நூலகர் செய்தி மடல் 4

ஆசிரியர் உரை:

நூலக நண்பர்களுக்கு வணக்கம்.

   தமிழ் நாடு அரசின் சட்ட மன்றக் கூட்டத் தொடர் தொடங்கி இருக்கிறது. தமிழ் நாடு நூலகச் சட்டத் திருத்தக் குழு தன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. சட்டத் திருத்த மசோதா இந்த கூட்டத் தொடரில்  தாக்கல் செய்யப்படும்  என்று நம்புகிறோம். இந்த சட்டத் திருத்தம் மூலம் நூலகர்களின் பணி பாதுகாப்பு மேம்பட வேண்டும் என்பது அணைத்து நூலகர்களின் எதிர்பார்ப்பு. குறிப்பாக ஊர்ப்புற நூலகர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் அறிவிக்க வேண்டும் என்பது பெரும் எதிர்பார்ப்பு. எல்லாம் நல்லதே நடக்க ஆண்டவனை வேண்டுவோம். நன்றி.

- சி. சரவணன்.

 

தமிழ்நாடு அரசின்  முதல் உலக புத்தக திருவிழா தொடக்கவிழாவில் பொது நூலக இயக்குநர் அவர்கள் உரையாற்றிய போது...
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியின் ஏழாவது நாள் (03.01.23) நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த மண்ணின் மைந்தர் என்றும் எனது மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய பேராசிரியர். முனைவர். கு.ஞானசம்பந்தன் ஐயா அவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் சார்பில் நல்லாடை அணிவித்து சிறப்பு செய்த இனிய தருணம். 

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பொது நூலக துணை இயக்குநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது...
- என். செல்வம். 

ஒரு புத்தகம் என்ன செய்யும்?

1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விஷயங்கள் தெரியவரும்.
2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.
3. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.
4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.
5. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.
6. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும்.
7. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்
8. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல் பார்வை உருவாகும்.
9. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சனாதனத்துக்கும் மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.
10. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது வரலாற்றுக்கும் புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.
11. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.
12. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது 
காக்கை குருவி, கடல், மலை, என்று இயற்கையை ஆராதிக்கத்தோன்றும்.
13. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப் பிரவகிக்கும்.
14. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.
15. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதிவலையைத் தெரிந்து கொள்ள முடியும்.
16.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்புகொள்ளத் தோன்றும்.
17. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.
18. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத்தோன்றும்.
19. புத்தகம் மனிதகுலத்தின் அறிவுச்சொத்து. வாசியுங்கள்.

*வாசித்ததை வழங்குவதில் மகிழ்ச்சி*

கூமாப்பட்டி அரசு கிளைநூலகத்தில் 1.1.2023அன்றுகூமாப்பட்டிவசந்தம் அலையன்ஸ்சங்கம் & கிளைநூலக வாசகர்வட்டமும் இணைந்து புத்தாண்டுதின சிறப்பு கூட்டம் கிளைநூலக வாசகர்வட்டதலைவர் திரு.M.P.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வசந்தம்அலையன்ஸ்சங்கம் சார்பாக ரூ 3500/ மதிப்புள்ள கிளைநூலக தகவல் பலகை(இரும்புபோர்டு) நன்கொடையாக வழங்கப்பட்டது.கூட்டத்தில் கலந்துகொண்ட கிளைநூலக வாசகர்களுக்கு அலையன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் திரு.பெரியமகாலிங்கம் அவர்கள் கேக்வெட்டி வழங்கினார். மேற்கண்ட முக்கிய அம்சமாக கிளைநூலகம் அருகில் முக்கிய பாதையில் நூலக தகவல் பலகையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மேற்கண்ட முக்கிய நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பாக செயல்பட்ட அலையன்ஸ் வத்திராயிருப்பு வட்டார பன்னாட்டுச்சங்க முக்கிய நிர்வாகிகள் & உறுப்பினர்கள் & கிளைநூலக வாசகர்கள் அனைவருக்கும் கூமாப்பட்டி கிளைநூலக வாசகர்வட்டம் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் புத்தாண்டுதின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்க!வளர்க!இந்த வையகம். 
- சி. வெள்ளைச்சாமி , நூலகர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்கம் மற்றும் விராலிமலை கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து விராலிமலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 15 பள்ளி மாணவிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின்  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செந்தில்நாதன்,  வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவக்குமார், மகளிர் வாசர் வட்ட தலைவி ஜெயக்குமாரி,  பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் கேபி.ரமா மற்றும் ரேசினா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்... பயனடைந்த  15  பள்ளி  மாணவிகளையும் கிளை நூலகத்தில் உறுப்பினர்களாக பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் திரு.செந்தில்நாதன் 300  ரூபாய் கொடுத்து இனைத்து உள்ளார்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை நூலகர் லயன்ஸ் ஜெயராஜ் செய்துஇருந்தார்.
நாகப்பட்டினம் மாவட்ட நூலக ஆணைகுழுவின் கீழ் இயங்கும் வடக்கு பொய்கைநல்லூர் கிளை நூலகத்திற்கு சிங்கப்பூர் தொழிலதிபர் திரு.எஸ் .ராமலிங்கம் பிள்ளை அவர்கள் ரூ 10000/- மதிப்புள்ள மூன்று மேசை மற்றும் மூன்று நாற்காலிகள் வழங்கினார்கள் அவர்களுக்கு வாசகர்கள் மற்று பொதுநூலகத்துறை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

