நூலகர் செய்திமடல் 11

ஆசிரியர் உரை:

    அனைவருக்கும் வணக்கம். 
    நூலகர் செய்தி மடல் தொடர்ந்து வாசித்து வரும் நூலக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமான சில விசயங்களைப்பற்றி இங்கு உங்களோடு கருத்து பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்:

 பொது மாறுதல் கலந்தாய்வு நடந்த வேண்டும்:

தற்பொழுது கல்வி ஆண்டு முடிவடைந்து, புதிய கல்வி ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான  நடவடிக்கைகள் தொடங்கி விட்டன

பொது நூலகத் துறையில் பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. தற்பொழுது,  ஏப்ரல் மாதம் முடிவடைந்து மே மாதம் வந்து விட்டது.  இது தொடர்பாக சி நூலக நண்பர்கள் என்னிடம் பேசினார்கள்.

 பல நூலகர்கள் வெளி மாவட்டங்களில் பணிபுரிகிறார்கள். தங்கள் சொந்த மாவட்டத்திற்கு பணி மாறுதல் கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள்மே மாதத்தில் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தினால்தான், பணி மாறுதல் கிடைத்தவர்கள் தங்கள் குழந்தைகளை உரிய நாளில்  பள்ளிகளில் சேர்க்க முடியும்.  நூலகப் பணியாளர்களின் நலன் கருதி, இயக்குநர் அவர்கள்  பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த  விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

உலக புத்தக நாள் விழா:

    கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு நூலகங்களில் உலகப் புத்தக நாள் விழாக்கள் சிறப்பாக நடைபெற்று இருக்கின்றன

    சென்னை மாவட்டத்தில் நூலக ஆணைக்குழு அமைக்கப் பட்டுள்ளதால், அதன் தலைவர் திரு. மனுசபுத்ரன் முயற்சியால் சென்னை மாவட்டத்தில் உலக புத்தக தின விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன. இந்த விழாக்களுக்கு ஓரளவு நிதியும் வழங்கப்பட்டது. ஆனால் இதர மாவட்டங்களில் உலக புத்தக நாள் விழாவுக்கு நிதி எதுவும் மாவட்ட நூலக அலுவலர்கள் அனுமதிக்க வில்லை என்று சொல்லப்படுகிறது. பல மாவட்டங்களில் விழா நடத்துமாறு நூலகர்களுக்கு சுற்றரிக்கையோ, வாட்ஸ் ஆப் செய்தியோ கொடுக்கவில்லை என்றும், விழா நடத்தப்பட்ட அறிக்கை மட்டும் பிறகு கோரப்பட்டது என்று சொல்லப்படுகிறது. நிலைமை எப்படி  இருந்தாலும், சொந்த செலவில், சொந்த  முயற்சியில் விழாக்கள் நடத்திய நூலக நண்பர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பள்ளிகளில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பள்ளிக் கல்வித்துறை நிதி ஒதுக்குகிறது.  இதுபோல, நூலகங்களில் நடத்தப்படும் உலக புத்தக நாள் விழா, பொது நூலக தின விழா, நூலக வார விழா, நூலகர் தின விழா  போன்ற விழாக்களுக்கு நூலகத்துறை ஏதாவது நிதி ஒதுக்க வேண்டும். அப்பொழுதுதான் நூலகத் துறையின் செயல்பாடுகள் பற்றி பொது மக்கள் அறிந்து கொள்வார்கள். நூலகப் பயன்பாடும் அதிகரிக்கும். 

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.  நன்றி! மீண்டும் சந்திப்போம். 

- சி.சரவணன், ஆசிரியர், பொது நூலக செய்தி மடல். 
வாட்ஸ் ஆப்: 8668192839
மின்னஞ்சல்: noolagarseithi@gmail.com 

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து நடத்திய  உலக புத்தக தின விழா - 2023
உலக புத்தக நாளை முன்னிட்டு   (23.04.23) திருமங்கலம் கிளை நூலகம் மற்றும் நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய புத்தக கண்காட்சியை பொது நூலகத்துறை இணை இயக்குநர் திருமதி அமுதவல்லி அவர்கள் பார்வையிட்டபோது.
கடத்தூர் கிளை நூலகத்தில் உலக புத்தக நாள் விழா

