Posts

நூலகர் செய்திமடல் 28

Image
    ஆசிரியர் உரை:  அனைவருக்கும் வணக்கம்,       நூலகர்களுக்கான பணி மூப்புப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கை வர உள்ளது. அதற்குள்ளாக நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இல்லை என்றால் அடுத்து பல மாதங்கள் காத்துக் கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.  நூலகர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்க இயக்குநர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.  அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! மீண்டும் சந்திப்போம்! -  சி.சரவணன்,  ஆசிரியர்,  நூலகர் செய்திமடல்  வேப்பிலான்குளம் ஊர்ப்புற  நூலகத்திற்கு மாண்புமிகு சபாநாயகர் திரு மு.அப்பாவு அவர்களால் ரூபாய் 7 லட்சம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்டு, கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை மாண்புமிகு சபாநாயகர், நெல் லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திரு வி எஸ் ஆர் ஜெகதீஷ் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் திரு முத்துக்குமார் தலைமையில் திறந்து வைத்தார். மேலும், நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டித் தருவதற்கும் உறுதி அளித்துள்ளார். நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட...

நூலகர் செய்திமடல் 27

Image
ஆசிரியர் உரை: அனைவருக்கும் வணக்கம், பொது நூலக இயக்குநராக திரு. இளம் பகவத் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு நூலகத் துறையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாகத்தின் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணி மாறுதல் கலந்தாய்வு காலதாமதமாக நடத்தப்பட்டு இருந்தாலும் முறையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு பணி மாறுதல் வழங்கப்பட்டது பாராட்டுக்குரியது. ஊர்ப்புற நூலகர் முதல் முதல்நிலை நூலகர் வரையிலான பணி இடங்களுக்கான பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நூலகர்களுக்கு அடுத்தடுத்து பதவி உயர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.   புத்தகத் திருவிழா:  மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழா நடத்துவதற்காக நிதி நூலகத்துறை மூலம் விடுவிக்கப் படுவதால் புத்தகத் திருவிழாவில் நூலகர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து எழுதி வந்தேன். கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் நூலகர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது.  தருமபுரி மாவட்டம் இதற்கு முன்னுதாரணமாக இருந்தது. மாவட்ட நூலக அலுவலர்களுக்கும் நூலகர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித...