ஆசிரியர் உரை:
நூலக நண்பர்களுக்கு வணக்கம்.
நூலகர் செய்தி மடலை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கு நன்றி. நூலகர் செய்தி மடலின் ஏழாவது இதழ் இது.
அடுத்த வாரம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. நாம் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு இருக்கிறோம். குறிப்பாக, ஊர்ப்புற நூலகர்களுக்கு முறையான ஊதிய அறிவிப்பு எதிர்பார்க்கின்றனர். பழைய பென்ஷன் திட்டம் அறிவிப்பு வருமா என்று எதிர்பார்க்கிறோம். எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
பல மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடந்துள்ளன. இன்னும் சில மாவட்டங்களில் நடைபெற உள்ளன. ஆரம்பத்தில் புத்தகக் கண்காட்சியில் நூலகர்களின் பங்களிப்பு குறைவாக இருந்தது. இப்பொழுது புத்தகக் கண்காட்சியில் நூலகர்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அண்மையில் கோவையில் சிறுவாணி இலக்கிய திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதில் நூலகர்களின் பங்களிப்பு அதிகம். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நூலகங்களில் wifi திட்டத்தை அமைச்சர் தொடக்கி வைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்தின் பயன்கள் பயனாளர்களை முறையாக சென்றடைய நூலகர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பது அவசியம்.
நூலகத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை TNPSC அறிவித்திருக்கிறது. நூலகர்கள் பலர் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்க வாழ்த்துகள்.
நன்றி.
மீண்டும் சந்திப்போம்.
- சி.சரவணன், ஆசிரியர்,
நூலகர் செய்திமடல்.
சிறுவாணி இலக்கிய திருவிழா:
மாநில பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் சிறுவாணி இலக்கிய திருவிழா கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நேற்றும், இன்றும் (பிப்ரவரி 25 & 26) நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் எழுத்தாளர்கள் பலர் பங்கேற்று இலக்கியம் சார்ந்த பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். இதில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகளும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவு விழா பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
சிறுவாணி இலக்கிய திருவிழாவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொது நூலக இயக்கத்தின் இயக்குனர் இளம் பகவத், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசியதாவது: "இரண்டு நாள் இலக்கிய விழா எழுச்சியோடும் சிறப்போடும் நடைபெற்றுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி காலத்தில் பிற துறைகளை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது போல, தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காகவும், வளர்ச்சிக்காகவும் இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்று இலக்கிய திருவிழாக்களின் மூலம் தான் தாய் மொழியை பாதுகாக்க முடியும். நெல்லை, கோவையை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இலக்கிய திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாவது சுவையான நீர் சிறுவாணி என்பது போல், இப்பகுதியைச் சேர்ந்த மக்களும் இனிமையானவர்கள். இந்தப் பகுதி எப்படி வணிகத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றதோ, அதேபோல் இலக்கியத்திற்கும் புகழ்பெற்ற பகுதியாக கொங்கு பகுதி உள்ளது. இங்கிருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய படைப்பாளிகள் உருவாகியுள்ளனர்.
இங்குதான் கலைஞரின் தலைமையில் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயமாகும். ஆண்டுதோறும் இதுபோன்ற இலக்கிய திருவிழா நடத்தப்பட வேண்டும் என தமிழக முதல்வர் விருப்பப்படுகிறார். அதை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.
இலக்கிய படைப்பாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு, அவர்களது வாழ்வை முன்னேற்றும் வகையிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்று இலக்கிய திருவிழாக்களின் மூலம் எழுத்தாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பெருமை சேர்ப்பது மிக முக்கியமான அம்சமாகும். இலக்கிய படைப்பாளிகள் அவர்களுக்காக மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் அவர்களது இலக்கியப் பணிகளை தொய்வின்றி தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு பேசினார்.
