நூலகர் செய்தி மடல் 12
ஆசிரியர் உரை: நூலகர் செய்தி மடலை தொடர்ந்து வாசித்து வரும் நூலக நண்பர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்! ஊர்ப்புற நூலகர் - பகுதி நேர தூய்மைப் பணியாளர் ஊதிய முரண்பாடு ஏன்? கிளை நூலகங்களில் பணிபுரியும் சிறப்புக் காலம் வரை ஊதியம் பெறும் பகுதிநேர தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் சுமார் ரூ. 9000 ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் காலையில் மட்டும் பணிபுரிகின்றனர். மாலையில் நூலகத்திற்கு வருவதில்லை. நூலகர் விடுப்பில் இருந்தால்கூட மாலையில் இவர்கள் நூலகத்தை திறந்து வைக்க முன்வருவதில்லை. ஆனால், ஊர்ப்புற நூலகர்கள் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மாதம் சுமார் ₹12,000. பணி நேரத்த்தின்படி பார்த்தல், பகுதி நேர தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தைக் காட்டிலும் ஊர்ப்புற நூலகர்களின் ஊதியம் மிகக் குறைவு. ஏன் இந்த முரண்? ஊர்ப்புற நூலகர்கள் இதை ஒப்பிட்டு, கேள்வி கேட்க வேண்டாமா? சிறப்புக் காலமுறை ஊதியம் பெரும் பெரும்பாலான பகுதி நேரத் தூய்மைப் பணியாளர்கள் கிளை நூலகங்களில்தான் பணிபுரிகின்றனர். ஆனால், பெரும்பாலான ...