நூலகர் செய்திமடல் 10

ஆசிரியர் உரை:

நூலக நண்பர்களுக்கு வணக்கம்.

நூலகர் செய்தி மடல் மின்னிதழை தொடர்ந்து வாசித்து வரும் நூலக நண்பர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
1). புதிய நிதி ஆண்டு தொடக்கி இருக்கிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் மாவட்ட நூலக அணைக்குழுக்களின் வரவு - செலவு அறிக்கை வெளியிடப்பட்டது. எந்தெந்த மாவட்டத்திற்கு, எந்தெந்த இனத்திற்கு, எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என்னும் விவரத்தை அனைத்து நூலகர்களும் தெரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு நிர்வாகத்தை வெளிப்படையாக நடத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. எங்கு நிர்வாகம் வெளிப்படையாக இருக்கிறதோ, அங்கு முறைகேடு நடக்க வாய்ப்பு இருக்காது. இந்த ஆண்டும் அது போன்ற அறிக்கை வெளியிடப்படும் என்று நாம் அனைவரும் எதிர்பார்கிறோம்.  
2). 500 நூலகங்களுக்கு இலவச wifi வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள் பலரும் இந்த வசதியை எதற்கு? எவ்வாறு? பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறோம். இலவச wifi மட்டுமா? இலவச wifi பயன்படுத்தி மின் இதழ்களை (e-magazines) வாசிக்க முடியுமா? அதற்கான சந்தா செலுத்தப்பட்டுள்ளதா? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இது தொடர்பாக மாவட்ட நூலக அலுவலர்கள் எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என்று சொல்லப்படுகிறது. நமது கேள்விகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு பதில் வருகிறது.  இந்த நூலகங்களில் பணிபுரியும் நூலகர்களுக்கு கணினி பயிற்சி அளிப்பது அவசர அவசியம்.

2). இந்த நிதியாண்டில் உள்ளூர் முகவர் மூலம் என்னென்ன செய்தித்தாள்கள் நூலகங்களுக்கு வாங்க வேண்டும் என்னும் அறிவிப்பு இன்னும் சில மாவட்டங்களில் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
3) கடந்த ஆண்டு நிதிநிலையைக் காரணம் காட்டி நூலகங்களுக்கு வாங்கப்படும் செய்தித்தாள்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு நிதி நிலை ஓரளவு சீராயிருக்கிறது. தமிழக அரசு  சொத்து வரியை உயர்த்தி உள்ளதால், நூலக வரியும் அதிகரித்துள்ளது. அதனால், வாசகர் நலன் கருதி நூலகங்களுக்கு வாங்கப்படும் செய்தித்தாள்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் வாசகர்களின் எண்ணிக்கை உயரும்.
4). பல நூலகர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வேலை செய்கின்றனர். அவர்கள் தங்கள் சொத்த மாவட்டம் செல்ல சில மாதங்களுக்கு முன்பு கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்கப்பட்டது. அதனால் தகுதியுடையவர்கள் எந்த வித சிரமும் இல்லாமல் பணி மாறுதல் பெற்றனர். தற்பொழுது சில பணியிடங்கள் காலியாகி உள்ளன. தற்பொழுது கல்வியாண்டு முடியுறும் நிலையில் உள்ளது. காலியாக உள்ள நூலகர் பணியிடங்களுக்கு எப்பொழுது மாநில அளவில் கலந்தாய்வு நடத்தப்படும்? என்று நூலகர்கள் சிலர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
5). அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
6). இஸ்லாமிய நூலக நண்பர்களுக்கு ரம்ஜான் நல்வாழ்த்துகள்!
 

 நன்றி, மீண்டும் சந்திப்போம்!
சி.சரவணன், ஆசிரியர்,
நூலகர் செய்தி மடல். 

