நூலகர் செய்திமடல் 26
ஆசிரியர் உரை: அனைவருக்கும் வணக்கம். மழை நீரில் நனைத்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் புத்தகங்களை இருப்பு நீக்கம் செய்ய வேண்டும்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் மழை நீர் புகுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் நாசமாகியுள்ளன. இந்த பகுதிகளில் இருக்கும் நூலகங்களிலும் மழை நீர் புகுந்திருக்க வாய்ப்பு உள்ளது. புத்தகங்கள் நனைந்து நாசமாகி இருக்கலாம். இதை வெளியில் எப்படி சொல்வது என்று நூலகர்கள் தயங்க வேண்டாம். மழை நீரில் நனைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் புத்தகங்களின் பட்டியலை (புதிய புத்தகங்களாக இருந்தாலும்) மாவட்ட நூலக அலுவலருக்கு அனுப்பி இரும்பு நீக்கம் செய்யுங்கள். பழுதடைந்த தளவாடங்கள் இருப்பு நீக்கம் செய்ய வேண்டும்: பெரும்பாலான நூலகங்களில் பழுதடைந்த தளவாடங்கள் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கின்றன. இவற்றைப் பட்டியல் இட்டு, மாவட்ட நூலக அலுவலருக்கு அனுப்பி, இரும்பு நீக்கம் செய்ய நூலகர்கள் முயற்சி செய்யலாம். பழுதடைந்த தளவாடங்களுக்கு மாவட்ட நூலக அலுவலர...