    கடத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்ற உலக புத்தக நாள் விழாவில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குறள் மொழி பதிப்பக உரிமையாளர் புலவர் கோ. மலர்வண்ணன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் வெ.  சந்திரசேகரன், திருவள்ளுவர் பொத்தக உரிமையாளர் புலவர் நெடுமிடல் முன்னிலை வகித்தனர். 
    மாவட்ட நூலக அலுவலர் டி. மாதேஸ்வரி சிறப்புரையாற்றினார். 
தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் 'படைப்பாளர் - பதிப்பாளர் - நூலகர்' என்னும் தலைப்பில் தருமபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்க பொருளாளர் அறிவுடைநம்பி, 'மாணவர் முன்னேற்றத்தில் பொது நூலகத்தின் பங்கு' என்னும் தலைப்பில் ஆசிரியர் வெ. வேல்முருகன், 'நூலகங்களின் சேவைகள் மேம்படுத்த வேண்டியதன் அவசியம்' என்னும் தலைப்பில் நூலகர் சி. சரவணன் கருத்துரையாற்றினர். 
    முன்னதாக நூலகர் து. முருகன் வரவேற்றார். முடிவில் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கே.டி.முருகன், கணேசன், மகாலிங்கம், அன்பழகன் உள்ளிட்ட வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஈரோடு நவீன நூலகத்தில் உலக புத்தக தின விழா 23.04.23 கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட நூலக அலுவலர் திரு யுவராஜ் அவர்கள் முதன்மை நிலை நூலகர் வேல்முருகன் மற்றும் இரண்டாம் நிலை நூலகர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. சிறப்பு நிகழ்வாக “நமது கலாச்சாரத்தில் சித்த மருத்துவம்” திரு டாக்டர் எம் லெனின் அவர்கள் உதவி சித்த மருத்துவ அலுவலர் அரசு சமுதாய நல நிலையம் சித்தோடு ,மற்றும் “மனமும் அறமும்” சிறப்புரை திரு எஸ் சித்தேஸ்வரன் அவர்கள் துணைத்தலைவர் ஈரோடு அறிவு திறவுகோல் ஈரோடு மண்டலம் சிறப்புரை நிகழ்த்தினார் மற்றும் இறுதியாக நூலகர்களுக்கு சிறப்பு பரிசு மாவட்ட நூலக அலுவலர் யுவராஜ்  வழங்கினார்.

முழு நேர கிளை நூலகம் நெல வயல் சாலை பெரம்பூர் சென்னை 11 இல் உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் கவிஞர்கள் கவிதை வாசிப்பு நூல் அறிமுக விழா மாணவர்கள் பேச்சாற்றல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புத்தக தினத்தை முன்னிட்டு மூன்று பேர் புரவலராக இணைந்தனர். நிகழ்ச்சியில் கவிஞர் பெருமக்களுக்கும் வாசகப் பெருமக்களுக்கும் திரளாக கலந்து கொண்டனர்.