முன்னதாக, அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியான 'கல்லூரிக் கனவு' எனும் நிகழ்ச்சி அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மணலூர்பேட்டை நூலகத்தில் இலவச கம்பியில்லா (வைஃபை) இணையதள சேவை* தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் மணலூர்பேட்டை கிளை நூலகத்தில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச கம்பியில்லா (வைஃபை) இணையதள சேவை தொடங்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை மாநில கோரிக்கையின் போது தமிழகத்தில் இயங்கும் பொது நூலகங்கள் வாயிலாக ஏராளமான மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் பயனடைந்து வருகின்றனர். தற்போது தமிழக அரசு மற்றும் மத்திய அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்கள் நூலகங்களை அணுகி எளிதாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களின் வசதிக்காக நூலகங்களில் வைஃபை வசதி, மின் சேவை ஆகிய திட்டங்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மொத்தமுள்ள 4,000க்கும் மேற்பட்ட நூலகங்களில் முதல் கட்டமாக 500 நூலகங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று புதன்கிழமை ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆனைக்குழுவின் கீழ் இயங்கும் மணலூர்பேட்டை கிளை நூலகத்தில் இலவச கம்பியில்லா இணையதள சேவையை கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பெ.அரவிந்தன் அவர்கள் தொடங்கி வைத்து போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் பொது நூலகங்களை பயன்படுத்தினால் உயர்ந்த பதவிகளை அடையலாம் என்றும், பொதுநூலகத்துறை சார்பில் ஆற்றி வரும் செயல் திட்டங்கள் பற்றியும் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டக் குழுத்தலைவர் கு.ஐயாக்கண்ணு தலைமை வகித்தார்.
அரிமா சங்க மாவட்ட தலைவர் அம்மு ரவி, வாசர் வட்டக் குழு துணைத் தலைவர்கள் எம்.எஸ்.நடராஜன், இளங்கவி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசகர் வட்ட பொருளாளர் வீர.சந்திரமோகன் வரவேற்று பேசினார்.
நல்நூலகர் மு.அன்பழகனிடம் மணலூர்பேட்டை அரிமா சங்கத் தலைவர் லயன்ஸ் ராசி.துரை ரூபாய் ஆயிரம் செலுத்தி புரவலராக இணைந்தார்.
திருக்கோவலூர் வாசகர் வட்டக்குழுத் தலைவர் கவிமாமணி சிங்கார. உதியன் நூலகப் புரவலர்களுக்கு பட்டயம் வழங்கிப் பாராட்டி பேசினார்.
பேரூராட்சி மன்ற உறுப்பினர் சாந்தா, வர்த்தகர் சங்க செயலாளர் கு.சிவகுமார், நூலகப் புரவலர்கள் ந.சரவணன், நா.பெரியான், கு.சிவராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பணியாளர்கள் ச.தேவி கி.பாஸ்கரன், பெ.விக்னேஷ் செய்திருந்தனர்
முதுகலை தாவரவியல் ஆசிரியர் அரிமா தா.சம்பத் நன்றி கூறினார்.
NMMS– தேசிய திறனறி தேர்வு வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு விழா
பள்ளிக்கல்வித்துறை வ.உ.சி.வட்டாரநூலகம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்,தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மேலகரம்; சக்தி சங்கீதா அகாடமி இணைந்து 2022 ம் ஆண்டு தென்காசி மாவட்ட அளவில் NMMS தேர்வெழுதிய 8-ம் வகுப்பு மாணவ செல்வங்களுக்கு பயிற்சியும் வாரவாரம் மாதிரித்தேர்வுகளையும் இலவசமாக வழங்கியதின் பயனாக தென்காசி மாவட்ட அளவில் 108 பள்ளிகளைச் சார்ந்த 357 மாணவ செல்வங்கள் வெற்றி பெற்று மாதம் ரூ.1000 வீதம் 48 மாதங்களுக்கு ரூ.48000- அரசின் உதவித்தொகை பெறத் தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்கள் பயிற்சி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளைப் பாராட்டி பரிசளிப்பு விழா தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.துரை.இரவிச்சந்திரன் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.
