Posts

நூலகர் செய்தி மடல் 4

Image
ஆசிரியர் உரை: நூலக நண்பர்களுக்கு வணக்கம்.    தமிழ் நாடு அரசின் சட்ட மன்றக் கூட்டத் தொடர் தொடங்கி இருக்கிறது. தமிழ் நாடு நூலகச் சட்டத் திருத்தக் குழு தன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. சட்டத் திருத்த மசோதா இந்த கூட்டத் தொடரில்  தாக்கல் செய்யப்படும்  என்று நம்புகிறோம். இந்த சட்டத் திருத்தம் மூலம் நூலகர்களின் பணி பாதுகாப்பு மேம்பட வேண்டும் என்பது அணைத்து நூலகர்களின் எதிர்பார்ப்பு. குறிப்பாக ஊர்ப்புற நூலகர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் அறிவிக்க வேண்டும் என்பது பெரும் எதிர்பார்ப்பு. எல்லாம் நல்லதே நடக்க ஆண்டவனை வேண்டுவோம். நன்றி. - சி. சரவணன்.   தமிழ்நாடு அரசின்  முதல் உலக புத்தக திருவிழா தொடக்கவிழாவில் பொது நூலக இயக்குநர் அவர்கள் உரையாற்றிய போது... செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியின் ஏழாவது நாள் (03.01.23) நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த மண்ணின் மைந்தர் என்றும் எனது மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய பேராசிரியர். முனைவர். கு.ஞானசம்பந்தன் ஐயா அவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழுவின...

நூலகர் செய்தி மடல் 3

Image
ஆசாரியர் உரை: நூலக நண்பர்களுக்கு ,   வணக்கம். பொது நூலகத்துறை இயக்குநராக திருமிகு க. இளம் பகவத் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு நூலகத் துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும் , வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயக்குநர் அவர்கள் நிர்வாகத்தை வெளிப்படைத் தன்மையாக்கியது பாராட்டுக்குரியது.      உரியச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கலந்தாய்வு மூலம் நூலகர்களுக்கு பதவிஉயர்வு மற்றும் பணி மாறுதல்கள் வழங்கப்பட்டன.  இது நூலகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.    பொது நூலக இயக்குநர் அவர்களின் கலந்தாய்வு நடைமுறைகளைப் பின்பற்றி , மாவட்ட நூலக அலுவலர்களும் , மாவட்டத்திற்குள் கலந்தாய்வு  மூலம் நூலகர்களுக்குப் பணி மாறுதல் வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிலை தொடர வேண்டும் என்பதுதான் அனைத்து நூலகர்களின் விருப்பம்.      ஆண்டுதோறும் நூலக வார விழாவில் நூலகர்களுக்கும் நூலகங்களுக்கும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சிறப்பாகப் பணி புரியும் நூலகர்களுக்கு டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் விருதும் , அதிக உ...