Posts

Showing posts from March, 2023

நூலகர் செய்திமடல் 8

Image
ஆசிரியர் உரை: நூலகர்களுக்கு பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவை:      தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, அமேசான் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அமேசான் கிண்டிலில் உள்ள 10 லட்சம் நூல்களை இனி அரசு பொது நூலகங்களில் அமர்ந்தபடி படிக்க முடியும்.      டிஜிட்டல் தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கில், 10 ஆயிரம் புத்தகங்கள் கணினியில் பிடிஃஎப் வடிவில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. மேலும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான இ-பருவ இதழ்கள் கணினி டெஸ்க்டாப்பில் படிக்கக் கூடிய வசதியும் உருவாக்கித் தந்துள்ளனர். tamilnadupubliclibraries.org என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து, Digital Library மூலம் அமேசான் கிண்டில் பக்கத்திற்கான வசதியைப் பெறலாம். மின்னூலாக்கத்தில் magsters என்ற வாசிப்புத் தளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில்தான் நாளேடுகள், மாத இதழ்கள் எனப் பலவற்றையும் நாம் படிக்க முடியும்.     இந்த  திட்டத்திற்காகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள 500 பொது நூலகங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படுத்தப்பட உள்ளது. அதில் தற்போது முதல் கட்டமாக ...

நூலகர் செய்திமடல் - 7

Image
ஆசிரியர் உரை:  நூலக நண்பர்களுக்கு வணக்கம்.      நூலகர் செய்தி மடலை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கு நன்றி. நூலகர் செய்தி மடலின் ஏழாவது இதழ் இது.      அடுத்த வாரம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. நாம் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு இருக்கிறோம். குறிப்பாக, ஊர்ப்புற நூலகர்களுக்கு முறையான ஊதிய அறிவிப்பு எதிர்பார்க்கின்றனர்.  பழைய பென்ஷன் திட்டம் அறிவிப்பு வருமா என்று எதிர்பார்க்கிறோம். எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.      பல மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடந்துள்ளன. இன்னும் சில மாவட்டங்களில் நடைபெற உள்ளன. ஆரம்பத்தில் புத்தகக் கண்காட்சியில் நூலகர்களின் பங்களிப்பு குறைவாக இருந்தது. இப்பொழுது புத்தகக் கண்காட்சியில் நூலகர்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.     அண்மையில் கோவையில் சிறுவாணி இலக்கிய திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதில் நூலகர்களின் பங்களிப்பு அதிகம். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.      நூலகங்களில் wifi திட்டத்தை அமைச்சர் தொடக...