கடத்தூர் கிளை நூலகத்தில் இலவச வைஃபை திட்டம் தொடக்க விழா

கடத்தூர் கிளை நூலகத்தில் இலவச வைஃபை திட்டம் தொடக்க விழா மற்றும் கடத்தூர் கிளை நூலக இணையதளம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் சந்திரசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இலவச வைஃபை திட்டத்தை மாவட்ட நூலக அலுவலர் டி. மாதேஸ்வரி தொடங்கி வைத்து பேசும்போது,  "கடத்தூர் கிளை நூலகத்திற்கு அதிவேக பிராட்பேண்ட் இலவச வைஃபை வசதி வழங்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்குத் தேவையான கோப்புகளையும் புத்தகங்களையும் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
 கடத்தூர் கிளை நூலகத்திற்கு   www.kadathurlibrary.com என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள  இணையதளம் மூலம் அமேசான் கிண்டில்,  தேசிய மின் நூலகம், தமிழ் மின் நூலகம், மதுரைத் திட்டம் முதலான தளங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மின் நூல்களையும், Magzter தளத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பருவ இதழ்களையும் வாசிக்கலாம்.  
இவ்வாறு பல்வேறு வசதிகள் கொண்ட இந்த இணையதளத்தை வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
முன்னதாக நூலகர் சி. சரவணன் வரவேற்றார். முடிவில் இராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நூலகர் முருகன், சண்முகம், கணேசன், நெடுமிடல், கே.டி.முருகன், பொம்மிடி முருகேசன், மகாலிங்கம் வாழ்த்துரை வழங்கினர்.  நிகழ்ச்சியில் வாசகர்கள் திரளாக வந்து கொண்டனர்.
உலக சிறுவர் புத்தக தினம்

தென்காசி வ உ சி வட்டார நூலகத்தில் உலக சிறுவர் புத்தக தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் காலை  நூலகத்திற்கு வருகை புரிந்த இளம் வாசகர்கள்  சுடலை ராஜா  அன்புச்செழியன்  ஹர்ஷினி இசைபாலாஜி      ஆகியோருக்கு   புத்தகங்கள் , பேனா,  சாக்லேட்டுகள் பரிசுகளாக வழங்கி இளம் வயதினில் புத்தக வாசிப்பின் மேன்மை குறித்து எடுத்துரைத்து  அவர்களை  உற்சாகப்படுத்தி தொடர்ந்து நூலகம் வரவும் புத்தகங்கள் வாசிக்கவும்  வேண்டப்பட்டது.
வட்டார நூலகர் பிரம நாயகம்  கிளை நூலகர் சுந்தர் நூலகர்கள்  நிஹ்மதுனிஷா ஜூலிய ராஜ செல்வி வாசகர்வட்ட நிர்வாகிகள் சலீம் குழந்தைஜேசு முருகேசன் நூலக நண்பர்கள் திட்டத்தில் இன்று 8 உறுப்பினர்களை சேர்த்த நூலக நண்பர் பிரேமா மற்றும்  இனிய சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்..
செங்கோட்டை நூலகத்தில் மத்திய அரசின் SSC(MTS) இலவச மாதிரி தேர்வு

