நூலகர் செய்திமடல் 27

ஆசிரியர் உரை:
அனைவருக்கும் வணக்கம்,
பொது நூலக இயக்குநராக திரு. இளம் பகவத் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு நூலகத் துறையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாகத்தின் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணி மாறுதல் கலந்தாய்வு காலதாமதமாக நடத்தப்பட்டு இருந்தாலும் முறையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு பணி மாறுதல் வழங்கப்பட்டது பாராட்டுக்குரியது.
ஊர்ப்புற நூலகர் முதல் முதல்நிலை நூலகர் வரையிலான பணி இடங்களுக்கான பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நூலகர்களுக்கு அடுத்தடுத்து பதவி உயர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். 
புத்தகத் திருவிழா: மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழா நடத்துவதற்காக நிதி நூலகத்துறை மூலம் விடுவிக்கப் படுவதால் புத்தகத் திருவிழாவில் நூலகர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து எழுதி வந்தேன். கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் நூலகர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது.  தருமபுரி மாவட்டம் இதற்கு முன்னுதாரணமாக இருந்தது. மாவட்ட நூலக அலுவலர்களுக்கும் நூலகர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலக்கிய திருவிழா: கடந்த ஆண்டு மண்டல அளவில் இலக்கிய திருவிழாக்கள் நடை பெறுகின்றன. இந்த விழாக்களில், அந்த மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட நூலக அலுவலர்கள் / நூலகர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை. உதாரணமாக, கோவையில் நடைபெற்ற சிறுவாணி இலக்கியத் திருவிழாவில் கலந்து கொள்ள தருமபுரி மாவட்ட நூலகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 
இந்த ஆண்டு மண்டல அளவில் என்பதற்கு பதிலாக, மாவட்ட அளவில் இலக்கிய திருவிழாக்கள் நடத்த பொது நூலகத்துறை இயக்குநர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டு, கல்வித்துறை மானியக் கோரிக்கை நிதி ஒதுக்கீட்டில் நூலகர்களுக்கு பயிற்சி வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் வழக்கமான பயிற்சி அளிப்பதைத் தவிர்த்து, நூலகர்களுக்கு கணினி பயிற்சி அளிக்க பொது நூலகத்துறை இயக்குநர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 
நூலகர்களுக்கு கணினி பயிற்சி:   அனைத்து கிளை நூலகங்களுக்கும் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. பல நூலகங்களில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணைய வசதி எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவடைய நூலகர்களுக்கு அடிப்படைக் கணினி பயிற்சி வழங்குவது அவசியம். 
கடந்த ஆண்டு நூலகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு அதைவிட சிறந்த ஆண்டாக அமையும் என்கின்ற அறிகுறிகள் தெரிகின்றன. எல்லாம் நல்லதே நடக்கும் என்று நினைக்கிறேன்.
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்!
- சி.சரவணன், ஆசிரியர், 