திரு.மு.கபீர் , முதன்மை கல்வி அலுவலர், திரு.லெ.மீனாட்சிசுந்தரம் மாவட்ட நூலக அலுவலர், திரு.ஆர்.அலோசியஸ் கிறிஸ்டோபர், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) . திரு.ஆ.ராமசுப்பு, மாவட்ட கல்வி அலுவலர்,(தனியார் பள்ளிகள்) தென்காசி, திரு.ரஹ்மான்கான் நிர்வாக இயக்குநர் VTSR Silks, திரு.எஸ்.கே.பாலசுப்பிரமணியன் தலைவர் வ.உ.சி வட்டார நூலக வாசகர் வட்டம் ஆகியோர் முன்னிலை உரை ஆற்றினர். சூ.பிரமநாயகம் வட்டார நூலகர்.வரவேற்புரை வழங்கினார்.
இளமுருகன் வட்டார கல்வி அலுவலர், மாரியப்பன் வட்டார கல்வி அலுவலர், செந்தூர் பாண்டி தலைமை ஆசிரியர், இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.ஆரோக்கியராசு தலைவர் தென்காசி மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.செய்யது இப்ராஹிம் மூசா. தென்காசி மாவட்ட செயலாளர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
பாரதிராஜா துணைத் தலைவர் வாசகர் வட்டம்.
ராமசுப்பிரமணியன் மேலாளர் எஸ்.பி.ஐ.லைப்இன்சூரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்
சுந்தர் கிளை நூலகர் நன்றி தெரிவித்தார்.108 பள்ளிகளை சார்ந்த 357 மாணவச்செல்வங்களுக்கு மெடல் சான்றிதழ் பள்ளி களுக்கு கேடயம் பயிற்சியாளர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
மாபெரும் தமிழ் கனவு நிகழ்வில் கலந்து கொள்ள வண்டலூர் கிரசண்ட் பொறியியல் கல்லூரிக்கு இன்று ( 16.02.23) வருகை தந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் மெய் நிகர் நூலகம் சம்பந்தமாக கலந்து ரையாற்றிய இனிய தருணம்.மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதாகவும், வரும் ஜூன் 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதில் கட்டிடத்திற்கு ரூ.99 கோடியும், புத்தகம் வாங்குவதற்கு ரூ.10 கோடியும், தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
கலைஞர் நூலகம் கீழ்தளம், தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடியில் இந்த நூலகம் கட்டப்பட்டு வருகிறது. கடந்தாண்டு, ஜன. 11ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். உலகத்தரம் வாய்ந்த இந்த நூலகத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர துரிதமாக பணிகள் நடந்து வருகிறது.
6 தளங்கள் நூலகத்தில் கீழ்தளத்தில் வாகனங்கள் நிறுத்தவும், தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி அமர்ந்து படிக்கும் வகையில் தேவையான புத்தகங்கள், இருக்கைகளும், 250 இருக்கைகள் வசதியுடன் கூடிய கலையரங்கமும் அமைக்கப்படுகிறது. முதல் தளத்தில், குழந்தைகள் நூலகம், வாசகர்கள் தினசரி, வார, மாத பத்திரிகைகளை வாசிப்பதற்கான வசதிகளும், 2வது தளத்தில் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் தனிப்பிரிவாக இடம் பெறுகிறது
நூலகப் புத்தகங்கள் இத்துடன் கலைஞர் ஆய்வகமும் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வரங்கில் அவரின் 4 ஆயிரம் ஆய்வறிக்கை புத்தகங்கள் இடம்பெறுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்காக 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படவுள்ளன. 3வது தளத்தில் 63 ஆயிரம் புத்தகங்களுடன் தமிழ், இலக்கியப்பகுதி தளமாகவும், 4வது தளத்தில் ஆங்கில நூல்கள் பகுதியாகவும், 5வது தளத்தில் ஐம்பெரும் காப்பியங்கள், பதினெண்கீழ் கணக்கு உள்ளிட்ட அரிய வகை புத்தகங்களின் பகுதியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. 6வது தளத்தில் திறந்தவெளி படிப்பகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
கலைஞர் நூலக சிறப்புகள் கட்டிடத்தின் முழு வடிவிலான கட்டுமான பணிகள் நூறு சதவீதம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்தது. இதனைத்தொடர்ந்து, மின் விளக்குகள், ஏசி மிஷின், 6 மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் முடிந்தன. கட்டிடத்தின் நடுப்பகுதியில் சூரியவெளிச்சம் கிடைக்கும் வகையில், கண்ணாடிப்பேழையிலான கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கார வடிவமைப்புடன், இன்டீரியர் டெகரேஷன் எனும் உள் அரங்குகள் வடிவமைப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளது. வெளிப்புற அலங்கார கட்டுமான பணிகளும் முடிந்து, ஜெர்மன் கண்ணாடிச்சுவர் பூச்சு பூசப்பட்டுள்ளது.