நூலகம் அழைக்கிறது

ச. அசோக்குமார்
சி.எஸ்.ஐ.ஆர் நூலகம்
சி.எஸ்.ஐ.ஆர். செனனை வளாகம்
தரமணி.
நூலகம் என்பது புத்தகங்களை மட்டும் சேமித்து வைக்கின்ற இடமான நாம் கருத கூடாது. அந்த புத்தகங்களை ஒவ்வொரு வாசகர்களிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
 
வாசகர்கள் இங்கே நேரத்தை விதைத்தால், நாளை அறிவு செல்வத்தை அறுவடை செய்யலாம்.
 பொது நூலகங்கள், பள்ளிக்கூட நூலகங்கள், கல்லூரி நூலகங்களில் பணியாற்றுகின்ற நூலகர்கள் ஒவ்வொரு வாசகரிடமும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் நூலகத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்னும் நிலையை அரசு ஏற்படுத்தவேண்டும்.  மாணவர்களிடம் வாசிப்பு திறன் இல்லாததற்கு காரணம் மாணவர்கள் நூலகங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததுதான். மானவர்கிளிடையே வாசிப்பு திறனை ஊக்குவிக்க வேண்டும்.  நல்ல புத்தகங்களை அவர்கள்  கையில் கொடுக்க வேண்டும்.
 
இளைஞர்களிடம் உள்ள தீய பழக்கங்கள்  நம்மை முகம் சுழிக்க வைக்கிறது. அதனால் அவன் மனதை ஒரு நூலகமாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு நூலகமான மாற வேண்டும். இந்த சமூகத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு நூலகர்களுக்கும் உண்டும்.
 
ஒவ்வொரு இளைர்களிடமும்  இந்த தேசத்திற்காக இரத்தம் சிந்தியர்களையும் யுத்தம் செய்பவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்க சொல்ல வேண்டும்.
 
இளைஞர்களிடம் நல்லொழுக்கம் வளர வேண்டும். அதற்கு நூலகம் தான் சிறந்த தளமாக அமையும்.
 
மாணவர்களிடமும் இளைஞர்களிடம் நல்ல புத்தகங்களை கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்,
 
விடுமுறை நாட்களில் பெற்றோர்கள்  அருகில் உள்ள நூலகத்திற்கு குழந்தைகளை கூட்டி செல்ல வேண்டும். அங்கு ஒரு நூலை கொடுத்து அதை வாசிக்க பழக்க வேண்டும். பெற்றோர்களின் கடமை
 
நூலகத்தில் புத்தகங்களை புரட்டுங்கள்; நாளை உங்கள் வாழ்க்கையை புரட்டி போடும்.
 
அறிவு பசியை தேடி நீ நூலகம் நோக்கி ஓடினால்
வரலாறு நாளை உன்னை தேடி வரும்.
 
வெறுமையோடு வாருங்கள் பொருமையோடு படியுங்கள்
பெருமையோடு செல்லுங்கள்
 
நூலகர்கள், தேடி வருகின்ற வாசகர்களுக்கு
நல மன நல ஆலோசகராகவும் இருக்க வேண்டும்
 
மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை நூலகர்களாய் நாம் கொண்டு வர வேண்டும்
 
நூலகத்திற்கு செல்வோம். நம் சமூகத்தை மாற்றுவோம்.
 
புத்தகத்தை வாசிப்போம். தேசத்தை நேசிப்போம்.
 
வீதிதோறும் நூலகம் அமைப்பது அரசின் கடமை.
 
