நூலகர் செய்திமடல் 22
ஆசிரியர் உரை: அனைவருக்கும் வணக்கம். கடந்த இதழில் தலையங்கம் படித்துவிட்டு பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினர். துப்புரவுப் பணி செய்பவர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி ரூ. 75ஐ, ரூ.150 என்று உயர்த்த வேண்டும், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றனர் சிலர். எல்லாம் நியாயமான கோரிக்கைகள் தான். இது போன்ற பிரச்சனைகளை விவாதிப்பதும், உரிய அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முறையாக எடுத்துச் செல்வதும் அவசியம். "நூலகர் செய்திமடல்" ஒரு பத்திரிகை. பத்திரிகைகளில் தலையங்கம் எழுதுவது பத்திரிகை ஆசிரியர் பணி. சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி மக்கள் விவாதிக்க வேண்டும் என்னும் நோக்கோடு எழுதுவதுதான் தலையங்கம். அப்படித்தான், நூலகத் துறையில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி நூலகர்கள் விவாதித்துத் தீர்வு காண வசதியாக, விவாதத்தைத் தொடங்கி வைக்கும் பணியைத்தான் நூலகர் செய்திமடல் தலையங்கம் செய்து வருகிறது. இதில் எந்த உள்நோக்கமோ, விருப்பு வெறுப்போ இல்லை....