நூலகர் செய்திமடல்

தென்காசி மாவட்ட புத்தக திருவிழாவினை நூலக இணை இயக்குனர் அமுதவல்லி அவர்கள் பார்வையிட்டார்கள்.
தென்காசி மாவட்டத்தில் 2வது பொதிகை புத்தகத் திருவிழா  சங்கரன்கோவில் நகரில் நடைபெற்று வருகிறது 50 புத்தக அரங்குகள் 10 அரசு அலுவலக அரங்குகள் சுய உதவிக் குழுவினரின் கைவினைப் பொருட்கள் உணவு திருவிழா புகைப்பட கண்காட்சி புகைப்பட தனித்திறன் போட்டி இல்லம் தேடி கல்வி பாடநூல் கழகம் உள்ளிட்ட  அரங்குகளில் புத்தகத் திருவிழா 24 .12 .2023 தொடங்கி நடைபெற்று வருகிறது ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் புத்தக கண்காட்சியினை  கண்டும் புத்தகங்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.  பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி கதை எழுதும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன முன்னணி பட்டிமன்ற பேச்சாளர்களின் பட்டிமன்ற உரை இலக்கிய உரை எழுத்தாளர்களின் இலக்கிய உரை  உள்ளிட்டவையும் வில்லிசை, தமிழிசை, நாடகம், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
 பொது நூலக இயக்கத்தின் இணை இயக்குனர்  முனைவர் திருமதி அமுதவல்லி அவர்கள் இன்று புத்தக கண்காட்சி நடைபெறும் சங்கரன்கோவில கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தக கண்கட்சியினை பார்வையிட்டு பள்ளி மாணவர்களுடன் உரையாடி இல்லம்தேடி கல்வி அரங்கினில் மாணவர் செல்வங்களின் திறமைகளை  உற்சாகப்படுத்தி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார்கள். இன்னும் அதிக அளவில் கிராம மக்களுக்கு புத்தக கண்காட்சி செய்தியை கொண்டு சென்று அதிக அளவில் புத்தக விற்பனையை அதிகரிப்பதற்காக ஆலோசனைகளை   நூலகத்துறை  அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டினார்கள் .மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் வட்டாச்சியர் பாபு ஆய்வாளர் சண்முகசுந்தரம் முதல்நிலை நூலகர் முனியப்பன்  நூலகர்கள் பிரமநாயகம் முருகன் வட்டார கல்வி அலுவலர் ராமச்சந்திரன் சண்முகவேல் சிவக்குமார் ஜெய்லானி வெற்றிவேலன் ரவிச்சந்திரன் திருநாவுக்கரசி அன்னாள் முத்துக்குமார் சன்முகேஸ்வரன் பாலசுப்ரமணியம் திமுத்துலட்சுமி அய்யனார் மாரியப்பன்  முத்துலட்சுமி ராமலட்சுமி சரவணன்   தமிழாசிரியர் சங்கர் ராம் உடற்கல்வி இயக்குனர் நாராயணன் ஓவியர் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.




 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நூலகத்தில் இரண்டாம் நிலை நூலகராக பணியாற்றி 31.12.2023 அன்று  பணி நிறைவு பெற்ற திரு.மனோகரன் அவர்கள் பல்லாண்டு நலமுடனும் வளமுடன்  வாழ வாழ்த்தும் மொ. பாண்டியன், செந்தில் குமார் மற்றும் நூலக நண்பர்கள்.
சாதி வாரி கணக்கெடுப்பு – மக்களை முட்டாள் ஆக்கும் வேலையா?

-    நூலகர் சி. சரவணன்.

    பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, முடிவுகளை வெளியிட்டார் அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார். இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தப் புள்ளி விவரங்களின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36.01 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.12 சதவீதமும், பட்டியல் இனத்தினர்  19.65 சதவீதமும்,  இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 15.52 சதவீதமும், பட்டியல் பழங்குடியின மக்கள் 1.68 சதவீதமும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

    இந்த கணக்கைப் பார்த்தால், பழைய கணக்கின் சதவிகிதம் சில மாறி இருக்கிறது அவ்வளவுதான். இந்த சதவிகிதத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடப் போவதாக கூறுகிறார் நிதிஷ்குமார்.
  
  பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ், நிதீஷ்குமார் ஆகியோர் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக பிகாரில் ஆட்சி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  இந்த 33 ஆண்டுகளில் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை லாலுவும் நிதிஷ் குமாரும் ஏன் மேம்படுத்த முடியவில்லை.
 
 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலன் என்று தங்களை அடையாளப் படுத்திகொண்டு, அவர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் வாக்குகளைப் பெற்று பதவியில் சுகமாக இருப்பதுதான் இவர்கள் வேலை. இப்பொழுது நிதிஷுக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது.

 இந்த மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு லாலுவும், நிதிஷும் என்ன செய்தார்கள்? அவர்கள் வேலைவாய்ப்புக்கு ஏதாவது செய்தார்களா?
  
  தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான பிகார் மாநில பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கூலி வேலையாட்களாக இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான பிகார் மாநில பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கூலி வேலையாட்களாக வேலை செய்கிறார்கள்.
  
   நிதிஷ் குமாரைத் தொடர்ந்து, பல மாநில அரசியல்வாதிகளும் மக்களை முட்டாள்களாக ஆக்கும் வேலையை செய்து, பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அதுதான் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை என்னும் மாயை.

    1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது. 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவில் 1,646 சாதிகள் இருந்ததாக வகைப்படுத்தப்பட்டது. 1941ல் எடுத்த கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 4,147ஆக உயர்ந்தது.
 