        செங்கோட்டை நூலகத்தில் வைத்து  செங்கோட்டை நூலக வாசகர் வட்டம் மற்றும் தென்காசி வெற்றி IASஅகாடமி விழுதுகள் அறக்கட்டளை இணைந்து மத்திய அரசின் 
SSC (MTS) தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு நடைபெற்றது. இதில் செங்கோட்டை  பகுதியைச் சேர்ந்த 36 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள் . வெற்றிய IASஅகாடமி இயக்குனர் திரு. அருணாசலம் அவர்கள் தேர்வை நடத்தி கொடுத்தார். விழுதுகள் சேகர் அவர்களும் வாசகவட்ட பொருளாளர் தண்டமிழ் தாசன் பா.சுதாகர் அவர்களும் தேர்வு பற்றி விளக்க உரையாற்றினார்கள். முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.
திருமதி சு பாப்பாத்தி பணிநிறைவு பாராட்டு விழா 
அன்பிற்கு பெரு மதிப்பிற்கு ரிய திருமதி சு பாப்பாத்தி மேடம் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் நேற்றைய தினம் தாங்கள் பழகிய அற்புத குணத்திற்கு கூடிய கூட்டம் மிக அருமை அனைவரும் மிக உணர்வுபூர்வமாக வாழ்த்திய செயல் அனைவரையும் பிரமிக்க வைத்தது இத்தனை ஆண்டு காலம் நூலகத்தில் தாங்கள் உழைத்த உழைப்பு அதனுடைய சிறப்பு நேற்று வெளிப்பட்டது அற்புதமான பணி நிறைவு அரசு பணி நிறைவு ஆனால் உங்களுக்காக பொதுப்பணி காத்திருக்கிறது நிச்சயம் தாங்கள் எண்ணியபடி பொது சேவையில் ஈடுபட வேண்டும் கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு மீண்டும் தங்களுடைய பணி தொடர வேண்டும் நிச்சயமாக அதிலும் தாங்கள் நட்சத்திரமாக ஜொலிப்பீர்கள் தங்களுடைய திறமை ஆர்வம் உழைப்பு தங்களுக்கு வெற்றியை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இது உறுதி இறைவன் அருளால் இன்னும் அதிகமாக தாங்கள் சாதிக்க வேண்டும் என்றும் அன்புடன் எஸ் அருள்ஜோதி கடலூர்.
ஈரோடு நவீன நூலகத்தில் கிராமப்புறங்களில் மின் நூலகங்கள் சேவை திட்டம் இலவச WIFI  துவக்க விழா மற்றும் நூலக நண்பன் துவக்க விழா
நவீன நூலகத்தில் கிராமப்புறங்களில் மின் நூலகங்கள் சேவை திட்டம் இலவச WIFI  துவக்க விழா மற்றும் நூலக நண்பன் துவக்க விழா 1.4.23 சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.  மாவட்ட நூலக அலுவலர் திரு ஆர் யுவராஜ் அவர்கள் தலைமையில் மற்றும் முதல் நிலை நூலகர் திரு. ரா. வேல்முருகன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
 நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் திருக்கோவலூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களில் இயங்கும் அனைத்து நூலகம் சார்பாக மாற்றுத்திறனாளிகள், முதியோர், இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில் வீடு தேடி சென்று புத்தகங்கள் வழங்கும் நூலக நண்பர்கள் திட்டம் திருக்கோவலூர் முழுநேர நூலகத்தில் இன்று புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட குழு தலைவர் பாவலர் சிங்கார. உதியன் தலைமை தாங்கினார்.
மணலூர்பேட்டை வாசகர் வட்ட குழு தலைவர் கு.ஐயாக்கண்ணு, பணி நிறைவு பெற்ற ராணுவ வீரர் கு.கல்யாண்குமார், வருவாய் ஆய்வாளர் சதிஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூலகர் இரா.வசந்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருக்கோவலூர் வருவாய் வட்டாட்சியர் கண்ணன் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடக்கி வைத்து முழுநேர கிளை நூலகம் திருக்கோவலூர் , கிளை நூலகம் மணலூர்பேட்டை , கிளை நூலகம் அரகண்டநல்லூர், கிளை நூலகம் சித்தலிங்கமடம், ஊர்ப்புற நூலகம். மேலந்தல். ஊர்ப்புற நூலகம் காங்கியனுார் , ஊர்ப்புற நூலகம் தேவரடியார்குப்பம் ஆகிய நூலகங்களைச் சேர்ந்த  63   தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை, பதிவேடுகள் மற்றும் நூலகப்பை ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நல்நூலகர் மு.அன்பழகன் தன்னார்வலர்களுக்கு நூலக நண்பர்கள் திட்டத்தின் நோக்கத்தையும் செயல்திட்டத்தைப் பற்றியும் விளக்கிப் பேசினார்.
கிராம நிர்வாக அலுவலர் பா.வேல்முருகன், அருட்கவிஞர் அருள்நாதன் தங்கராசு, கல்வியாளர் தமிழ்ச்செல்வன், கருப்புச்சட்டை ஆறுமுகம், தலைமையாசிரியர் தர்மராஜ் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.
நூலகத் தன்னார்வலர் ச.தேவி நன்றி கூறினார்.
நூலகர்கள் வி.தியாகராஜன், து.படவேட்டான், பணியாளர்கள் சு.சம்பத், கி.பாஸ்கரன், சந்தியா, வே.பாஸ்கரன், ஐ.பவானி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