95 சதவிகித பணிகள் நிறைவு அதில் கலைஞரின் உருவம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நூலகத்தின் முன்பகுதியில், கலைஞரின் உருவச்சிலை அமைக்கும் பணியும், மாடித் தோட்டத்துடன் நூல்களை படிப்பதற்கான வசதியும், கலைக்கூடமும் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.10 கோடி மதிப்பிலான 2.50 லட்சம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தற்போதுவரை, நூலகத்தில் 95 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதி பணிகளும் விரைவாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிரது.
ஜூன் 3 கலைஞர் நூலகம் திறப்பு இதனால் கலைஞர் நூலகம் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று திமுக ஆட்சிக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வரும் டிசம்பர் மாதம் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6 மாதத்திற்கு முன்பாகவே கலைஞர் நூலகப் பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை வரும் ஜூன் 3ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளன்று, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கப் போகிறார் என்று அறிவித்துள்ளார்.
|
இராமநாதபுரம் நடமாடும் நூலகத்தின் எழில்மிகு தோற்றம்.
|
27 02 2023 today new patron for samathur Branch Library பாண்டுரங்கன் 40 bazaar st Pollachi 146th patron sir.
தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வர் அவர்களின் முதன்மை செயலாளர் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய உதயசந்திரன் அவர்களின் கனவு திட்டமான மாபெரும் தமிழ் கனவு நிகழ்வில் நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் தேனி மாவட்ட நூலக ஆனைக்குழுவின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள புத்தக கண்காட்சியை மதிப்பிற்குரிய தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வை.
செங்கோட்டையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான மாநில அளவிலான மாரத்தான்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் செயல்பட்டு வரும் ராஜ் ராஜ்ஜியம் அறக்கட்டளை (R2PC Trust) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் மஞ்சப்பை பயன்பாட்டை வலியுறுத்தி மாநில அளவிலான மாரத்தான் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அரசு வனத்துறை சட்டப் பணிக்குழு மற்றும் செங்கோட்டை நூலக வாசகா் வட்டம்இணைந்து இப்போட்டியே நடத்தியது இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 350 க்கும் மேற்பட்டவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் முதியோரும் இப் போட்டியில் கலந்து கொண்டனர். குறிப்பாக சிவகாசியை சேர்ந்த 89 வயது முதியவரான ஜி டி. ராஜேந்திரன் என்பவர் கலந்து கொண்டு போட்டியில் குறிப்பிட்ட 10 கிலோமீட்டர் தூரத்தையும் முழுவதுமாக கடந்தார் அவருக்கு விழா குழு சார்பில் சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியானது ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் மற்றும் அனைத்து நபர்களுக்குமான 4 பிரிவுகளாக நடைபெற்றது இப்போட்டி செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் தொடங்கி கண்ணுபுளி மெட்டு வரை சென்று