   1951ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தபோதுசாதி வாரியாகக் கணக்கெடுப்புத் தேவையில்லை என டாக்டர் பி.ஆர்.  அம்பேத்கர் கூறியது உண்மை என்றாலும்அந்தக் காலத்தில் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதால்அவர்களைக் கணக்கெடுக்கத் தேவையில்லாமல் இருந்தது; ஆனால், மண்டல் கமிஷன் பரிந்துரைக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அவர்களையும் கணக்கெடுப்பதே சரி என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

  சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை நீண்டகாலமாக வைத்து போராடி வருபவர் டாக்டர் ராமதாஸ்.  

    சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதி அடைய முடியும், இது நமது உரிமை என்கிறார் கி.வீரமணி.

    ஜாதி ரீதியான கணக்கெடுப்பின் மூலமே ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முடியும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். 

இவையெல்லாம் அரசியல் பார்வை. இதை சமூகப் பார்வையில் பார்க்க வேண்டும்.
அரசியல் பார்வை வேறு. சமூகப் பார்வை வேறு.
அரசியல்வாதிகள் போடும் கணக்கு - அரசியல் பார்வை. அது ஓட்டுக் கணக்கு.
சமூக சிந்தனையாளர்கள் சிந்திப்பது, சமூகப் பார்வை. அது சமூக முன்னேற்றப் பார்வை.

சமூகப் பார்வையில் பார்த்தல், சாதிவாரிக் கணக்கெடுப்பு, சமூக நீதி, இடஒதுக்கீடு என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை.

இன்றைக்கு தமிழகத்தில் 6 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 1.25 கோடி இளைஞர்கள் வேலைவாப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்கு காத்துக் கொண்டு இருக்கின்றனர். லட்சகணக்கான இளைஞர்கள் நூலகங்களிலும், மரத்தடியிலும், ரயில் நிலையங்களிலும், பயிற்சி மையங்களிலும் பெரும் கனவோடு போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான ஆள் எடுக்கும் எண்ணிக்கை வெறும் 3772.  4ஆம் நிலை வந்தால் சுமார் 6 ஆயிரம் வரலாம்.  

தமிழகத்தில் ஓர் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்குக்கூட வேலை கொடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்து விட்ட நிலையில், சாதி வாரிக் கணக்கெடுத்து என்ன பயன்? தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான சாதிகள் இருக்கின்றன. பல சாதிகளுக்கு ஒரு அரசு வேலை கூட கிடைக்கப் போவதில்லை. இதுதான் சமூக நீதியா?

இது ஒருபுறமிருக்க, மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி, சிறப்பு ஆசிரியர்கள், கௌருவ விரிவுரையாளர்கள் என்று அரசு அலுவலகங்களில் அத்துக்கூலியாக வேலை செய்பவர்கள் இடஒதுக்கீடு முறையிலா நியமிக்கப் படுகின்றனர்?

அரசு வேலைவாய்ப்புக்கான எல்லாக் கதவுகளையும் அடைத்துவிட்டு, சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு, சமூக நீதி என்று பேசுவது எல்லாம் சாமானிய மக்களை முட்டாள்களாக ஆக்கும் வேலை.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பட்டியல் பழங்குடியின மக்களுக்கு சமூக நீதி கொடுக்க வேண்டும் என்றால், ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீட்டு முறையில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் அரசுப் பணியிடங்களையாவது நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் சமூக நீதி.

சாதிவாரி கணக்கெடுப்பை பிறகு பார்ப்போம்.

தென்காசி மாவட்ட புத்தக திருவிழாவினை நூலக இணை இயக்குனர் அமுதவல்லி அவர்கள் பார்வையிட்டார்கள்

