன் செய்திருந்தனர்.



பணி நிறைவு பாராட்டு விழா 
பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் மரியாதைக்குரிய 
தோழர் . பிரபாகரன் அவர்கள் இன்று (31-01-2023)பணி நிறைவு பெற உள்ளார் அன்னார் அவர்கள் பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு நூலக துறையில் உள்ள நீண்ட கால கோரிக்கைகளை முன்னெடுத்து அரசு ஊழியர் சங்கத்தின் வாயிலாகவும் பொது நூலகத் துறை அலுவலர் சங்கத்தின் வாயிலாகவும் அண்ணார் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி அளப்பரியது. இவருடைய காலத்தில் பொதுநூலத்துறை சிறப்பு பெற்று விளங்கி வருகிறது என்பது நாம் அறிந்த ஒன்று. தலைவர் அவர்கள் அனைவரிடத்திலும் அன்பாக பழகக் கூடியவர் இனிமையாக பேசக்கூடியவர் கோபம் என்னவென்றே தெரியாத நல்ல உயர்ந்த மனிதர்  பொறுமைக்கு சொந்தக்காரர். யாரிடத்திலும் எந்த நேரத்திலும் கௌரவம் பார்க்காத சிறந்த தலைவர்.  நமது தாய் சங்கமான அரசு ஊழியர் சங்கத்தின் மீது அதிக காதல் கொண்டவர் தலைவர் அவர்கள் பல ஆண்டு பல்லாயிரத்தாண்டு நோய் நொடி இன்றி உற்ற உறவினர்களோடு நண்பர்களோடு சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களிடத்திலும் சீரும் சிறப்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று நீலகிரி மாவட்ட பொது நலத்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகின்றோம்.
- குன்னூர் செந்தில்.


கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம்.

         ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையும்ää ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளையும் இணைந்து நாளை 14.02.2023 அன்று மாநில அளவிலான  ஒரு நாள் கருத்தரங்கம் நான்கு அமர்வுகளாக நடைபெற உள்ளது. கோ. இளவழகன் அவர்கள் “மின் வளங்களின் வகைகள் மற்றும் நூலகத்தில் அவற்றின் பயன்பாடு” என்ற தலைப்பிலும்ää தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணை நூலகர் முனைவர் எஸ். தனவந்தன் அவர்கள் “வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் நூலகங்களின் பங்கு” என்ற தலைப்பிலும்ää மூன்றாம் அமர்வில் எம்.பி முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியின் நூலகர் முனைவர். கே. ராமசாமி அவர்களும்ää நான்காம் அமர்வில் ரெ.வ.ஜேக்கப் நினைவு கிறிஸ்துவ கல்லூரியின் நூலகத்துறை தலைவர் முனைவர். வி.பி.ரமேஷ்பாபு அவர்களும்  பேச இருக்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர் முனைவர். வே. செந்தூர் வேல்முருகன் செய்துள்ளர்.
பழவூர் கிளை நூலகம் மற்றும் திருநெல்வேலி சிவராஜ வேல் IAS  அகாடமி இணைந்து நடத்தும் இலவச TNPSC GROUP II & IIA Mains மாதிரி தேர்வு.

12/02/2023 (Sunday)
10 am Unit 1 Full Tests
2   Pm Unit 2 Full Tests

18/02/2023 (Saturday)
9   am Unit 3 Full Tests
12 am Paper 1 (Tamil Eligibility Full Test - 1)
3  pm Paper 2 (Full Mock Test - 1)

19/02/2023 (Sunday)
10 am Paper - 1(Tamil Eligibility Full Test -2)
2. Pm Paper -2(Full Mock Test -2)

Registration
9442654679
9578655769
Librarian
Branch Library Pazhavoor

உலகில் அதிக மகிழ்ச்சியானவர்கள் 
முயற்சி என்பது விதை போல..
அதை விதைத்தக் கொண்டே இருங்கள்..
விதைத்த பின் முளைத்தால் மரம். இல்லையென்றால் அது மண்ணிற்கு உரம் ..!
முயற்சி வெற்றியடைந்தால் முன்னேற்றம்...தோல்வியடைந்தால் அனுபவம்..
https://sites.google.com/view/branchlibrarykadathur/home?authuser=0

நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய  செய்திகள் கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். .
மின்னஞ்சல்:  noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் :  8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

Comments

  1. நூலகம் மற்றும் நூலக வளர்ச்சிபணிகள் குறித்த செய்திகள் பரவலாக இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி. இதேபோல் நூலக/நூலக தேவைகள் குறித்த செய்திகள் இடம்பெற்றால் நிறைய குறைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். படைப்புகள் ஏதும் இல்லாததும் ஒரு குறை! சிறைச்சாலை நூலகம் செய்தியைக் காணோமே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி.
      நூலகர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றிய செய்திகள் அனுப்பினால் சேர்த்துக் கொள்வோம்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 29

நூலகர் செய்திமடல் 30

நூலகர் செய்திமடல் 31