மீண்டும் தாலுகா அலுவலகம் வந்தடையும் விதத்தில் 10 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. முதல் பிரிவு ஆண்களுக்கான பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட போட்டியை செங்கோட்டை உாிமையியல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜா தொடங்கி வைத்தார் பின்னர் அப்போட்டியில் வெற்றி பெற்ற மாரி சரத் என்பவருக்கு ரொக்க பரிசாக ரூபாய் பத்தாயிரம் இரண்டாம் இடம் வென்ற அஜித்குமார் என்பவருக்கு ரூபாய் 7000 மூன்றாம் பரிசு வென்ற அகில் ராம் என்பவருக்கு ஐந்தாயிரமும் ரொக்க பரிசை வழங்கினார். இரண்டாவது பிரிவான பெண்களுக்கான பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியை தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் கொடியா செய்து துவக்கி வைத்தார் பின்னர் இப்போட்டியில் முதல் பரிசை வென்ற லதா என்பவருக்கு பரிசுத் தொகையாக ரூபாய் 7000 இரண்டாம் இடம் பெற்ற கௌசிகா என்பவருக்கு ரூபாய் ஐந்தாயிரம் மூன்றாவது இடம் பெற்ற லாவண்யா என்பவருக்கு ரூபாய் 3000 மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மூன்றாவது போட்டியாக 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சிறுவர்களுக்கான போட்டியை செங்கோட்டை புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் ரவிசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்து வெற்றி பெற்றவா்களுக்கு பாிசுகளை வழங்கினாா். நான்காவது பிரிவு போட்டியான 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியர்களுக்கான போட்டியை செங்கோட்டை அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்து வெற்றி பெற்றவா்களுக்கு பாிசுகளை வழங்கினாா்.. இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை அருண்குமார் இரண்டாவது பரிசை சுமன் கதிர் மூன்றாவது பரிசை ஆதிநாத் ஆகியோர் வென்றனர் பெண்கள் பிரிவில் முதல் பரிசை ஷிபாயா இரண்டாவது பரிசை மாரி பவானி மூன்றாவது பரிசை ஆசிபா ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ்களை ரவிசங்கர் மற்றும் செங்கோட்டை நூலக வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன், நூலகர் ராமசாமி ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் புளியரை மாயா கன்ஸ்ட்ரக்சன் மாயா, சுவர்ணபூமி செல்வகணேஷ், நாகூர் மீரான், ஆகாஷ் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் மாரியப்பன், குற்றாலம் ரோட்டரி சங்கத் தலைவர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், லிங்கராஜ் ,கதிரவன், விழுதுகள் சேகர், வழக்கறிஞர் காா்த்திகைராஜன், வனத்துறை பிரகாஷ் ,தமிழ்நாடு சிறப்பு காவல்துறை 5ம் அணி ராஜ்குமார், உடற்கல்வி ஆசிரியர் கோதர் ,மாதவன் ,அபு, ஆசன் ,பாதுஷா, குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர்கள் தென்காசி ஆகாஷ் ஐஏஎஸ் அகாடமி ஆசிரியர்கள் இவா்களுடன் ராஜ் ராஜ்ஜியம் அறக்கட்டளை நிறுவாகிகள் ஜீவா, பூசத்துரை, சுதாகா், கோட்டைச்சாமி, பொியசாமி, தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் ராஜ் ராஜ்ஜியம் அறக்கட்டளை நிறுவனர் அனுராதா நினைவு பாிசு வழங்கினாா். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ்கள், மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.