 தென்காசி மாவட்டத்தில் 2வது பொதிகை புத்தகத் திருவிழா  சங்கரன்கோவில் நகரில் நடைபெற்று வருகிறது 50 புத்தக அரங்குகள் 10 அரசு அலுவலக அரங்குகள் சுய உதவிக் குழுவினரின் கைவினைப் பொருட்கள் உணவு திருவிழா புகைப்பட கண்காட்சி புகைப்பட தனித்திறன் போட்டி இல்லம் தேடி கல்வி பாடநூல் கழகம் உள்ளிட்ட  அரங்குகளில் புத்தகத் திருவிழா 24 .12 .2023 தொடங்கி நடைபெற்று வருகிறது ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் புத்தக கண்காட்சியினை  கண்டும் புத்தகங்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.  பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி கதை எழுதும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன முன்னணி பட்டிமன்ற பேச்சாளர்களின் பட்டிமன்ற உரை இலக்கிய உரை எழுத்தாளர்களின் இலக்கிய உரை  உள்ளிட்டவையும் வில்லிசை, தமிழிசை, நாடகம், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
 பொது நூலக இயக்கத்தின் இணை இயக்குனர்  முனைவர் திருமதி அமுதவல்லி அவர்கள் இன்று புத்தக கண்காட்சி நடைபெறும் சங்கரன்கோவில கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தக கண்கட்சியினை பார்வையிட்டு பள்ளி மாணவர்களுடன் உரையாடி இல்லம்தேடி கல்வி அரங்கினில் மாணவர் செல்வங்களின் திறமைகளை  உற்சாகப்படுத்தி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார்கள். இன்னும் அதிக அளவில் கிராம மக்களுக்கு புத்தக கண்காட்சி செய்தியை கொண்டு சென்று அதிக அளவில் புத்தக விற்பனையை அதிகரிப்பதற்காக ஆலோசனைகளை   நூலகத்துறை  அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டினார்கள் .மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் வட்டாச்சியர் பாபு ஆய்வாளர் சண்முகசுந்தரம் முதல்நிலை நூலகர் முனியப்பன்  நூலகர்கள் பிரமநாயகம் முருகன் வட்டார கல்வி அலுவலர் ராமச்சந்திரன் சண்முகவேல் சிவக்குமார் ஜெய்லானி வெற்றிவேலன் ரவிச்சந்திரன் திருநாவுக்கரசி அன்னாள் முத்துக்குமார் சன்முகேஸ்வரன் பாலசுப்ரமணியம் திமுத்துலட்சுமி அய்யனார் மாரியப்பன்  முத்துலட்சுமி ராமலட்சுமி சரவணன்   தமிழாசிரியர் சங்கர் ராம் உடற்கல்வி இயக்குனர் நாராயணன் ஓவியர் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 புத்தாண்டை புத்தகங்களுடன் கொண்டாடும் வகையில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் கம்பம் நூலக வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி கம்பம் அரசமரம்  சிக்னல் அருகில் 31.12.2023 அன்று காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. 
    அதிரடி தள்ளுபடி 30./.   எப்பொழுதும் போல் இப்பொழுதும் புத்தகத் திருவிழா எப்பொழுதும் போல் இப்பொழுதும் வருகை தந்து விழாவை மேன்மைபடுத்துங்கள்.!!!
 புத்தகங்களோடு புத்தாண்டு விடியட்டும் புத்துணர்வெங்கும் பரவட்டும். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.    

 புத்தாண்டை புத்தகங்களுடன் கொண்டாடும் வகையில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் கம்பம் நூலக வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய  புத்தகக் கண்காட்சி கம்பம் அரசமரம்  சிக்னல் அருகில் 31.12.2023 அன்று காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது.                                        
   -  நூலக வாசகர் வட்டம், கம்பம்.

IFHRMS க்கு மொபைல் ஆப்:
    
தற்பொழுது 2.0 களஞ்சியத்திற்கு இன்று மொபைல் ஆப் launch செய்யப்பட்டுள்ளது.

இதில் என்ன சிறப்பம்சம் என்றால் நிறைய பேர் தன்னுடைய individual employee id log in செய்வது இல்லை அதற்கு மாற்றாக தற்பொழுது இந்த ஆப் வந்துள்ளது என்று தோன்றுகிறது.

App install செய்தவுடன் அவர்களுடைய employee number மற்றும் மொபைல் எண் கொடுத்து OTP அவர்களுடைய மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்ணை கொடுக்கும் பொழுது PIN reset என்பதில் நான்கு இலக்க எண்ணாக ஏதாவது 4 digit கொடுத்து உள்ளே செல்லும் பொழுது உள்ளே என்னவெல்லாம் இருக்கிறது என்றால்.

1. Leave entry
1.1 surrender leave
1.2 el and uel
2. ⁠pay slip download
3. ⁠pf initiation
4. ⁠advance initiation
5. ⁠Transfer joining entry
6. ⁠reports எல் ESR மற்றும் paydrawn 
7. ⁠pre retirement..pension proposal
8. ⁠others..
8.1 Relinguishment entry
8.2 Additional charge allowance
8.3 Nhis updation
8.4 Nhis initiation
9. Echallan
10. ⁠contact us
11. ⁠feed back
போன்றவை உள்ளது இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இனிவரும் காலங்களில் நாம் விடுப்புகள் மற்றும் ஏனைய grievance அனைத்தும் ஆப் மூலமாக அப்ளை செய்யப்படும் பொழுது நேரடியாக initiator சென்று விடும்.

மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றங்களை வரவேற்போம்

சங்கரன்கோவில் நடைபெற்று வரும் இரண்டாவது  பொதிகை புத்தகக் கண்காட்சி மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் கவிஞர் கலா பிரியா ,இலக்கிய பேச்சாளர் ஹாமீம் முஸ்தபா, பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தம், இவர்களுடன் நானும்  கலந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட கல்வி அலுவலர் கலந்துக்கொண்டு சிறப்பித்த தேசிய நூலக வார விழா காட்சிகள்.

தேனி மாவட்டம் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக தமிழ் ஆட்சிமொழி சட்டம் வார விழா பெரியகுளம் தென்கரை நூற்றாண்டு நூலகத்தில் இலக்கிய அமைப்புகள் மற்றும் வாசகர்கள் வட்டத்தினர் முன்னிலையில்  நடைபெற்றது.  நல்நூலகர் விசுவாம் அனைவரையும் வரவேற்றார். இளங்கோ உதவி இயக்குனர் தமிழ் வளர்ச்சி துறை தலைமை எற்றார். தமிழ் ஆட்சிமொழி திட்ட விளக்கவுரை இளங்குமரன் நிறுவனர் வையை தமிழ் சங்கம் தேனி  மற்றும் முனைவர்  பத்மினிபாலா மகளிர் வாசகர் வட்டம் தலைவர் நிகழ்த்தினர். நூலக ஆர்வலர் அன்புக்கரசன், வழக்கறிஞர் மணிகார்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழின் சிறப்பு - தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கவுன்சிலர் தேவராஜ், நேசம் முருகன், திராவிட மணி, தமிழ்செம்மல் சீரூடையான், எழுததாளர் யாழ்தன்விகா, நாகநந்தினி, தமிழ் வளர்ச்சி துறை உதவியாளர்கள், போட்டித் தேர்வு மாணவர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர். வணிக நிறுவனங்களின் பெயர் தமிழில் வைத்திட விழிப்புணர்வு பிரச்சாரமும் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நல்நூலகர் சவடமுத்து நன்றி தெரிவித்தார்.
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது?

சென்னையிலோ, டில்லியிலோ,  கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை.
#விருத்தாசலத்ததில்தான் இருக்கிறது...
கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது.
தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் 
புலவர் பல்லடம் #மாணிக்கம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.
இந்த நூலகத்தில் மிகப் பழமையான பல நூல்கள் உள்ளன. 
இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரைப் பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு.
திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன. 
கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.
நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள்,  சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.
தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது...
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்......
நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும்  கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார்.
இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.
பல்லடம் மாணிக்கம் அவர்கள், நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார்.  24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.
தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார். 
பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன....
எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காப்பகம் தான்.

பகிர்வு....
Salam Basha
சிறுகளத்தூர் ஊர்ப்புற நூலகத்தில்  வீ.தர்மராஜன் அவர்கள்  ₹1000/_ செலுத்தி புதிய புரவலராக இணைந்துக் கொண்டார்.
சென்னை நாராயணா ஹெர்பல் & ஆர்கானிக் மையம் க.நடராஜன்  மணலூர்பேட்டை நூலகத்தின் ஆரம்பகால வாசகர் ஆவார். இவர்  இந்நூலகத்திற்கு வருகை தந்து,  வாசகர் வட்டக் குழுத் தலைவர் கு.ஐயாக்கண்ணு, உதவி வேளாண்மை அலுவலர் ம.வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், நூலகர் மு.அன்பழகன் அவர்களிடம் ரூபாய் ஆயிரம் செலுத்தி 112 ஆவது நூலகப் புரவலராக இணைந்தார். மேலும் வாசகர்களின் வாசிப்பிற்காக மருத்துவம், ஆன்மீகம் போன்ற 20 நூல்களையும் நன்கொடையாக வழங்கினார்.
திருச்சி மாவட்டம் ஏழூர்ப்பட்டி கிளை நூலகத்தில்  16.12.2023 அன்று மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்சி மற்றும் விடுகதை சொல்லுதல்,   வினாடி வினா ஆகிய நிகழ்வுகளை நூலகர் பொ. ம. அகிலா நடத்தினார்.

M.Phil. படித்தால் அதற்கு அங்கீகாரம் இல்லை!