'நூலக நண்பர்கள்' திட்டம்:
தமிழகம் முழுவதும் மாவட்ட மைய நூலகம், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் பகுதிநேர நூலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் நாளிதழ்கள் மற்றும் வரலாறு, கதை, கவிதை புத்தகங்கள், மத்திய-மாநில அரசுளின் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் இருக்கின்றன. இதனால் மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் நூலகத்துக்கு வருகின்றனர். அதேநேரம் மாற்றுத்திறனாளிகள், நூலகத்துக்கு வர இயலாத நிலையில் இருக்கும் முதியவர்கள், வீட்டு வேலையில் மூழ்கி கிடக்கும் பெண்கள் நூலகத்துக்கு வரமுடியாத நிலை இருக்கிறது.
இதனால் புத்தக வாசிப்பு ஆர்வம் இருந்தும் அவர்களால் நூலகத்துக்கு வந்து விருப்பமான புத்தகங்களை வாசிக்க முடியவில்லை.
இந்த குறையை போக்கும் வகையில் நூலக நண்பர்கள் திட்டம் தொடங்கப்படும் என சட்டசபை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் தன்னார்வலர்கள் நூலக நண்பர்களாக சேர்க்கப்படுகின்றனர். 
இந்த நூலக நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் 25 புத்தகங்கள் வழங்கப்படும்.

 *வீட்டுக்கு வரும் புத்தகம்* 
இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்களை தொடர்பு கொண்டு வீட்டுக்கு சென்று அவர்கள் விரும்பிய புத்தகங்களை வழங்குவார்கள்.
அதேபோல் நூலக நண்பர்களிடம் விரும்பிய புத்தகத்தை அவர்கள் கேட்டு பெறலாம்.
பின்னர் 15 நாட்கள் கழித்து நூலக நண்பர்கள் மீண்டும் வந்து புத்தகங்களை பெற்றுக்கொண்டு வேறு புத்தகத்தை வழங்குவார்கள். இதன்மூலம் நூலகத்துக்கு வர இயலாத நிலையில் இருப்போரின் வாசிப்பு ஏக்கம் தீரும். வீட்டில் பெரியவர்கள் புத்தகம் வாசிப்பதை பார்த்து, குழந்தைகளும் புத்கம் வாசிக்க தொடங்குவார்கள். அதேபோல் நூலகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் உயரும் எனும் அடிப்படையில் இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
போட்டித் தேர்வு பயிற்சி மையம்
முழு நேர கிளை நூலகம், இனாம் கரூர்.

இனாம் கரூர் (பெரிய குளத்துப்பாளையம்) கிளை நூலகத்தில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி சார்பில்  (05.04.2023)  போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி மாவட்ட தலைவர் திரு.பி.வடிவேல் அவர்கள் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் திரு. ஐ. ஜெரால்டு அவர்கள் தலைமை வகித்தார்.
மாவட்ட நூலக அலுவலர் திரு.செ.செ. சிவக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் ஐந்து இரும்பு நூல் அடுக்குகள், ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி, பீரோ, போட்டித் தேர்வு மாணவர்கள் தனித்தனியாக அமர்ந்து படிக்கும் வகையில் மேஜைகள் மற்றும் ரூபாய் 29,482 மதிப்பில் போட்டி தேர்வு நூல்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி செயலாளர் திரு.என். ஜெயக்குமார் நன்றி கூறினார்.
இனாம் கரூர் கிளை நூலகர் ம.மோகனசுந்தரம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்....🙏🏻

கம்பம் கிளை நூலக வளர்ச்சிக்காக கம்பம் நகரைச் சேர்ந்த பேராசிரியர். முனைவர் கா.கன்னையா Ph.D., வரலாற்றுத் துறைத் தலைவர் அவர்கள் ரூ.1000/- ஐ செலுத்தி புரவலராக இணைத்துக் கொண்டதற்கு கம்பம் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்
விராலிமலை கிளை நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தின்  இராசநாயக்கன்பட்டி தன்னார்வலர்கள் ரேகா அவர்கள் பள்ளி மாணவர்களுடன்‌ நூலகத்தை பார்வையிட்டு வாசிப்பின் அவசியதப்தை எடுத்துக்கூறி  நூலகள்  எடுத்து சென்றனர்....


தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை  மாவட்ட நூலக ஆணைக்குழு கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்க்கனவு (தமிழ்மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை) புத்தக கண்காட்சி.
இடம்:-நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி களியக்காவிளை.