புரவலராக இணைந்த மணமக்கள்:
தேனிமாவட்டம் தென்கரைபெரியகுளம் முழுநேர கிளைநூலகத்தில் போட்டித்தேர்வு பகுதியில் பயிற்சி பெற்ற மாணவன் ரா.கர்ணன் (தமிழ்நாடு காவல்துறை) ரா.பாண்டீஸ்வரி (தமிழ்நாடு காவல்துறை) 23.02.23 திருமண நாளில் தென்கரை நூலகத்தில் புரவலராக ரூபாய் 1000/- வழங்கி 279 - வது புரவலராக இணைந்தனர்.தித்திக்கும் திருமணம் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. நூலக ஆர்வலர் மு.அன்புக்கரசன், வழக்கறிஞர் G.K.மணிகார்திக் பொறியாளர் பா.நித்யானந்தம், நல்நூலகர் வெ.விசுவாசம், நல்நூலகர் ஆ.சவடமுத்து
அனைத்து அரசு ஊழியர்களின் கவனத்திற்கு
NHISகாப்பீட்டுத்தொகை அறிந்ததும் அறியாததும் ....
கோவை மாவட்டம் அன்னூர் காவல்நிலைய தலைமை காவலர் திரு.செல்வராஜ் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000.
இதில் நமது NHIS ரூ.1,70,000 மட்டும் காப்பீட்டுத் தொகையாக அனுமதித்தது.
அதற்குமேல் தர மறுத்து விட்டது.
தலைமை காவலர் திரு.செல்வராஜ் அவர்கள்,கோவை மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவரது தொடர் முயற்சியினால் சாதகமானதீர்ப்பு பெறப்பட்டது.
தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,
அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் NHIS ஏற்கவேண்டும்.
(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)
01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.
அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.
ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும். அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ளஅறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..
NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018
GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும்
http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_391_2018.pdf
கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.
கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.
இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..
டிஸ்சார்ஜ் ஆகாமல் இருந்தால் full claim வாங்கிவிடலாம்..
(அட்மிசன் போட்ட பொழுது முன் பணமாக கட்டிய தொகையையும் திரும்ப வாங்க வேண்டியது நமது உரிமை)
டிஸ்சார்ஜ் ஆன பிறகு full claim வாங்க நினைத்தால் வழக்கு பதிவு செய்து மட்டுமே வாங்க இயலும்..
அரசாணைகள் ஏதேனும் தேவைப்படின் கீழே சொடுக்கவும்- search-ல் அரசாணை எண்ணை பதிவு செய்து அரசாணையை பெறலாம்..
http://www.tn.gov.in/go_view/dept/9
*New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்
http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf
துளிர் IAS Academy சார்பாக group 2. தமிழ்( mock test)20/2/23- அன்று திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் நூலகர் திருமதி பாமாவதி அவர்களுக்கு வாசகர் வட்டம் சார்பாக பாராட்டு விழா
2018 ல் நல்நூலகர் விருது மற்றும் 2022 ல் மாநில அளவில் அதிக நன்கொடைகள் பெற்றதற்காக விருதினைப் பெற்றதற்காக நன்றி பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 2000(இரண்டாயிரம்) பேர் நன்கொடை யாளர்கள் மூலம் நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலும 2 நன்கொடையாளர்கள் மற்றும் 2 புரவலர்கள் சேர்க்கப்பட்டனர்.விழாவில் கங்கை கொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளி , கங்கை கொண்டான் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, கங்கை கொண்டான், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடகரை நம்ம ஊரு குளோபல் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் சார்பாக நூலகருக்கு வெள்ளியிலான பரிசு பொருட்கள் மற்றும் பட்டுப்புடவைகள், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் வாசகர் வட்டம் சார்பாக விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய விருந்தும் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.நூலகர்.சு.பாமாவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.
கரூர் மாவட்ட மைய நூலக கூடுதல் கட்டடத்திற்கு ரூ. 6.90 கோடி நிதி ஒதுக்கியதற்காக மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களுக்கு நூலகத்துறை சார்பில் நன்றி தெரிவித்தபோது. (நாள்: 28.02.2023)
கைவிடப்படும்
போது
கதறியழாதே
அது
உன்னை
இன்னும்
பலவீனப்படுத்திவிடும்..
கைவிடப்படும்
போது
கருணைக்காக
கையேந்தாதே
அது
உன்னை
இன்னும்
பரிதாபத்திற்
குரியவராக்கி விடும்..
