Posts

நூலகர் செய்திமடல் 26

Image
    ஆசிரியர் உரை:  அனைவருக்கும் வணக்கம். மழை நீரில் நனைத்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் புத்தகங்களை இருப்பு நீக்கம் செய்ய வேண்டும்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.  வீடுகளில் மழை நீர் புகுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் நாசமாகியுள்ளன. இந்த பகுதிகளில் இருக்கும் நூலகங்களிலும் மழை நீர் புகுந்திருக்க வாய்ப்பு உள்ளது. புத்தகங்கள் நனைந்து நாசமாகி இருக்கலாம். இதை வெளியில் எப்படி சொல்வது என்று நூலகர்கள் தயங்க வேண்டாம். மழை நீரில் நனைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் புத்தகங்களின் பட்டியலை (புதிய புத்தகங்களாக இருந்தாலும்) மாவட்ட நூலக அலுவலருக்கு அனுப்பி இரும்பு நீக்கம் செய்யுங்கள்.   பழுதடைந்த தளவாடங்கள் இருப்பு நீக்கம் செய்ய வேண்டும்: பெரும்பாலான நூலகங்களில் பழுதடைந்த தளவாடங்கள் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கின்றன. இவற்றைப் பட்டியல் இட்டு, மாவட்ட நூலக அலுவலருக்கு அனுப்பி, இரும்பு நீக்கம் செய்ய நூலகர்கள் முயற்சி செய்யலாம். பழுதடைந்த தளவாடங்களுக்கு மாவட்ட நூலக அலுவலர...

நூலகர் செய்திமடல் 25

Image
  ஆசிரியர் உரை:  அனைவருக்கும் வணக்கம், நூலகர் செய்தி மடல் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. நூலகர் செய்தி மடல் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! நூலக வார விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நூலக வார விழாவும் குழந்தைகள் தின விழாவும் ஒன்றாக நடத்தப்பட்டு வந்தது. அந்த விழாவில்தான் நூலகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டு நூலக வார விழா தனியாக நடத்தி, நூலகர்களுக்கும் நூலகங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அதுவும் இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் பிறந்த ஊரான சீர்காழியில் விழா நடத்தியது பாராட்டுக்குரியது.    தகுதியுள்ள நூலகர்களுக்கும் தகுதியுள்ள நூலகங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் அவர்களுக்கு பாராட்டுகள்.  'ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நூலக வார விழாவில்,  மாவட்ட நூலக அலுவலர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் நூலகர்களைப் பாராட்டி சிறப்பு செய்தார்' என்னும் செய்தி வந்துள்ளது. இது பாராட்ட வேண்டிய ஒன்று. மற்ற மாவட்ட நூலக அலுவலர்களும் இது போன்று, நூலக வார விழாவில் சிறப்பாக பணிபுரியும்...