வடக்கன்குளம் கிளை நூலகம் கூடுதல் கட்டடம் திறப்பு விழா 11_04_2023 செவ்வாய்க்கிழமை இன்று காலை 10 மணிக்கு திருநெல்வேலி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்  சா.ஞானதிரவியம் அவர்கள் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் வள்ளியூர் ஒன்றிய குழு துணை தலைவர்  S.வெங்கடேஸ் தன்ராஜ் மற்றும் வடக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜான் கென்னடி தலைமை தாங்கினார்கள். நிகழ்ச்சிக்கு 
திருநெல்வேலி மாவட்டம் நூலக அலுவலர் லெ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் மற்றும் நூலக ஆய்வாளர் கணேசன் மற்றும் தென்காசி வட்டார நூலகர் பிரம்ம நாயகம் மற்றும் பழவூர் கிளை நூலகர் B.திருக்குமரன் மற்றும் வடக்கன்குளம் கிளை நூலக வாசகர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.நிகழ்ச்சியை சிறப்பித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

11/04/2023 இன்று  க. மீனாட்சிசுந்தரம்  அவர்கள் பொதுச் செயலாளர் ட்விங்கிள் ஸடார் அடுக்ககம் மேற்கு தாம்பரம் கிளை நூலகத்தில் புரவலராக மற்றும் நூலக உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார் அண்ணாருக்கு நூலகத் துறை சார்பாகவும் நூலகத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் இங்கனம் ஆர்பி வெங்கடேசன் நூலகர்
Cloud funding campaign for Library and Community Development Centre (LCDC), Poigai

Who we are?
Poigai is a small and remote village located in the Tenkasi district of Tamil Nadu, India. There are five villages and six schools in Poigai Panchayat and the population is approximately 5000. Most people are engaged in agriculture for their livelihood. There is no library in the panchayat or the schools. People do not have the resources to subscribe to newspapers or magazines and hence they don’t have access to accurate and quality sources of information. There is no forum to guide them. Therefore, a Library and Community Development Centre (LCDC) in Poigai was started at Poigai village on 12th May 2022 by Dr. A.Hariharan, the Founder President of the Society for the Advancement of Library Science (SALIS) at a cost of Rs.10 lakhs with the technical guidance of SALIS. The monthly expenditure to maintain the library is about Rs.10,000 – 15,000.  The Library now has 1300 books on various subjects for all ages.
The library automated its services. Smart cards are given to the members to borrow books and avail of the services.
To know about the Library, please visit: https://poigailibrary.wordpress.com
The catalogue is available on the cloud for access @ http://107.21.126.203
‘Poigai Library App’ can be downloaded from the Google Play store to access the catalogue.

No fee Library:  There is no membership fee or deposit to become a member of the centre or borrow books or avail of any other services and there are also no overdue charges.

Our work and its impact

The LCDC provides information and library services to the community and conducts digital literacy programmes to bridge the digital divide, particularly for school students It also functions as a school library for students. The LCDC organizes regular skill development programmes for people of all ages to empower them and improve their standard of living.
 
How we will utilize these books

There are 5 schools in Poigai Panchayat and about 800- 900 children. They regularly visit the library to read and borrow books. We conduct programmes regularly -  storytelling, public speaking, essay writing, drawing, book reviews and summaries, etc, for students to motivate them to read and create awareness about the benefits of reading. With the funds from this campaign, we will get Tamil and English storybooks from Pratham Books for our community library. The Tamil storybooks will encourage the children to read more books in their mother tongue language and improve their communication skills and the English books will help them do better in academics and boost their self-confidence.
Thank you for your support in advance.
Please visit:

https://donateabook.org.in/product/village-library-in-pogai-tamil-nadu/?preview_id=91739.





"நீங்கள் ஒதுக்கப்படும்.
 இடங்களில்... நிமிர்ந்து
 நில்லுங்கள்"

"நீங்கள் புகழப்படும்....
 இடங்களில் அடக்கமாக
 இருங்கள்"

"நீங்கள் விமர்சிக்கப்படும்
 இடங்களில் மௌனமாக
 இருங்கள்"

"நீங்கள் நேசிக்கும் படும்
 இடங்களில் அன்புடன்...
 இருங்கள்"

"அன்புடன் வாசு"
நூலகர்கள் தங்கள் நூலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய  செய்திகள்,  கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு செய்திகள் போன்ற படைப்புக்களையும் எழுதி அனுப்பலாம். 
மின்னஞ்சல்:  noolagarseithi@gmail.com
வாட்ஸ் ஆப் :  8668192839.
இந்த இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.




Comments

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 29

நூலகர் செய்திமடல் 30

நூலகர் செய்திமடல் 31