எம்.பில் படிப்பை முடித்தவர்கள் கல்லூரியில் பாடம் நடத்தத் தகுதி உடையவர்களாக முன்பு பார்க்கப்பட்டு வந்தது. எனவே, பெரும்பாலான மாணவர்கள் இளநிலை, முதுநிலை படிப்பை முடித்த பலரும் அடுத்து தொடர நினைப்பது எம்.பில் படிப்பைதான். 

சென்ற ஆண்டு எம்.பில் படிப்பு முழுவதுமாக நீக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்தது.

கற்பித்தல் பணிக்கு எம்.பில் படிப்பு தகுதியானது இல்லை, எம்.பில் படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாகக் குறிப்பிட முடியாதென இந்த கல்வியாண்டில் (2022-23 ) இருந்து எம்.பில் படிப்பு முழுவதுமாக  நீக்கப்படுவதாக  பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்தது. 

இளநிலை, முதுநிலை படிப்பு படித்து அதன் பிறகு எம்.பில் படிப்பை மாணவர்கள் படித்து வந்த நிலையில், இனி வரும் கல்வியாண்டில் இருந்து எம்.பில் படிப்பு முழுவதுமாக நீக்கப்படும் என அறிவித்தது. இனி பிஹெச்டி படிப்பதற்கு எம்.பில் தகுதியாகப் பார்க்கப்படாது. 

மேலும் ஏற்கெனவே எம்.பில் படிப்பில் சேர்ந்து படிப்பவர்கள் தொடர்ந்து  படிக்கலாம் எனவும், அதேபோல் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த எம்.பில் பட்டங்கள் செல்லும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. 

ஆனால் நாட்டில் உள்ள சில பல்கலைகழகங்கள் தொடர்ந்து M.Phil. படிப்பை வழங்கி வருகின்றனர். இவர்களுக்கும் இந்த படிப்பில் இந்த கல்வியாண்டில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு UGC எச்சரிக்கை விடுவித்துள்ளது. 

M.Phil படிப்புற்கு அங்கீகாரம் இல்லை. இந்த படிப்பை இனி படிப்பதால் எந்த பயனும் இல்லை.

செங்கோட்டை நூலகத்தில் தேசிய திறனாய்வு தேர்வுக்கான பயிற்சி
செங்கோட்டை வட்டார பகுதியிலிருந்து பயிற்சிக்கு  சுமார் 125 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.  ஐந்தாவது நாளாக ஆகாஷ் அகடாமி ஆசிரியை திருமதி வேல்கனி அவர்கள் பயிற்சி எடுக்கிறார்.
ஜாக்டோ ஜயோ கோட்டை நோக்கி பேரணி 


ஜாக்டோ ஜயோ கோட்டை நோக்கி பேரணி - கைது செய்யப்பட்டவர்கள் ராஜரஜரத்தினம்  ஸ்டேடியத்தில் தங்கவைக்கப்பட்டனர்.





தொடர்ந்து நிகழ்சிகள் நடத்தி வரும் TAMILNADU LIBRARIANS குழு நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் !


கன்னங்குறிச்சி கிளை நூலகத்தில் 56வது தேசிய நூலக வார விழா  மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை வாசகர் வட்டம் தலைவர் திரு. p. குமரேசன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். கிளை நூலகத்தின் நூலகர் ச.மணிவண்ணன் நூலகத்தின் பயன்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் திரு. தமிழரசன், தொழில் அதிபர் திரு. ராஜா, முன்னாள் வாசகர் வட்டத்தலைவர் திரு. செல்வம், சமூக ஆர்வலர் பூமாலைமுருகன், யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கன்னங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 28 மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள், புத்தகங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் வாசகர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி-மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  இவ்விழாவில் நல்நூலகர் ச. மணிவண்ணன் நன்றி தெரிவித்தார்.



Comments

  1. TAMILNADU LIBRARIANS YOUTUBE CHANNEL இதுவரை 185 Webinar நடத்தி உள்ளது. நமது நூலகர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் சென்று SUBSCRIBE செய்து எங்களை ஊக்கப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    *TAMILNADU LIBRARIANS YOUTUBE CHANNEL - SUBSCRIBE TO MEET US AGAIN:* https://youtube.com/@TNL945

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் சார்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

நூலகர் செய்திமடல் 29

நூலகர் செய்திமடல் 30

நூலகர் செய்திமடல் 31