கைவிடப்
படுதலென்பதொரு
வரம்;
அப்போதுதான்
யாவற்றையும்
உன்னால்
தெள்ளத்தெளிவாக
பார்க்க முடியும்..
கைவிடப்
படுதலென்பதொரு
வாய்ப்பு;
அப்போதுதான்
யாவற்றையும்
உன்னால்
மிகச்சரியாக
புரிந்துக்
கொள்ள முடியும்..
யாரேனும்
உனை கைவிடத்
துணிந்தால்
அங்கேயே
கலங்கி
நின்று விடாதே..
அவர்களின்
போலி நியாய
தர்மங்களை
யெல்லாம்
எட்டி உதைத்து விட்டு
அவசரமாக
அங்கிருந்து
வெளியேறி விடு..
சிறிது
நேரத்தில்
புறப்பட
தயாராகிக்
கொண்டிருக்கிறது
உனக்கான
ரயில்..!
- ரிஸ்கா முக்தார்.
சிறைவாசிகளை சீர்த்திருத்தும் நோக்கில் வாசிப்பை உக்கப்படுத்த புத்தக தானம் திட்டத்தின் கீழ் கன்னிமரா நூலக ஊழியர்கள் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டது.
ABCD...
In childhood
A=Apple
B=Ball
C=Cat
D=Doll
E=Elephant
In young age_
A=Android
B=Bluetooth
C=Currency
D=Dance
E=Enjoy
In old age
A=Arthritis
B=Blood pressure
C=Cholesterol
D=Diabetes
E =Emergency
ABCD never leaves us alone.
தென்காசி மாவட்டம் மாபெரும் தமிழ்க்கனவு சிறப்பு விருந்தினர்களுடன் நூலகர்கள்
ஹைக்கூ ...
* பட்டத்தைவிடவும்
உயரமாக பறந்தது
குழந்தையின் மனம்!
* காகிதத்தை கிழித்ததும்
சத்தம் வந்தது
மரத்தின் அழுகை!
- மு.குமரன் ஊர்ப்புற நூலகர் நாய்க்கன்கொட்டாய்.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,
நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...
பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....
நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத் தான்...
1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101
2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102
3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104
4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105
5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106
6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107
7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108
8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109
9 .Kanyakumari # D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110
10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112
11 .Krishnagiri# 3/E11C,2Nd Floor, Opposite. Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113
12 .Madurai# 46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114
13. Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164
14 .Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116
15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117
16 .Perambalur# Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118
17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119
18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123
19 .Salem# No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124
20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125
21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126
22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127
23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128
24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135
25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136
26. Tirunelveli# 4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelveli – 627001 Mr.Ramasamy 7373703132
27 .Tiruppur # 284,Kumaran Plaza,Kumaran Road Tirupur-641601. Mr.Murugan 7373703133
28 .Trichy # No.22/7, 1St Floor, M.N.S. Complex, Ulaganathapuram, Tvs Tollgate, Trichy - 620 020 Mr. Rajamanickam 7373703180
29 .Tuticorin # 36B,In Complex, Opp Kamaraj College, Nr.Head Post Office,Tiruchendur Road, Tuticorin-628003 Mr.Ukkirapandi 7373703129
30 .Vellore # 297H,1St Floor,Ktj Complex,Rto Road,Sathuvacheri,Vellore-632009. Mr.Vinayagamoorthy 7373703137
