நூலகர் செய்திமடல் 10
ஆசிரியர் உரை: நூலக நண்பர்களுக்கு வணக்கம். நூலகர் செய்தி மடல் மின்னிதழை தொடர்ந்து வாசித்து வரும் நூலக நண்பர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 1). புதிய நிதி ஆண்டு தொடக்கி இருக்கிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் மாவட்ட நூலக அணைக்குழுக்களின் வரவு - செலவு அறிக்கை வெளியிடப்பட்டது. எந்தெந்த மாவட்டத்திற்கு, எந்தெந்த இனத்திற்கு, எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என்னும் விவரத்தை அனைத்து நூலகர்களும் தெரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு நிர்வாகத்தை வெளிப்படையாக நடத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. எங்கு நிர்வாகம் வெளிப்படையாக இருக்கிறதோ, அங்கு முறைகேடு நடக்க வாய்ப்பு இருக்காது. இந்த ஆண்டும் அது போன்ற அறிக்கை வெளியிடப்படும் என்று நாம் அனைவரும் எதிர்பார்கிறோம். 2). 500 நூலகங்களுக்கு இலவச wifi வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள் பலரும் இந்த வசதியை எதற்கு? எவ்வாறு? பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறோம். இலவச wifi மட்டுமா? இலவச wifi பயன்படுத்தி மின் இதழ்களை (e-magazines) வாசிக்க முடியுமா? அதற்கான சந்தா செலுத்தப்பட்டுள்ளதா? போன்ற விவரங்கள் தெரியவில்லை...