தஞ்சையில் நடைப்பெற்ற காவிரி இலக்கிய திருவிழாவிலும், திருவாரூர் புத்தகத் திருவிழாவிலும் திருவாரூர் மாவட்ட பொது நூலகத்துறையின் சார்பாக சிறப்பாக செயல்பட்ட நூலகர் ஆசைத்தம்பி சரவணன் அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட நூலக அலுவலர் பாராட்டி சிறப்பு செய்யதபோது
18/04/2023 அன்று மேற்கு தாம்பரம் கிளை நூலகத்திற்கு பாரதி சேவா தமிழ்நாடு அமைப்பு 6×3அளவில் ஐந்து டேபிள் வாசகர்கள் பயன்பாட்டிற்கு நன்கொடையாக வழங்கினார். அவற்றின் மதிப்பு ரூபாய் 30,000. அன்னார்க்கு நூலகத் துறை சார்பாகவும் நூலகத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- நூலகர் ஆர். பி. வெங்கடேசன்.
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு 17.04.2023  2.30 மணி அளவில்  கன்னிமாரா பொது நூலகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்  முழுநேர கிளை நூலகத்தில் உலக புத்தக நாள் விழா சிறப்பாக கொண்டாப்பட்டது. விழாவுக்கு நூலகர் இரா.கொளஞ்சிநாதன் தலைமை வகித்தார். இவ்விழாவினை முன்னிட்டு  மேனாள் தலைமையாசிரியர் திரு.ஜ.தேவராஜன் மற்றும் அரசு கலைக்கல்லூரி மேனாள் நூலகர் திரு.மாணிக்கசிவசாமி ஆகியோர் 55 உறுப்பினர்களுக்கான தொகை ரூபாய் 1650 வழங்கினர்.  பிரபல பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர்  விருத்தாச்சலம்  பெரியார் நகர் (தெற்கு) பல்லவிகுமார் எழுதிய நூல்கள் ஊடுஇழை மற்றும் ஊதிரும் பூக்களின் இறுதி கவிதைகள் நூல்கள் வெயிடப்பட்டன. இவ்விழாவில் நூல் ஆசிரியர் பல்லவி குமார் ரூபாய் 1000//செலுத்தி புரவலராக இணைந்து கொண்டார்.  விழா முடிவில் நூலகர்   கு.பவித்ரா நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் நூலகப் பணியாளர் ம.பெருமாள் போட்டித் தேர்வு மாணவ மாணவிகள் என்று திரளானோர் கலந்து கொண்டனர்.
எஸ். ஆர்.  ரங்கநாத நூலகம் புதுக்கோட்டை 18 .4.2023 சுப்பிராம்யர்  நடுநிலைப் பள்ளி புதுக்கோட்டையில் "வீட்டுக்கு ஒரு நூலகம்" என்ற திட்டத்தில் 10 
மாணவ, மாணவிகளுக்கு நூல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி அமுதா தலைமை தாங்கினார். அண்ணா பல்கலைக் கழக வரலாற்று துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் நா அழகப்பன் கலந்து கொண்டு மாணவர்கள் நாள் தோறும் நேரம் ஒதுக்கி படிக்க பழகிக் கொண்டால், படிக்காத நாள் பிடிக்காத நாளாக மாறும் என்றார். எஸ் ஆர் அரங்கநாதன் நூலக நிர்வாகி கோ. சாமிநாதன் நாளைய வாழ்க்கைக்கு இன்றைய கல்வி என்றும், உன்னை வழிநடத்த உன்னால்தான் முடியும் என்றார்.