நூலகம் அழைக்கிறது; நம் தேவையற்ற எண்ணங்கள் களைகிறது.
 
நூலகம் வருவோம்; நாட்டை ஆளுவோம்.
 
அறியுடையார் எல்லாம் உடையார்
ஈரோடு மாவட்டம் காசி பாளையம் முழு நேர கிளை நூலகத்தில் வாசகர் வட்டத்தின் சார்பில் நூலக கட்டிடத்தின் வெளிச் சுவர் மற்றும் சுற்றுச்சுவர் முழுவதும் வண்ணம் பூசும் பணி நடைபெற்றது.
மதுரை ஆயுதப்படை குடியிருப்பு வாளகத்தில் தமிழக அரசின் பொது நூலகத்துறையின் கீழ் கிளை நூலகம் 1961 முதல் செயல்படுகிறது. நூலகத்திற்கு வாசகர்கள் படிப்பதற்கு ஒரு அறை மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் வழங்கிட வாசகர் வட்ட வேண்டுகோளை ஏற்று படிப்பக அறையும், காவலர்கள் குழந்தைகள் போட்டித் தேர்வுக்கு என ஒரு அறையும் ஒதுக்கி அவ்விரு அறைகளை 06-01-2023 காலை 10.30 மணிக்கு  நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் திரு. செந்தில் குமார் IPS, படிப்பக அறையைத் திறந்து வைத்து புத்தகங்கள் படித்து மனஅழுத்தத்திலிருந்து  காவல்ர்கள் விடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.மாநகர தெற்கு காவல் துணை ஆனையர் திரு. சாய் பிரணித் IPS அவர்கள் போட்டித் தேர்வு அறையைத் திறந்து வைத்தார்கள். இத் திறப்பு விழாவிற்கு திருமதி வனிதா காவல் துணை ஆணையர் தலைமையிடம், அவர்கள் முன்னிலை வகித்து நூலகத்தை பயன்படுத்தி வாழ்வின் உச்சத்தை எட்டிட வாசிப்பு திறன் அவசியம் என காவலர் குழந்தைகளை கேட்டுக் கொண்டார். நூலகம் இந் நிகழ்வில் ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் செல்வி பவித்ரா புரவலரானதை வாசகர் வட்டம் வாழ்த்திட, ஆயதப்படை உதவி ஆணையர் திரு.முத்தரசு அவர்கள் பாராட்டி, நூலக புரவலர் எண்ணிக்கிகையை அதிகரிக்க காவலர்கள் புரவலராகுமாறு கேட்டுக் கொண்டார். திறப்பு விழாவில் காவல் உதவி ஆணையர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். விழா சிறப்பாக நடைபெற ஆயுதப்படை ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் முழு ஒத்துழப்பு வழங்கினார்கள். திறப்பு விழாவில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை காவலர்களும், வாசகர் வட்ட உறுப்பினர்களும், நூலக துறை நண்பர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க  நூலகர் திருமதி தி.மாரியம்மாள் நன்றி கூற  விழா இனிதே நிறைவுற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி பதவி உயர்வு பெற்ற நூலகர்களுக்கு பாராட்டு விழா. இடம்: புதுக்கோட்டை மைய நூலகம். இந்த நிகழ்வு மற்ற மாவட்டங்களுக்கு நல்ல முன்னுதாரணம்.

கத்திக் கூர்மையின் இரண்டு பக்கங்கள் 

1 ADULT ஐந்துஎழுத்துக்கள்
     அதே போல YOUTH
2.  PERMANENT ஒன்பது எழுத்துக்கள்
     அதே போல TEMPORARY.
3.  GOOD நான்கு எழுத்துக்கள்
     அதே போல EVIL.
4.  BLACK  ஐந்து எழுத்துக்கள்.
     அதே போல WHITE.
6. LIFE நான்கு எழுத்துக்கள்
    அதே போல DEAD.
7. HATE நான்கு எழுத்துக்கள்
    அதே போல LOVE.
9. ENEMIES ஏழு எழுத்துக்கள்
    அதே போல FRIENDS.
10. LYING ஐந்து எழுத்துக்கள்.
       அதே போல் TRUTH.
11. HURT நான்கு எழுத்துக்கள்
       அதே போல் HEAL.
12. NEGATIVE எட்டு எழுத்துக்கள்
       அதே போல POSITIVE.
13. FAILURE ஏழு எழுத்துக்கள்
      அதே போல SUCCESS.
14. BELOW ஐந்து எழுத்துக்கள்.
       அதே போல ABOVE.
15. CRY மூன்று எழுத்துக்கள்
       அதே போல பல எழுத்துக்கள்
      அதே போல HAPPY.
17. RIGHT ஐந்து எழுத்துக்கள்
      அதே போல WRONG
18. RICH நான்கு எழுத்துக்கள்
       அதே போல POOR.
19. FAIL நான்கு எழுத்துக்கள்
      அதே போலPASS.
20. KNOWLEDGE ஒன்பது எழுத்துக்கள்
       அதேபோல IGNORANCE
வியப்பாக இருக்கிறது
இந்த ஒற்றுமை.
இதிலிருந்து அறியப்படும் நீதி 
என்ன என்றால்,
LIFE is like  a double-edged sword but the choice we make determines our future

