அனைவருக்கும் வணக்கம்.
மழை நீரில் நனைத்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் புத்தகங்களை இருப்பு நீக்கம் செய்ய வேண்டும்:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் மழை நீர் புகுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் நாசமாகியுள்ளன. இந்த பகுதிகளில் இருக்கும் நூலகங்களிலும் மழை நீர் புகுந்திருக்க வாய்ப்பு உள்ளது. புத்தகங்கள் நனைந்து நாசமாகி இருக்கலாம். இதை வெளியில் எப்படி சொல்வது என்று நூலகர்கள் தயங்க வேண்டாம். மழை நீரில் நனைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் புத்தகங்களின் பட்டியலை (புதிய புத்தகங்களாக இருந்தாலும்) மாவட்ட நூலக அலுவலருக்கு அனுப்பி இரும்பு நீக்கம் செய்யுங்கள்.
பழுதடைந்த தளவாடங்கள் இருப்பு நீக்கம் செய்ய வேண்டும்:
பெரும்பாலான நூலகங்களில் பழுதடைந்த தளவாடங்கள் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கின்றன. இவற்றைப் பட்டியல் இட்டு, மாவட்ட நூலக அலுவலருக்கு அனுப்பி, இரும்பு நீக்கம் செய்ய நூலகர்கள் முயற்சி செய்யலாம். பழுதடைந்த தளவாடங்களுக்கு மாவட்ட நூலக அலுவலர்கள் சான்றொப்பம் அளிப்பதில்லை என்று பல மாவட்டங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. புதிய புத்தகங்களை வைக்கவே பல நூலகங்களில் இடவசதி இல்லாத நிலையில் பழுதடைந்த தளவாடங்களை வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை. மாவட்ட நூலக அலுவலர்கள் இதில் தனிக் கவனம் செலுத்துவது அவசியம்.
பழைய பதிவேடுகள் அழிக்க வேண்டும்:
பெரும்பாலான நூலகங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர் வருகைப் பதிவேடு, கலந்தாய்வு பதிவேடு, நூல் இரவல் பதிவேடு, பத்திரிகைகள் வரவு பதிவேடு போன்ற முக்கியத்துவம் இல்லாத பதிவேடுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. இது போன்ற முக்கியத்துவம் இல்லாத பதிவேடுகள் 5 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்கத் தேவையில்லை. இவற்றை நீக்க அனுமதி கோரி மாவட்ட நூலக அலுவலருக்கு நூலகர்கள் கடிதம் எழுதி நீக்க வேண்டும். அப்போது தான் நூலகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
பல நூலகங்களில் பழைய பதிவேடுகள், பழுதடைந்த தளவாடங்கள், பழுதடைந்த நூல்கள் என்று தேவையற்ற பொருட்கள் நூலடுக்களின் மீது வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இவற்றை எல்லாம் நீக்கிவிட்டு நூலகத்தை அழகாக வைத்துக்கொள்ள நூலகர்கள் முன்வர வேண்டும். நூலகர்களின் முயற்சிக்கு மாவட்ட நூலக அலுவலர்கள் ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
நூலகர் செய்திமடல், 8668192839. 9442265816.
பாரதியை ஜதி பல்லக்கில் ஏற்றி சகல மரியாதை:
பாரதி எட்டயபுரம் அரசருக்கு எழுதிய ஓலைத் தூக்கில் தன்னை ஜதி பல்லக்கில் ஏற்றி சகல மரியாதைகளுடன் சால்வை அணிவித்து பொற்கிழி தந்து சிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டார்.நூற்றி மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்த ஆசை நிறைவேற்றப்படவில்லை.
அதை நிறைவேற்ற கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் பாரதி பிறந்த நாளில் எட்டயபுரத்தில் பாரதி வேடமிட்ட குழந்தையை ஜதி பல்லக்கில் ஏற்றி சகல மரியாதைகளுடன் முத்துக் குடை, பொற்கிழி, சால்வை யு டன் புகழ் முழக்கங்கள் எழுப்பி எட்டயபுரத்தை சுற்றி வந்து பாரதியின் கனவை நிறைவேற்றியது.
தினமணி நாளிதழில் அதுபற்றிய செய்திகள் டம் கட்டி வெளியிடப்பட்டது.
பாரதி அன்பர்கள் பலரும் பாராட்டினர்.
- கவிஞர் பாரதன் தலைவர்,
பாரதி தமிழ் இலக்கியப் பேரவை &
வாசகர் வட்டம், கம்பம்.
தென்காசி மாவட்ட மைய நூலக கட்டட அடிக்கல் நாட்டுவிழா...
தென்காசி மாவட்ட மைய நூலக கட்டட அடிக்கல் நாட்டுவிழா...
மாவட்ட நூலக அலுவலர் அலுவலகம் & மாவட்ட மைய நூலகம் தொடக்கம்...
பரிசுகள் வழங்கல்...
மதிப்புக்குரிய இணை இயக்குநர் அவர்களின் பிரஸ் மீட் ...
என நம் துறையின் பெருமைமிகு விழா இனிதே நிறைவுற்றது....
வழிகாட்டிய..
இயக்குநர் அவர்கள்..
இணை இயக்குநர் அவர்கள்...
துணை இயக்குநர் அவர்கள்..மாவட்ட நூலக அலுவலர் அவர்கள்..
தென்காசியில் மாவட்ட மைய நூலகத்திற்கு அனைத்தும் கிடைக்க உதவிய மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர்...
முதன்மை கல்வி அலுவலர்
மற்றும் அரசுத்துறை அலுவலர்கள்...
வாசகர் வட்டத்தினர்..
உடன் பணிபுரியும் நூலக
சகோதரர் சகோதிரிகள்..
பணியாளர்கள்.. பத்திரிக்கை நண்பர்கள்
என அனைத்து நல்ல உள்ளங்களின் ஆதரவில் அடிக்கல் நாட்டுவிழா இனிதே நடந்தது...
புதிய சகாப்தம் தென்காசியில் தொடங்கி உள்ளது...
- நன்றியுடன்,
சூ.பிரம நாயகம்
தருமபுரி மாவட்ட நூலக அலுவலகத்தில் கண்காணிப்பாளராக கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த திரு. திருமலை குமாரசுவாமி அவர்கள் பணியிட மாறுதல் பெற்று தென்காசி மாவட்டத்தில் உள்ள நூலக அலுவலர் அலுவலகத்திற்கு செல்வதால் அவருக்கு தமிழ்நாடு பொது நூலகத் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் தீ. சண்முகம் மேனாள் மாநிலச் செயலாளர் சி. சரவணன் மாவட்டத் தலைவர் மு. முனி ராஜ் மாவட்ட பொருளாளர் சரவணகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் குமரன், தங்ஙம்மாள், சிவகாமி, பத்மா, இராமச்சந்திரன், மாதையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தீ. சண்முகம்
வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு...
Comments
Post a Comment