23-4-2023 அன்று சென்னை ஆழ்வார்பேட்டை கவிஞர் பாரதிதாசன்  சாலை வட்டார நூலகத்தில் உலக  புத்தக தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, வினாடி வினா போட்டியில் சுமார் 50 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேனா, புத்தகம், பிஸ்கட் பாக்கெட், தேநீர் வழங்கப்பட்டது. திருமதி செல்வராணி நூல் அறிமுக உரையாற்றினார். திரு. தாளமுத்துக்குமார் கவிதை வாசித்தார். பேச்சு அரங்கத்தில் புத்தக வாசிப்பே என்ற தலைப்பில் செல்வி ஜே.மீனாட்சி, இணையதள வாசிப்பே என்ற தலைப்பில் திருமதி கோ.பிரியங்கா சிறப்பாக பேசினர். சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் திரு எஸ். பால பாரதி மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிய அறிவுரைகள் வழங்கியதோடு மாற்றுத்திறனாளிகளோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு உதவியாக இருப்பது எப்படி என விளக்கமாக உரையாற்றினார். எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் மாணவர்களுக்கு கதை சொல்லி எப்படி சிந்திப்பது, எப்படி எழுதுவது என மாணவர்களோடு கலந்துரையாடினார். பேராசிரியர் கி. ஈஸ்வரி தலைமை உரையாற்றினார். திரு ஏ சி ரங்கசாமி மற்றும் பேராசிரியர் கமலா முருகன் வாழ்த்துரை வழங்கினர். முதல் நிலை நூலகர் சா. இளங்கோ வரவேற்புரை ஆற்றினார். இசை கவி சண்டமாருதம் நன்றி கூறினார்.  நிகழ்ச்சியை முனைவர் இரா. பூங்கோதை  தொகுத்து வழங்கினார். விழாவை நூலகர் இரா. கலைமணி மற்றும் அயோத்தி அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தனர்.
கடலூர் மாவட்டநூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் விருத்தாச்சலம்  முழு நேர கிளை நூலகத்தில் இன்று உலக புத்தக நாள் விழா மிகசிறப்பாக கொண்டாப்பட்டது. விழாவிற்கு நூலகர் இரா.கொளஞ்சிநாதன் தலைமை வகித்தார். விழாவினை முன்னிட்டு தலைமையாசிரியர் திரு.ஜ.தேவராஜன் மற்றும் அரசு கலைக் கல்லூரி மேனாள் நூலகர் திரு.மாணிக்கசிவசாமி ஆகியோர் 55 உறுப்பினர்களுக்கான தொகை ரூபாய் 1650 வழங்கினர்.  பிரபல பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர்  விருத்தாச்சலம்  பெரியார் நகர் (தெற்கு)திரு பல்லவிகுமார்  எழுதிய நூல்கள் ஊடுஇழை மற்றும் ஊதிரும் பூக்களின் இறுதிகவிதைகள் நூல்கள் வெயிடப்பட்டது. இவ்விழாவில் நூல் ஆசிரியர் திரு.பல்லவி குமார் ரூபாய் 1000 செலுத்தி புரவலராக இணைத்துக் கொண்டார்.  விழா முடிவில் நூலகர்  கு.பவித்ரா நன்றி கூறினார். இவ்விழாவில் நூலகப் பணியாளர் ம.பெருமாள் போட்டித் தேர்வு மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி ஊர்ப்புற நூலகர் திருமதி தேன்மொழி, நூலகத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று குடிநீர் இணைப்பு வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வையிட்டு, உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க ஊராட்சி செயலாளருக்கு உத்தரவிட்டார்.
கடலூர்மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா மாலை 3.00 அளவில் தமிழ் தாய் வாழ்த்துடன் துவக்க பட்டது .மாவட்ட மைய நூலக நல்நூலகர் திரு.ஆர்.சந்திரபாபு வரவேற்புரை ஆற்றினார்.கடலூர் மாவட்ட நூலக அலுவலர் திருமதி.சி. பால சரஸ்வதி அவர்கள் தலைமை தாங்கினார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. ஆயிஷா நடராஜன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். கவிஞர். திரு. பால்கி அவர்கள் கருத்துரை வழங்கினார். மாவட்ட மைய நூலக நல்நூலகர். திரு ஆறுமுகம் அவர்கள் நன்றியுரை வழங்கினார் இந்நிகழ்வின் போது திருக்குறள் பேரவை பாஸ்கரன் , நூலக ஆர்வலர் திரு .தங்க சுதர்சனம் திரு. சீ அருள்ஜோதி திரு சாரல் சங்கர் கடலூர் புத்தகத் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய 15 நூலக பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது ஐந்து புரவலர்கள் மாவட்ட மைய நூலகத்தில் இணைந்தார்கள் 100 உறுப்பினர்கள் மாவட்ட மைய நூலகத்தில் சேர்க்கப்பட்டார்கள் இந்நிகழ்வில்   100ககும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.


மன்னார்குடி நூலகத்தில் நடைபெற்ற உலக புத்தக தின விழாவில் 8 சிறந்த கல்வியாளர்கள் தாங்கள் சமீபத்தில் படித்த நூலினை விமர்சனம் செய்தபோது...
பாடாலூர் கிளை நூலகத்தில் உலக புத்தகத் தின விழா 
பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம் 

     23.4.2023 ஞாயிற்றுக் கிழமை  நடைபெற்ற விழாவிற்கு  மாவட்ட நூலக அலுவலர் திரு இரா. சந்திரசேகரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்  திரு. மா. பிரபாகரன், மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற  மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
     இந்நிகழ்ச்சியில் வாசகர் வட்டத் தலைவர் முனைவர் அகவி, வாசகர் வட்ட துணைத் தலைவர் முனைவர் அ.தமிழ் குமரன் முன்னிலை வகித்தனர். 
    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரம்பலூர் கவிஞர் ராமர், சிதம்பரம் ஸ்ரீ ராகவேந்திரா கலை - அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் ஜெனிட்டா சௌந்தரி ரோச், பெரம்பலூர் தன்னம்பிக்கை பேச்சாளர் திரு சே. வைரமணி, பெரம்பலூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் திருமதி ஜெ. கல்பனாத்ராய்  சிறப்புரையாற்றினர். இறுதியாக மாவட்ட மைய நூலகர் திரு . இரா. பாண்டியன்  நன்றி கூறினார். 