அன்புடன்
சீ.முனிரத்தினம்
மூன்றாம் நிலை நூலகர்
கிளை நூலகம் இலக்கியம் பட்டி.

பொங்கல் வாழ்த்து

புதுமலரின் வாசமுடன்💐
புன்னகைக்கும் நேசமுடன்😍
புத்துணர்வு பொங்கிட💃🏻
அனைவரின் வாழ்விலும்
மகிழ்ச்சி பொங்கி😄😁😄😆
செல்வம் பெருகி 💰💰💰💰💰
நீடித்த ஆரோக்கியத்துடன்🤩
வாழ  🙏🙏🙏 இந்த இனிய🍨🥭🍍🍉🍒 பொங்கல் திருநாளில்
மனமார்ந்த 💞💞🥳 வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐. 
என்றும் அன்புடன்
Dr. மீ.சு. சந்திரசேகரன் மற்றும் குடும்பத்தினர்.

வசந்தா பதிப்பகம் செய்திக் குறிப்பு

            வசந்தா பதிப்பகம் சார்பில் சென்னை நந்தனம் 46ஆவது புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 72இல் பாரதியார் 100 என்கிற புத்தக வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. கவிஞர் ஆதம் அகிலன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு நூலகர்கள் அமைப்பின் நிறுவனத் தலைவரும் சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியின் நூலகருமான முனைவர் இரா. கோதண்டராமன் அவர்கள் பாரதியார் 100 என்கிற நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்கள் நூலை பெற்றுக் கொண்டு அனைவரையும் வாழ்த்திப் பேசினார். ஆஸ்திரேலியா உச்சநீதிமன்றத்தின் பாரிஸ்டர் மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பன்னாட்டுப் பெண்ணுரிமை கூட்டமைப்புகளின் தலைவர் தமிழக அரசின் அயல்நாட்டு விருதாளர் தமிழறிஞர் முனைவர் சந்திரிகா சுப்ரமனியம் அவர்கள் பாரதியார் 100 புத்தகம் உருவான விதம் குறித்தும் அதனை அன்புடன் வெளியிட்ட முனைவர் இரா. கோதண்டராமன் பெற்றுக் கொண்ட பேரா. முனைவர் தாயம்மாள் அறவாணன் மற்றும் நூலினை அச்சிட்டு வெளியிட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்த முனைவர் மோ.பாட்டழகன் வரவேற்புரை நல்கிய கவிஞர் ஆதம் அகிலன் மற்றும் திருமதி சங்கமித்ரை பாட்டழகன் ஆகியோரை வாழ்த்திப் பேசினார். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வசந்தா பதிப்பகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் ஓவியக் கவிஞர் திருமதி. காவியா பாரதி மற்றும் அவரது குடும்பத்தினர், தமிழக அரசின் சிறந்த மொழிப் பெயர்ப்பாளர் விருது பெற்ற முனைவர். ராஜேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான வாசகர்கள் கலந்துக் கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் திருமதி. சங்கமித்ரை பாட்டழகன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். தேசிய கீதத்துடன் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.


அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரியில் புத்தகத் திருவிழா.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தளுகை கிளை நூலகத்தில்  நூல்களை ஆர்வத்தோடு வாசிக்கும் அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவியர்கள்
பொது நூலகத்துறை இயக்குநர் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய இளம் பகவத் இ.ஆ.ப. அவர்களை இன்று சென்னையில் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் கூறிய இனிய தருணம்
- த.இளங்கோ

நூலகத்துறையின்  பெருமைமிகு விழா        தமிழ்நாடு அரசின் முதல் உலக புத்தகத்திருவிழாவில் மதிப்பிற்குரிய இயக்குநர் அவர்கள் , முன்னால் இயக்குநர் அவர்கள்  ,  துணை இயக்குநர் அவர்கள் ,  உதவி இயக்குநர் அவர்கள் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் சிறப்பாக நடைபெற்று வரும் உலக புத்தக திருவிழாவில் .....
- கு.பிரம்மநாயகம்
 
11-1-2023 சென்னை ஆழ்வார்பேட்டை வட்டார நூலகத்தில் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிகள் இலக்கியம் காட்டும் ஆன்மீகம், கருத்தரங்கம் மற்றும் பொங்கல் பொங்கட்டும்- பொல்லாங்கு தீரட்டும் என்ற தலைப்பில் கவியரங்கம் கவி மாமணி சொ. பத்மநாபன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது 30 கவிஞர்கள் கவி மழை பொழிந்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை நூலகத்தில் சமத்துவப் பொங்கல் 
நூலகவியல் பயிற்சி

திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில்  நூலகவியல் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்கள் உதவி பேராசிரியர் முனைவர் பாத்திமா பீவி தலைமையில் தென்காசி வ உ சி வட்டார நூலகத்தில் நூலகவியல் தொழில் பயிற்சி எடுத்துக் கொண்டனர்
 கல்லூரியை சார்ந்த அப்சனாஷரின்  அல்சிபா ஏஞ்சலின் சாரல்  மகிரா பல்கீஸ்  ஷிபானா பாத்திமா  சுப்புலட்சுமி தாமரை செல்வி
 அப்துல் ஹமீத் பாலமுருகன் பாலசந்தர் மகேஷ் பொன்அந்தோணி ஜோசப்
 உமர் அலி அபிதீன் உள்ளிட்டோர் நூலக கோலன் பகுப்பு முறை தூவி தசம  பகுப்பு முறை நூலக நிர்வாக நடைமுறைகள் தினசரி நூலக நடைமுறைகள் உறுப்பினர் சேர்க்கை நூல்கள் சேர்க்கை நூல்கள் பகுப்பு நூல்கள் விலக்கம் நூல் வழங்குதல் காலகடப்பு கட்டணம் கணக்கிடுதல் 
பொருள் வாரியாக நூலக நூல்கள் அடுக்குதல் போட்டி தேர்வுக்கான பயிற்சி வழங்கி வருதல் இலவச தேர்வு மாதிரி தேர்வுகள் நடத்துதல் கணிப்பொறி மூலம்  நூலக சேவை வழங்கி வருவது  உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும்  பயிற்சி எடுத்துக் கொண்டனர்

 வட்டார நூலகர் பிரம நாயகம் கிளை நூலகர் சுந்தர் 
 ஜூலியா ராஜ செல்வி நிகமதூனிசா ஆகியோர்  நூலக விவரங்களை அளித்தனர் 
பயிற்சியில் மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் கண்காணிப்பாளர் சங்கரன் நூலக ஆய்வாளர் கணேசன் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி நூலகவியல் 
உதவி பேராசிரியர் முனைவர் பாத்திமா பீபி கலந்து கொண்டனர்.

விராலிமலை கிளை நூலகத்தில் சமதுவப் பொங்கல் 

நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய  செய்திகள் கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். 
கால தாமதமாக பெறப்பட்ட செய்திகளில் சில இந்த இடம்பெறவில்லை. அவை அடித்த இதழில் இடம்பெறும். 

மின்னஞ்சல்:  noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் :  8668192839.

இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.





Comments

  1. அருமை.. தொடரட்டும் தங்களது பணி...

    ReplyDelete
  2. Sir. Excellent, Library Department really get Proud. Thank you Sir. 🙏. N.MOHAN Librarian.

    ReplyDelete
  3. பல்வேறு மாவட்ட நூலகங்களில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது மேலும் இதே போல நமது துறையில் என்ன விதமான வளர்ச்சி பணிகள் நடைபெறுகின்றன என்பது குறித்து விவரங்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் குறிப்பாக கலைஞர் நூலகம் திறப்பு விழா ஊர் புற நூலகர் பதவு உயர்வு மற்றும் இலக்கிய படைப்புகள் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. இது போன்ற செய்திகள் நூலகர் களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

      Delete
  4. Well done sir 🤝💐

    ReplyDelete
  5. Comment எழுதுபவர்கள் தங்கள் பெயரை குறிப்பிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
  6. Ok Thank you sir

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 29

நூலகர் செய்திமடல் 30

நூலகர் செய்திமடல் 31