31 .Villupuram# 9,2Nd Floor,District Collector Office, Villupuram District-605103. Mr.Raju 7373703138
32 .Virudhunagar # 103/B2, Katcheri Road, 2Nd Floor Bank Of India Upstairs Virudhunagar District – 626001 Mr.Rafik Raja 7373703139.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெருங்கட்டூர் ஊர்புற நூலகம் இணைந்து முப்பெரும் விழா நடைபெற்றது. (1) தன்னம்பிக்கை பயிற்சி (2) உடல் நலமும் மனம் நலமும் பேச்சு (3) உறுப்பினர்கள், புரவலர்கள் சேர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆ. ஆயப்பன் தலைமை வகித்தார். ஆசிரியர் ரா. குருமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வி, ஆசிரியர் இ. கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு உரை வழக்கறிஞர் ப. கோபாலகிருஷ்ணன் அவர்கள் மாணவர்கள் இடையே தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார். மாணவர்கள் அப்துல் கலாமை போன்று கனவு கண்டு நம்முடைய வாழ்க்கை மேம்படுத்தி வருங்கால இந்தியாவின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார். உடல் நலமும் மனம் நலமும் குறித்து லயன் சங்க மாவட்ட சேவை தலைவர் தி. வடிவேல் அவர்கள் மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார். மாணவர்கள் நம்முடைய உண்ணும் உணவில் சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்றும் ஊட்டச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள் சத்தான பொருட்கள் மட்டும் உண்ண வேண்டும் என்று பேசினார். நிகழ்வில் புரவலர்கலாக வழக்கறிஞர் ப. கோபாலகிருஷ்ணன், ஆசிரியர் வி. லோகநாதன் மற்றும் பள்ளி மாணவர்கள் 50பேர் உறுப்பினர் சேர்ந்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர் ஜா. தமீம் செய்திருந்தார்.
செங்கோட்டை நூலகத்தில் விழுதுகள் சேகருக்கு பாராட்டு விழா
செங்கோட்டை நூலகத்தில் வைத்து நூலக போட்டித் தேர்வு பொறுப்பாளர் விழுதுகள் சேகர் அவர்களுக்கு TENKASI LIFE YOU TUPE CHANNEL ல் "சாதனையாளர்களின் வழிகாட்டி விருது" பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செங்கோட்டை நூலகத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தி 300 மாணவ மாணவர்களுக்கு மேல் அரசுப்பதவியில் அமர்த்திய சேகருக்கு பாராட்டு விழா நடத்துவதில் வாசகர் வட்டம் பெருமை அடைகிறது .விழாவிற்கு வாசகார் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதிமூலம் இணைச்செயலாளர் செண்பக குற்றாலம் முன்னிலை வகித்தார்கள். வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் வரவேற்றார். நூலகர் ராமசாமி நன்றி கூறினார். மேலும் வாசகர்கள் போட்டித் தேர்வில்வெற்றி பெற்ற மாணவர்கள் என பலர் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.
27.02.2023 இன்று தாம்பரம் முழு நேர கிளை நூலகத்தின் வளர்ச்சிக்கு 165 வது புர வளராக 1/128 , லால்பகதூர் சாஸ்திரி தெரு, முடிச்சூர்,சென்னை -48 வாழும் திருவாளர்.B.பூபதி அவர்கள் மேற்கு தாம்பரம் முழு நேர கிளை நூலகத்தின் நூலகரிடம் ₹.1000/- வழங்கி தன்னை புரவளராக இனைத்துகொண்ட போது. உடன் வாசக வட்ட உறுப்பினர் பொன் வீர் ஜெயப்பிரகாசம் அவர்கள் உடன் இருந்தார். நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். .
மின்னஞ்சல்: noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் : 8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
ஒரு பத்திரிகை எந்த வடிவத்தில் வந்தாலும் முதலில் கவனிக்கும் பகுதியான ஆசிரியர் பக்கத்தில் ஊர்ப்புற நூலகர்கள் நீண்ட கால கோரிக்கை மற்றும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் குறித்து இடம்பெற செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது!
ReplyDeleteஊர்ப் புற நூலகர்களின் வாழ்வாதாரம் தொடர்பான கட்டுரைகள் பட்ஜெட் நேரத்தில் தெரிவித்தமைக்கு நன்றியுடன் விரைவில் கால முறை ஊதியம் பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
சீ.முனிரத்தினம்
மூன்றாம் நிலை நூலகர்
கிளை நூலகம் இலக்கியம்பட்டி
தருமபுரி மாவட்டம்