வடுகபட்டி கவியரசு கண்ணதாசன் நூலகத்தில் 23.04.2023 அன்று உலக புத்தக தினவிழா, புதிய நூல் வெளியீட்டு விழா, நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா - முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .இவ் விழாவிற்கு மனித நேய மருத்துவர்  டாக்டர் சி செல்வராஜ் தலைமை வகித்தார். தேனி மாவட்ட நூலக அலுவலர்  திருமதி இரா.ஆண்டாள் முன்னிலை வகித்தார் .

உலக புத்தக தின நூல் வெளியீட்டு விழாவில் திருக்கோவலூர் நூலக வாசகர்கள் பயன்பாட்டிற்காக கோவல் நண்பர்கள் குழு ( 1986 ) சார்பாக சண்முகசுந்தரம் இந்திய ஆட்சி பணி ( IAS ) அவர்கள், நல்நூலகர் மு.அன்பழகன் அவர்களிடம் ரூபாய் 30,000 மதிப்பிலான 5 நூல் அடுக்குகளை நன்கொடையாக வழங்கினார். உடன் வாசகர் வட்டத் தலைவர் சிங்கார.உதியன், கவிஞர் ஆண்டன் பெனி மற்றும் கோவல் நண்பர்கள் குழுவினர். 
facebook_1682348098697_7056279359761054989.jfacebook_1682348098697_7056279359761054989.j

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. விழாவுக்கு சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். நூலகர் கவிதா வரவேற்றார். தேனி மாவட்டட ஓய்வூதியர் சங்க தலைவர் பெருமாள்சாமி வாசகர் வட்டத் தலைவர் இளங்கோ, பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயா பொறுப்பாளர் செல்வ கணேஷ் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். 

 தென்காசி வ உ சி வட்டார நூலக வாசகர் வட்டம் நூலகம்,  தகவல் அறிவியல் மேம்பாட்டு அமைப்பு, சாலிஸ் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து தமிழ்நாடு வாசிப்பு இயக்கம் மற்றும் உலக புத்தக தின விழாவினை தென்காசி வ உ சி வட்டார நூலகத்தில் நடத்தியது. விழாவிற்கு தமிழ்நாடு மாநில  சதுரங்க பயிற்சியாளர்  ஆசிரியர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட துணைத் தலைவர்கள் எழுத்தாளர் அருணாசலம் தென்காசி கேன்சர் சென்டர் நிர்வாக இயக்குனர் பாரதிராஜா முன்னிலை வகித்தனர். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார். வட்டார கல்வி  அலுவலர்கள் மாரியப்பன், இளமுருகன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் பக்ருதீன் அலி அகமது நூலகத்தில் வாசகராக சேர்ந்து நூலகத்தில் பயின்று ஆசிரியராகியுள்ள திருமலை குமார் போட்டி தேர்வு பயிற்சி மாணவர் முத்து மணிகண்டன்  ஜெயராம் மேலகரம் பள்ளி மாணவர் யஷ்ந்த் குரு உள்ளிட்டோர் உலக புத்தக தினம் குறித்து குறித்தும் வாசிப்பு இயக்கம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். புத்தக வாசிப்பினை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் புதிய புத்தகம் இலவசமாக வழங்கி புத்தக வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.   கிளை நூலகர் சுந்தர் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நூலகர்கள்  ஜூலியாராஜ  செல்வி  நிஹ்மதுனிஸா வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தை ஜேசு ,சலீம் முகமது மீரான் முருகேசன் செய்திருந்தனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தளுகை கிளை நூலகத்தில் 23.4.2023இன்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக கண்காட்சி நடைபெற்றது பள்ளி மாணவர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புத்தகம் என்ன செய்யும் ??

1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விடயங்கள் நமக்குத் தெரியவரும்.

2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.

3. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.

4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.

5. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.

6. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும்.

7. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்.

8. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல்பார்வை உருவாகும்.

9. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சனாதனத்துக்கும் மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.

10. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது வரலாற்றுக்கும் புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

11. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.

12. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காக்கை குருவி, கடல், மலை, என்று இயற்கையை ஆராதிக்கத்தோன்றும்.
13. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப்பிரவகிக்கும்.

14. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.

15. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதிவலையைத் தெரிந்து கொள்ள முடியும்.

16.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்பு கொள்ளத் தோன்றும்.

17. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.

18. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத்தோன்றும்.

19. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகினை மாற்றப் புரட்சி செய்யவும் அதற்காக ஆயுதம் ஏந்தவும் தோன்றும்.
20. புத்தகம் மனிதகுலத்தின் அறிவுச்சொத்து. 
வாசியுங்கள்! வாசியுங்கள்! வாசியுங்கள்!
உலக புத்தக தின வாழ்த்துக்கள்!

- Dr. Rahman

சென்னை, தாம்பரம், செம்பாக்கம் ஊர்ப்புற நூலகத்தில் உலக புத்தக தினத்தில்  நம்நாட்டின் வருங்கால தூண்களுடன் கொண்டாடப்பட்டது.

புதியதாக பொறுப்பேற்றுள்ள பொது நூலக அலுவலர் ஒன்றிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்! 

  23-04-2023 உலகபுத்தக தினவிழா
ஊர்ப்புற நூலகம் வாசகர் வட்டம் - நல்லிசெட்டிபாளையம் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மேம்பாட்டு அமைப்பு (SALIS) தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் தமிழ்நாடு வாசிப்பு இயக்கம் அனைவரும் இணைந்து உலகபுத்தக தினவிழா முன்னிட்டு புத்தகம் மற்றும் காப்புரிமை நாள் கொண்டாட்டம்  விழா கொண்டாடப்பட்டது...
    எழுத்தாளர் மற்றும் ஜோதிடர் K.R.வேலுச்சாமி,கே.ஜி.கலை அறிவியல் கல்லூரி, தலைமை நூலகர் முனைவர் கா. கணபதி, (SALIS), கே.என்.காளியப்பன் செயலாளர் பாரதி சிந்தனையாளர் பணி மன்றம்,ஆர்.சண்முகம் வாசகர் வட்டத்தலைவர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்... பள்ளி மாணவ மாணவிகள் வாசகர்கள் வாசிப்பு உறுதிமொழி மேற்கொண்டனர்... நூலக நண்பர்கள் திட்டம் தன்னார்வலர் திருமதி சண்முகபிரியா அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இறுதியில் நூலகர் முனைவர் ஜி.இரமேசு நன்றி கூறினார்.

காமராஜபுரம் கிளை நூலகம் சார்பாக உலக புத்தக தினம் புதிய நூல்கள் கண்காட்சி மற்றும் உறுப்பினர் புரவலர் சேர்க்கையாக 23 4 2023 அன்று காமராஜபுரம் ஒன்பதாம் வீதியில் உலக புத்தக தினமாக கொண்டாடப்பட்டது.
காமராஜபுரம் கிளை நூலக மூன்றாம் நிலை நூலகர் கண்மணி, புதுக்கோட்டை தெற்கு கிளை நூலகர் சரஸ்வதி வாசகர் வட்ட துணை தலைவர் ராஜாராமன் மற்றும் பலர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள்.
புத்தக தான விழாவில் எஸ் ஆர் அரங்கநாதன் நூலக நிர்வாகி கோ. சுவாமிநாதன் கலந்து கொண்டு புதிய நூல்களை பார்வையிட்டு வியந்து பேசினார். உறுப்பினர்கள் புரவலர் சேர்க்கை நடைபெற்றது.
23.04.2023அன்று  சீர்காழி கிளை நூலகத்தில்  புத்தக கண்காட்சி  மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் வாசகர் வட்டத் தலைவர்  திரு .சி.வீரசேனன்,  இசைதென்றல் பாடகர் திரு.அ.ராம நாதன்   மற்றும் இரண்டாம் நிலை நூலகர் ரகு, வாசகர்கள் உடன் இருந்தார்கள்.
நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய  செய்திகள்,  கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். 
மின்னஞ்சல்:  noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் :  8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 29

நூலகர் செய்திமடல் 30

நூலகர் செய்திமடல் 31